Published:Updated:

போரைத் தடுத்த புலவர் - நாடகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போரைத் தடுத்த புலவர் - நாடகம்
போரைத் தடுத்த புலவர் - நாடகம்

போரைத் தடுத்த புலவர் பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
போரைத் தடுத்த புலவர் - நாடகம்

காட்சி 1

ளந்தத்தனார் எனும் புலவரை ஒற்றன் என நினைத்துச் சிறையில் அடைத்துவிடுகிறான் மன்னன் நெடுங்கிள்ளி.

மக்கள் 1:  பழமரத்தை நாடிச் செல்லும் பறவைகள் போல மன்னரைத் தேடிச் சென்று பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் வாழ்க்கையை மன்னர் உணரவில்லை.

மக்கள் 2: தாம் பெற்ற பரிசை தான் மட்டும் துய்க்காது பிறருக்கும் கொடுத்து மகிழும் புலவர்கள் பற்றி உணராது சிறையில் புலவரை அடைத்துள்ள அரசனுக்கு எடுத்துரைப்பது யார்?

(இவர்கள் பேசுவதை, அந்த வழியாக வந்த புலவர் கோவூர் கிழார் கேட்கிறார். மன்னனிடம் சென்று விளக்கிக் கூறி, இளந்தத்தனாரை விடுவிக்கிறார்.)

போரைத் தடுத்த புலவர் - நாடகம்

காட்சி 2

நெடுங்கிள்ளி மீது, போர்தொடுக்கத் தயாராகும் நலங்கிள்ளியைச் சந்திக்கிறார் புலவர் கோவூர் கிழார்.

நலங்கிள்ளி:  உங்கள் பேச்சைக் கேட்டு நெடுங்கிள்ளி,  புலவர் இளந்தத்தனாரை விடுவித்ததன் மூலம், சோழர்குடிக்கு நேரவிருந்த பெரும்பழியை நீக்கினீர்கள் புலவரே!

கோவூர் கிழார்: அதனைவிடப் பெரும்பழி வரப்போகிறது மன்னா... இருவரும் போரிட்டு யார் தோற்றாலும் “சோழன் தோற்றான்” என்ற பழி சோழ குலத்துக்கு வரும்.

நலங்கிள்ளி: இதனை நெடுங்கிள்ளி உணர்வானா?

கோவூர் கிழார்: நெடுங்கிள்ளியும் உணர்ந்து வருந்துகிறார். உம்மைப் பார்க்க விரும்புகிறார். அதோ வருகிறார் பார்.

போரைத் தடுத்த புலவர் - நாடகம்



(நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும் கண்ணீர் மல்க, ஆரத்தழுவிக் கொள்கின்றனர்.)

அனைவரும் : போரைத் தடுத்த புலவர் கோவூர் கிழார் வாழ்க! வாழ்க!

மாணவர்களின் நடிப்புத்திறன், உச்சரிப்பு, குழு மனப்பான்மை, பயமின்றிப் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடலாம்.

- க.சரவணன் டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை-9.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு