FA பக்கங்கள்
Published:Updated:

அளந்து அளந்து கற்றோம்!

அளந்து அளந்து கற்றோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அளந்து அளந்து கற்றோம்!

நீட்டல் அளவை பாடத்துக்கு உரியது

மீட்டர், சென்டிமீட்டர் போன்ற நீட்டல் அளவைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வண்ணம் இந்தச் செயல்பாட்டை வகுப்பறையில் அரங்கேற்றினோம்.

அளந்து அளந்து கற்றோம்!

மில்லிமீட்டர், சென்டிமீட்டர், மீட்டர் போன்ற அளவைகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் இடங்கள், அளக்கும் முறை பற்றியும் விளக்கிக் கூறிவிட்டு,  மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன்.

அளந்து அளந்து கற்றோம்!
அளந்து அளந்து கற்றோம்!

ஒரு குழுவிடம், வகுப்பறையில் உள்ள மாணவர்களின் உயரங்களை அளந்து சொல்லச் சொன்னேன். மற்ற குழுக்களிடம், வகுப்பறையில் உள்ள மேஜை, கரும்பலகை, கதவு, ஜன்னல், போன்றவற்றின் நீள அகலங்களை அளந்து கூறச் சொன்னேன். இதன்மூலம், மில்லிமீட்டர், சென்டிமீட்டர், மீட்டர் போன்ற அளவுகள் பற்றியும் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடு பற்றியும் அறிந்துகொண்டனர். மாணவர்களின் ஆர்வம், அளவுகளை விரைந்து சொல்லுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன்.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.