இரண்டாம் பருவத்தில், விண்வெளி பற்றி இடம்பெற்ற பாடத்தின் மூலம் ஏற்கெனவே மாணவர்கள் அறிந்து இருந்தனர்.

விண்வெளியில் உள்ளவை, விண்வெளி வீரர்கள், செயற்கைக்கோள்கள் போன்றவை பற்றி அவர்களிடம் கேட்டு நினைவுபடுத்தினேன். மேலும் ஒரு தெளிவை ஏற்படுத்த, அவர்களுக்குப் பல செயல்திட்டங்களை வழங்கினேன்.

ராக்கெட் அல்லது செயற்கைக்கோள் மாதிரி, விண்வெளி வீரர்கள், இந்தியச் செயற்கைக்கோள்கள், விண்வெளி சென்ற உயிரினங்கள் போன்றவற்றில், ஏதாவது ஒன்றின் படத் தொகுப்பைத் தயார்செய்து வரச்சொன்னேன். மாணவர்களும் தங்கள் கற்பனையில் தோன்றிய வகையில் விண்வெளி தொடர்பான படத்தொகுப்பு, ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் மாதிரிகளைத் தயார்செய்து வந்தனர். அவற்றைப்பற்றிய கருத்துகளையும் விளக்கி, மதிப்பீடு பெற்றனர். இதன்மூலம் விண்வெளி வீரர்கள், செயற்கைக்கோள்கள் பற்றிய அறிவு மேலும் வலுப்பெற்றது.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.