ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளை இரட்டை இனிப்பாக்குவது சென்னைப் புத்தகக் காட்சி. இந்த ஆண்டு 40-வது சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்துள்ள ஏராளமான சிறுவர்கள் நூல்களில் சிலவற்றின் தித்திக்கும் அறிமுகம்...

காலப் பயணிகள் - விழியன் (விலை: ரூ35/-)

நான்கு சிறுவர்கள் காலச் சக்கரத்தின் வழியே வெவ்வெறு காலகட்டங்களுக்கு செல்கிறார்கள். அங்கே சந்திக்கும் நபர்கள், நடக்கும் திடீர் திருப்பங்கள் என உங்களையும் விறுவிறுப்பான சக்கரத்துக்குள் இழுக்கும் கலக்கல் கதை.

பூதம் தூக்கிட்டுப்போன தங்கச்சி - நீதிமணி (விலை: ரூ95/-)

பூதம், தேவதை, குட்டி மனுஷன், பறக்கும் குதிரை என நம் பாட்டிகள் சொன்ன கதைகள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நினைவை விட்டு அகலாது அல்லவா? அப்படி ஊரில் உள்ள பல பாட்டிகள் சொன்ன கதைகளின் தொகுப்பு. படிக்கப் படிக்க ஆர்வம் தூண்டும் எழுத்து நடை. பக்கத்துக்குப் பக்கம் அழகான வண்ண ஓவியங்கள் சூப்பரோ சூப்பர்.

- புக் ஃபார் சில்ட்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

உலகின் மிகச்சிறிய தவளை - எஸ்.ராமகிருஷ்ணன் (விலை: ரூ 40/-)

அமெரிக்க கார் கம்பெனி ஒன்று மாநகரில் உள்ள ஏரி ஒன்றை விலைக்கு வாங்கி மூடிவிட்டு, அங்கே தொழிற்சாலையை உருவாக்க முனைகிறது. அந்த ஏரியைக் காப்பாற்ற தவளை ஒன்று போராட்டக் களத்தில் குதிக்கிறது. தன்னுடைய போராட்டத்துக்கு யாரையெல்லாம் இணைத்துக்கொண்டு, எங்கே எல்லாம் செல்கிறது என்பதைச் சொல்லும் கதை. சுற்றுச்சூழல் பிரச்னைக்கு எதிராக ஒலிக்கும் தவளையின் குரல், நம் மனசாட்சியைக் கேள்வி கேட்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வாசிக்க வேண்டிய கதை.

பூனையின் மனைவி - எஸ்.ராமகிருஷ்ணன் (விலை: ரூ 35/-)

ஒரு பூனையும் கோழியும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும்? இந்தச் சுவாரஸ்யமான கற்பனையை தனது எழுத்து வரிகளில் உயிர்பெறச் செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். கல்யாணம் மட்டுமா ஆகுது? பிறகு, இருவருக்குள் சண்டையும் வருது என, சிரிக்க சிரிக்க படிக்கலாம்.

- டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை-78.

பிரியமுடன் பிக்காஸோ - கொ.மா.கோ.இளங்கோ (விலை: ரூ 65/-)

உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ. அவர் பிரான்ஸ் நாட்டின் வல்லோரிஸ் நகரில் வசித்தபோது, சில்வெட் எனும் சிறுமியைச் சந்திக்கிறார். அவளுடைய ஓவியத் திறமையைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார். அவர்களுக்குள் நடந்த சந்திப்பும், பிக்காஸோ சிறுவர்கள் மீது காட்டிய அன்புமே இந்த நூல்.

இளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள் - ரொமிலா தாப்பர் (விலை: ரூ 80/-)

கதைகளுக்கு கால்கள் கிடையாது. ஓர் ஊரில் சொல்லப்படும் கதை, வேறு வடிவில் வேறு விதத்தில் மற்றொரு ஊரில் மாறிவிடும். இந்தியப் புராண இதிகாசங்கள், பழங்குடி, சரித்திர மற்றும் மந்திர கதைகளின் தொகுப்பு. மொழிபெயர்ப்பு: வெ.ஜீவானந்தம்.

- என்.சி.பி.ஹெச் வெளியீடு, Fl 41-B, சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை-58.

விரால் மீனின் சாகசப் பயணம் - உதயசங்கர் (விலை: ரூ 140/-)

ஒரு விரால் மீன், தன் வீட்டைத் தேடுவதாக ஒரு சிறுவனிடம் சொல்கிறது. அவன் முகவரி கேட்கிறான். ‘தண்ணீர் நிறைந்திருக்கும் ஏரிதான் என் வீடு’ என்கிறது. இதுபோல சுவாரஸ்யமான உரையாடல்களோடு நகரும் அழகிய கதைகள் அடங்கிய நூல் இது. எளிமையாக எழுதியிருக்கிறார் உதயசங்கர்.

தேவதைக் கதைகள் - கே.முரளிதரன் (விலை: ரூ105/-)

சுட்டி விகடனில் வெளியான கதைகளின் தொகுப்பு. மாயாஜாலத்துடன் சுவாரஸ்யமான திருப்பங்களும் நகைச்சுவைகளும் அடங்கிய கதைகள் இவை. வண்ணமயமான ஓவியங்களும் வசீகரிக்கின்றன.

- விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2.

சுண்டைக்காய் இளவரசன் - யெஸ்.பாலபாரதி (விலை: ரூ 60/-)

அழகான இளவரசன் ஒருவன். அவன் செய்யும் சிறு தவறால் சுண்டைக்காயாக மாறிவிடுகிறான். அது என்ன தவறு, சிறுவன் என்ன ஆனான் என்பதை மாயாஜாலத்துடன் ரசித்துப் படிக்கலாம்.

பேசும் தாடி -  உதயசங்கர் (விலை: ரூ 80/-)

பாட்டிகள், காசுகளை எதில் சேர்த்து வைப்பார்கள்? ஆமாம்! சுருக்குப் பையில். ஆனால், ‘பேசும் தாடி’ நாவலில் வரும் பாட்டியின் சுருக்குப் பையில் சித்திரக் குள்ளிகளும் தாத்தாவின் தாடியில் சித்திரக் குள்ளர்களும் ஒளிந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதைகள், இயற்கையை நேசிக்கவும் நமது மரபுகளைப் போற்றவும் கற்றுக்கொடுக்கின்றன.

- வானம் பதிப்பகம், M 22, 6-வது அவென்யூ, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-89.