Published:Updated:

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!
தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

ந.ஆசிபா பாத்திமா பாவா - நிவேதாஆர்.வி.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!
தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தேர்வுக் காலம் தொடங்கிவிட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என மூன்று தரப்புக்குமே டென்ஷன்தான். "நான் கடுமையாக உழைக்கிறேன்; நன்றாகவே படிக்கிறேன்; ஆனால் தேர்வு அறையில் அமர்ந்தால் அனைத்துமே மறந்துபோகிறது" இது சில மாணவர்கள்களின் கவலை. "நல்லாப் படிக்கிற பையன். எக்ஸாம் எக்ஸாம்னு விழுந்து விழுந்து படிச்சு உடலைக் கெடுத்துக்கிட்டான்" என்பது சில பெற்றோரின் வருத்தம். ஞாயிற்றுக்கிழமைகூட ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் வைச்சு சொல்லிக்கொடுக்கிறோம். ஆனால், எதிர்பார்த்த ரிசல்ட் வர மாட்டேங்குது" இது சில ஆசிரியர்களின் ஆதங்கம். இப்படி மூன்று தரப்பின் பி.பியையும் எகிறவைக்கும் தேர்வுக் காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வது மிகவும் எளிமையானது. தேவை, முறையான திட்டமிடல், கவனம், உடல் மற்றும் மனதின் மீதான அக்கறை. உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது வெற்றிகள் அனைத்துக்கும் அஸ்திவாரம். இதோ... எப்படிப் படிப்பது? தேர்வை எதிர்கொள்வது எப்படி என ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறார் உளவியல் நிபுணர் யாமினி கண்ணப்பன். அதே போல உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் செளமியா.  

உணவு

அடர்நிறக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால், நினைவாற்றல் அதிகரிக்கும். கீரைகளை வாரம் இரண்டு மூன்று முறை உணவில் சேர்ப்பதால் அதில் உள்ள நுண்ணூட்டச்சத்துகள் மூளையைத் தூண்டி, செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. காலிஃபிளவரில் உள்ள சத்துகள் மூளையை சிறப்பாகச் செயல்படச் செய்கின்றன.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

அடர் நிறங்களைக்கொண்ட பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாவல், செர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெர்ரி, மாதுளை, திராட்சை, தர்பூசணி, பிளம்ஸ் போன்றவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மூளையின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் உதவுகின்றன. நினைவாற்றலை மேம்படுத்துகின்றன.

வேர்க்கடலை, பட்டாணியில் புரதச்சத்தும் மாவுச்சத்தும் உள்ளன. வேர்க்கடலையை வேகவைத்து உண்ணலாம். வால்நட், பாதாம் போன்ற நட்ஸ் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. இவற்றைப் பருப்பு வகைகளுடன் சேர்த்தோ, தனியாக வறுத்தோ சாப்பிடத் தரலாம்.

ஒமேகா-3 நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஒமேகா 3 அனைத்து சிறிய மீன்களிலும் இருக்கும். உதாரணமாக, சாலமன், ட்யூனா, மத்தி, அயிலை போன்றவற்றில் காணப் படுகிறது. முட்டையில் உள்ள கோலைன் (choline) என்ற ஊட்டச்சத்து நினைவாற்றலை அதிகரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள், ஆலிவ் ஆயில்,  சோயா பீன் எண்ணெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பும், ஒமேகா 3 சத்துகளும் நிறைந்துள்ளன. இவை மூளையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!முழுதானிய வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயறு வகைகள் அதிகமாக உண்ண வேண்டும். முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மைதா, சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சீஸ்  மற்றும் கோதுமையை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

உறக்கமும் ஓய்வும்

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!
தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தினமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். அதிகாலை நேரங்களில் படிப்பது மூளை வேகமாகச் செயல்படுவதற்கு உதவிபுரியும். இரவு ஒன்பது மணிக்குப் படுக்கைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து படிக்க முடியும்.

