

‘உலகப் பொதுமறை’ என்று போற்றப்படும் திருக்குறளை மாணவர்கள் தெளிவாகக் கற்க, செயல்பாடு ஒன்றைச் செய்தேன். ‘பண்புடைமை’ என்னும் அதிகாரத்தில் உள்ள திருக்குறள்களக் கற்பித்த பின்னர், குறளின் சீர்களை தனித்தனியாக மின்அட்டைகளில் (flash cards)எழுதி வருமாறு மாணவர்களிடம் கூறினேன். அனைத்து மாணவர்களும் தயாரித்து வந்த மின்அட்டைகளை வகுப்பறை மேஜை மீது வைத்தேன். ஒவ்வொரு மாணவராக அழைத்து, குறளின் சீர்களை முறைப்படுத்தி அமைக்குமாறு கூறினேன். இந்தச் செயல்பாட்டின் மூலம், எளிமையாக திருக்குறளைப் படிக்க அறிந்துகொண்டனர். மேலும், திருக்குறளை எவ்வாறு சீர் பிரித்து எழுத வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பெ.நதியா, ஆல்பா ஜிகே மெட்ரிக் பள்ளி, அரவேணு, நீலகிரி.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism