Published:Updated:

மாணவர்கள் காப்பி அடிக்க உதவி: நாமக்கல் தனியார் பள்ளியின் தகிடு தத்தம்!

மாணவர்கள் காப்பி அடிக்க உதவி:  நாமக்கல் தனியார் பள்ளியின் தகிடு தத்தம்!
மாணவர்கள் காப்பி அடிக்க உதவி: நாமக்கல் தனியார் பள்ளியின் தகிடு தத்தம்!
மாணவர்கள் காப்பி அடிக்க உதவி:  நாமக்கல் தனியார் பள்ளியின் தகிடு தத்தம்!

நாமக்கல்: ப்ளஸ் 2 தேர்வில், கண்காணிப்பாளர்கள் மூலம்  மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளியின் மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான  அரசு பொதுத் தேர்வு கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அயீகாரிகள், பறக்கும் படையினர் உள்ளிட்ட பலர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பொம்மகுட்டை மேடு என்ற பகுதியில் உள்ள  உள்ள காமராசர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மையத்தில் கடந்த 11 ஆம் தேதி பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

##~~##
அந்த சோதனையில், பள்ளி நிர்வாகம், தேர்வு கண்காணிப்பாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, 12 மணிக்கு மேல் இயற்பியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த, ஒரு மார்க் கேள்விகளுக்கான பதில்களை ஆசிரியர்களே சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது தெரியவந்தது.
 
இதுபற்றி தற்போது மேல் விசாரணை நடைபெற்றது. அதில் தனியார் பள்ளியின் தகிடுதத்தம் உறுதி  செய்யப்பட்டதை அடுத்து, தற்போது அந்தப் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது தேர்வு எழுதி வரும் மாணவர்களை இனி அருகில் உள்ள மற்றொரு பள்ளியில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
-
வீ.கே.ரமேஷ்