படிக்கும் முறை

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தரையில் சப்பணமிட்டோ நாற்காலியில் அமர்ந்தோ படிக்கலாம். நேராக நிமிர்ந்து, அமர்ந்து படிப்பது நல்லது. சுவரில் சாய்ந்துகொண்டோ, படுக்கையில் படுத்துக்கொண்டோ படிக்கும்போது முதுகு எலும்பில் உஷ்ணம் உருவாவதால் மூளை விரைவாகச் சோர்வடைந்துவிடும். மேலும், கவனம் பிசகும். உடலில், நீர் வறட்சி ஏற்படும். இதனால், சிலருக்குத் தலைவலி ஏற்படக்கூடும். எனவே, நிமிர்ந்து அமர்ந்துப் படிப்பதே சிறந்தது. அதிக நேரம் அமர்ந்தபடியே படித்துக்கொண்டு இருக்காமல், அவ்வப்போது நடப்பது நல்லது. இல்லை எனில், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் செய்யலாம். சைக்கிள் ஓட்டலாம். நடைப்பயிற்சியை ஒரே அறைக்குள் செய்யாமல், காலாற வெளியே சென்றுவருவது மனதைப் புத்துணர்வாக்கும். கை, கால்களை அசைப்பதால், உடலின் மின்னோட்டம் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் மேம்படும். மூளை சிறப்பாக வேலை செய்யும்.

சிலர் நடந்துகொண்டே படிப்பார்கள். இது சரியான முறை அல்ல. நடந்துகொண்டே படிக்கும்போது கவனம் சிதறக்கூடும். மேலும் எதிலாவது இடித்துக்கொள்ளவும் நேரிடும். உடலுக்கு போதிய உழைப்பு தேவை எனும்போது உடலே நமக்குச் சொல்லும் சமிக்ஞைதான் நடக்க வேண்டும் என்ற உணர்வு. எனவே, காலாற நடந்துவிட்டு வந்து படிப்பைத் தொடர வேண்டும்.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தேர்வு நேரங்களில், கண்ணுக்குத் தீமை விளைவிக்கும் டி.வி பார்ப்பது, தியேட்டருக்குச் செல்வது முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பசுமையான இடங்களைக் காணுதல், மனதுக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை ரசிப்பது முதலியவற்றைச் செய்யலாம். வெகுதூரம் பயணித்தல் உடல்சோர்வை ஏற்படுத்தும். அதனால், தேர்வு நேரங்களில் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால், கண்டிப்பாக உடல் உழைப்பு முக்கியம். எனவே, ஏதேனும் ஒரு அவுட்டோர் விளையாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

யோகா, நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.

இது போன்ற பயிற்சிகள் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதோடு மனச்சோர்வு, ஸ்ட்ரெஸ் போன்றவை நெருங்காமல் பார்த்துக்கொள்கின்றன.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

மூச்சுப்பயிற்சி மிகவும் நல்லது. மூச்சை சற்று வேகமாக உள்ளிழுத்து, மெதுவாக வெளியே விட வேண்டும். இந்த மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதால், இதயத்தின் செயல்பாடும், ரத்த அழுத்தமும் சீராகி, உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைத் தாண்டி, படித்துக்கொண்டிருக்கும் நேரத்துக்கு இடையில் சில பயிற்சிகளைச் செய்யலாம். உதாரணத்துக்கு, அவ்வப்போது கை கால்களை நீட்டி மடக்குதல், தோட்டத்தில் நடப்பது, நல்ல இசையைக் கேட்பது, மனம்விட்டுச் சிரிப்பது, மௌனமாக தியானம் செய்வது, செல்லப் பிராணிகளோடு நேரம் செலவிடுவது போன்றவை தேர்வு நேரங்களில் சிறந்த புத்துணர்வாக இருக்கும்.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

நன்றாகப் படித்தாலும், பரீட்சைக்கு முன் அனைத்தும் மறந்துவிடுகின்றன. ஒன்றுமே நினைவில்லாதது போல மனம் வெறுமையாகிவிடுகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

