தேவையான பொருள்கள்: காலியான பிளாஸ்டிக் பாட்டில்கள் - 2, ஊசி, காலியான ரீஃபிள்கள் - 2, மாட்டுச்சாணம் சிறிதளவு, தண்ணீர், காய்ந்த இலைகள், குச்சிகள், மலர்கள், தீப்பெட்டி.

செய்முறை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• பாட்டில் மூடிகளில் ரீஃபிள் செல்லக்கூடிய அளவு ஊசியால் துளையிட்டு, ரீஃபிளை சிறிதளவு உள்ளே இருக்குமாறும் மீதிப் பகுதி வெளியே இருக்குமாறு செருக வேண்டும்.
• ரீஃபிள் செருகப்பட்ட பகுதியைச் சுற்றிலும் உருகிய மெழுகை, ஒரு சில சொட்டுகள் விட்டு காற்று கசிவதைத் தடுக்க வேண்டும்.

• ரீஃபிளின் வெளிப்பகுதி முனையில் தென்னங்குச்சியை செருகி, அங்கும் ஒரு சொட்டு மெழுகை வைக்க வேண்டும்.
• முதல் பாட்டிலில் பாதியளவு மாட்டுச்சாணத்தையும், கால் பாகம் தண்ணீரையும் நிரப்ப வேண்டும்.
• இரண்டாவது பாட்டிலில் முக்கால் பாகம் காய்ந்த இலைகள், மலர்கள் மற்றும் குச்சிகளைப் போட்டு அவையெல்லாம் மூழ்கும் வரை நீரால் நிரப்ப வேண்டும்.

• இரண்டு பாட்டில்களையும் இறுக்கமாக மூடி, சுற்றிலும் செல்லோடேப்பை ஒட்டி, காற்று கசிவதைத் தடுக்க வேண்டும்.

• இரண்டு வாரங்கள் அதை அப்படியே வைத்துவிட வேண்டும். முதல் பாட்டிலில் சாண எரிவாயுவும், இரண்டாவது பாட்டிலில் இயற்கை எரிவாயுவும் உருவாகும்.
• பாட்டில்களின் வெளியே உள்ள ரீஃபிள்களில் செருகப்பட்ட குச்சிகளை எடுத்தவுடன், உள்ளே உருவான வாயு வெளியே வரும். அவ்வாயுவை எரியும் மெழுகுவத்தியின் அருகே காட்டும்போது நன்கு எரிவதைப் பார்க்கலாம்.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.