



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வகுப்பறையை மாணவர்கள், மாணவிகள் என இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். பல்வேறு சொற்களை சார்ட்டில் எழுதி, கரும்பலகையில் ஒட்டினேன். (உதாரணம்: Boy, Girl, Cock, Hen, King, Queen...) பிறகு, மாணவர்கள் குழுவில் இருந்து ஒருவரை அழைத்து, ஆண்பாலைக் குறிக்கக்கூடிய சொல் ஒன்றை வட்டமிடச் சொன்னேன். அவரும் Boy என்பதை வட்டமிட்டார். அடுத்து, மாணவிகள் குழுவில் இருந்து ஒருவரை அழைத்து Boy என்பதற்கு எதிர்மறையான சொல்லை வட்டமிடச் சொல்ல, அவரும் Girl என்பதை வட்டமிட்டார். இவ்வாறு விளையாட்டு தொடர்ந்தது. விளையாட்டின் முடிவில், அதிகச் சொற்களுக்கு வட்டமிட்டு வென்ற குழுவுக்குப் பரிசுகள் வழங்கினேன். பிறகு, மாணவர்களால் கரும்பலகையில் கண்டுபிடிக்காமல் இருந்தவற்றைக் கண்டுபிடிக்க உதவினேன். இந்தச் செயல்பாடு, மாணவர்களிடையே பால் வகை பற்றிய தெளிவை ஏற்படுத்த உதவியது.

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.