இது ஒரு பிரச்னையே அல்ல. தெரிந்த கேள்விகள் வருமா? வராதா?’, நல்லா எழுது வோமா? நிறைய மார்க் கிடைக்குமா? என்கிற யோசனைகளில் மாணவர்கள் பதற்றமாகவே இருப்பார்கள். பதற்றத்தில் நெஞ்சுப் படபடப்பு அதிகரித்து, உள்ளங்கை வியர்க்கும். படித்தது எல்லாம் மறந்தது போல இருக்கும். இதை ‘பெர்ஃபார்மன்ஸ் ஆங்க்ஸைட்டி’ என்று சொல்வோம்.

இயற்கையாகவே நம் மனம் முழு வீச்சில் செயல்படப்போகிறது என்பதன் அறிகுறியே இது. உடலில் சிறு மாற்றங்கள் நிகழும் போது, அதாவது பதற்றம், கை நடுங்குவது, வியர்ப்பது  போன்ற மாற்றங்கள் நம் மூளையைத் தயாராக்குகின்றன என்று பொருள். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இது ஐந்து நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும் பிரச்னை. இதைப் பற்றியே சிந்தித்து,  மேலும் ஒரு பிரச்னையாக மாற்றிவிடக் கூடாது.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

இந்த பெர்ஃபார்மன்ஸ் ஆங்க்ஸைட்டியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

ஒருவகையில் இந்த பெர்ஃபார்மன்ஸ் ஆங்க்ஸைட்டி ஏற்படுவது நல்லதே. இதனால், நம் மூளை கூர்மையாகும், ஒரே இடத்தில் கவனம் கொள்ளும்படியாகச் செய்யும். ஆனால், இந்த ஆங்க்ஸைட்டி அளவுக்கு அதிகமானால் பிரச்னை. இதைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன. முதலில், நன்றாகப் படித்துவிட்டுச் செல்வது. எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகப் பலமுறை ஒரு பாடத்தைப் படித்துச் செல்ல வேண்டும். இரண்டாவது, நமக்குத் தெரியாத கேள்விகள் வந்தாலோ பதில் மறந்து போனாலோ, படபடப்பு ஏற்படும். அப்போது நன்றாக ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். இப்படி மூன்று முறை செய்தால், நம் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் சமநிலை மேம்படும். மறந்தவை நினைவிற்கு வந்துவிடும்.

உணவு முறை

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தினமும் மூன்று வேளை உணவை எந்தக் காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. குறிப்பாக, காலை உணவு உடலுக்கு மிகவும் முக்கியமானது. காலை உணவின் குளுக்கோஸ்தான் உடலுக்கு மிகவும் அத்தியாவசியம். இதைத் தவிர்க்கும்போது மூளையின் செயல்பாடு மந்தமாகிறது.

காலை நேரம், சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, காலைப் பொழுதை வாழைப்பழத் தோடு தொடங்குதல் அன்றைய தினத்தை மேலும் சிறப்பாக்கும்.

காலை உணவைவிடவும் மதியம் சற்றுக் குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.

இரவு வேளையில், செரிமானத்துக்கு எளிதான உணவுகளை மிகக் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரவு உணவுக்குப் பிறகு, இரண்டு மணி நேரம் கழித்து, உறங்கப்போகும்போது பால் அருந்தலாம். பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் கேசின்கள் நிறைந்துள்ளன. ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்போது உடலின் வளர்சிதை மாற்றச் செயல் பாடுகள் சீராகின்றன.

தினமும் இரண்டு பழங் களாவது எடுத்துக்கொள்வது நல்லது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் வரை நீர் பருக வேண்டும்.

படிப்பது எழதிப் பார்ப்பது எது பெஸ்ட்?

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

இயற்கையாகவே நம் அனைவரது மூளைக்கும் அதிக ஆற்றல் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் நாம் அறிய வேண்டும். ஒரு பாடத்தை சிலமுறை படித்தால், அது தற்காலிக நினைவகம் எனப்படும் ஷார்ட் டேர்ம் மெமரியில் பதியும். அதுவே, அந்தப் பாடத்தை சிலமுறை படித்தபின் எழுதிப் பார்க்கும்போது அது, நிரந்தர நினைவகத்தில் பதியும். எப்போதுமே நினைவில் இருக்கும். அது மட்டுமின்றி, வெறுமனே மனப்பாடம் செய்யாமல், அதைப் புரிந்து படிக்கும் தன்மை மேம்படும். அப்படிப் படிக்கும்போது அது வெகுகாலம் மறக்காது.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!முழு மதிப்பெண் எடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இதற்கு என்ன வழி?

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல.

முதலில் மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுத் தேர்வு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமானதுதான். ஆனால், அது ஒன்று மட்டுமே அவருடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயம் அல்ல. ஆகவே, பலனை எதிர்பார்க்காமல், நம் முழு கடமையைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், வெற்றி நிச்சயம்.

தவிர்க்க வேண்டியவை

தேர்வு நெருங்கும் சமயத்தில் மட்டும் இல்லை. எப்பொழுதுமே எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்லது. பூரி, பஜ்ஜி, வடை முதலியவற்றை அறவே  தவிர்ப்பது நல்லது. ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ், பீட்சா முதலியவற்றையும் தவிர்க்க வேண்டும். இவை உடலை சட்டென மந்தமாக்கிவிடும். சோம்பலைப் பெருக்கும். செரிமானத்தைப் பாதிக்கும். சாக்லேட் வகைகள், குளிர்பானங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றைத் தேர்வு நேரங்களில் அறவே தவிர்க்கலாம். மற்ற நேரங்களில் எப்போதாவது அளவாகச் சாப்பிடலாம்.

ஹெல்த்தி டேஸ்டி ரெசிப்பிகள்!

முளைப்பயறு ப்ரெட் டோஸ்ட்

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தேவையானவை: முளைக்கட்டிய பயறு - ஒரு கப், சீரகம் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, மஞ்சள்தூள்- 2 சிட்டிகை, கொத்தமல்லித்தழை  - ஒரு பிடி, புதினா - அரை பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கோதுமை பிரெட் - 4 துண்டுகள்.

செய்முறை: பிரெட்டைத் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து, சற்று தண்ணீர் விட்டு கரகரப்பாக அரைக்கவும். தோசை மாவு பதத்துக்குத் தண்ணீர் கலந்துவைக்கவும். காய்ந்த தோசைக் கல்லில், அரைத்த மாவில் தோய்த்துஎடுத்த பிரெட்டைப்போட்டு, லேசாக எண்ணெய் விட்டு இரு பக்கமும் டோஸ்ட் செய்யவும்.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

பலன்கள்: ஆரோக்கியமான புரதம் மற்றும் வைட்டமின் சி நிரம்பிய ருசிகரமான பிரெட் டோஸ்ட் ரெடி. முளைக்கட்டிய பயறில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். வைட்டமின் சி பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கவல்லது. மேலும், சருமப் பராமரிப்புக்கும் உதவும்.

பீட்ரூட் - ராகி சப்பாத்தி

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தேவையானவை: கேழ்வரகு மாவு, கொள்ளு மாவு - தலா 200 கிராம், பீட்ரூட் - 150 கிராம், உப்பு  - தேவையான அளவு.

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!செய்முறை: பீட்ரூட்டைத் துருவி, தண்ணீர் சேர்த்து சாறு எடுக்கவும். கேழ்வரகு மற்றும் கொள்ளு மாவுடன் உப்பு சேர்த்து, பீட்ரூட் சாறை ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும். இதற்கு, தக்காளிச் சட்னி அல்லது குருமா சுவை கூட்டும்.

பலன்கள்: கேழ்வரகில், புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. கேழ்வரகு மற்றும் கொள்ளு மாவில் கால்சியம் நிறைந்திருப்பதால், குழந்தைகளுக்கு எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும்.  நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்ரூட்டில் இருக்கிறது.

பாசிப்பயறு காய்கறி புலால்

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தேவையானவை: நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், பீன்ஸ் - 2 கப், பாசிப்பயறு -   50 கிராம், சீரகச்சம்பா அரிசி -  அரை  கப், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம் - தலா 2, சோம்பு  - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 1, பச்சை மிளகாய் - 1, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா - ஒரு பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மூன்று டீஸ்பூன் எண்ணெயை குக்கரில்விட்டு, மசாலாப் பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, புதினா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிய வற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு காய்களையும் சேர்த்துச் சற்று வதக்கவும். பாசிப் பயறை நன்றாக வறுத்து, கலவையுடன் சேர்க்கவும். மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கிளறிவிட்டு, வேகவிடவும். ஒரு விசில்விட்டு, 5 நிமிடங்கள் வைத்திருந்த பின் இறக்கவும். 

பலன்கள்: குழந்தைகளுக்குக் காய்களின் மூலம் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகளும், சீரகச்சம்பா அரிசியின் மூலம் வைட்டமின் பி சத்தும், பாசிப்பயறின் மூலம் புரதம் மற்றும் வைட்டமின் சி-யும் கிடைக்கும்.

அவகேடோ புட்டிங்

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தேவையானவை: நன்றாகப் பழுத்த அவகேடோ, வாழைப்பழம் தலா - 1, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள் - ஒரு பிடி, வெள்ளரி விதை மற்றும் பொடியாக நறுக்கிய -முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - ஒரு கைப்பிடி, தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அவகேடோவை நறுக்கி, நடுவில் இருக்கும் விதையை நீக்கிவிட்டு, கரண்டியால் சுரண்டி எடுக்கவும். வாழைப்பழத்தைப் பொடியாக நறுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மத்தினால் நன்றாகக் கடையவும். அதில் தேன் சேர்த்து, பருப்பு வகைகளைத் தூவி,  குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

குறிப்பு: மாலையில் பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸாகத் தரலாம். சத்துகள் நிரம்பியது. அதோடு வயிறு நிறைந்து, 2 மணி நேரத்துக்குப் பசிக்காது.

பேரீச்சம்பழ சாக்லேட்

தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்!

தேவையானவை: பேரீச்சம்பழம் - கால் கிலோ, நொறுக்கிய வேர்க்கடலை - 100 கிராம், வெள்ளரி விதை - 25 கிராம், காய்ந்த திராட்சை - 50 கிராம், ஏலக்காய்த்தூள் அல்லது கோகோ பவுடர் -  தேவையான அளவு. (தேவைப்பட்டால் வேர்க்கடலையுடன் பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உடைத்த கடலை போன்ற நட்ஸ் சேர்த்து நொறுக்கிக் கொள்ளலாம்).

செய்முறை: பேரீச்சம்பழத்தை, கேரட் துருவியால் துருவிக்கொள்ளவும் அல்லது மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம். அரைத்த அல்லது துருவிய பேரீச்சம் பழத்துடன், காய்ந்த திராட்சை சேர்த்து, மிக்ஸியில் போட்டு, ஒருமுறை சுற்றி எடுக்கவும். இதில் நட்ஸ் வகைகளைச் சேர்த்து, நன்றாகக் கலந்து, எந்த ‘ஃப்ளேவர்’ தேவையோ அதற்கேற்ப, ஏலக்காய்த்தூளோ, கோகோ பவுடரோ சேர்த்து உருட்டியோ, ரோல்ஸ் அல்லது வில்லைகளாகவோ செய்யலாம்.

பலன்கள்: 
சத்துகள் நிறைந்த சாக்லேட் இது. ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.  குழந்தைகள் விளையாடப் போகும்போது இதைச் சாப்பிடவைத்து அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு