தேவையான பொருள்கள்: வண்ண சுண்ணக்கட்டிகள், தேவையான படங்கள், பொம்மைகள், அல்லது பொருள்கள்.

செய்முறை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• நட்பு என்பது இருவருக்கிடையே மட்டும் வருவதைப்போல, ஒவ்வொரு மெய்யெழுத்தையும் அடுத்து குறிப்பிட்ட ஓர் உயிர்மெய் எழுத்தே நட்பாக வரும்.
• உதாரணமாக... ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற போன்றவை நட்பெழுத்துகள்.
• படத்தில் உள்ளதுபோல, கரும்பலகையில் வண்ண சுண்ணக்கட்டிகளின் உதவியால் அட்டவணை ஒன்றை வரைந்து, நட்பெழுத்துகளைத் தனித்தனியாக எழுதிக்கொள்ள வேண்டும்.

• தேவையான பொம்மைகள், பொருள்கள் அல்லது படங்களை மேஜை மீது வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக... ரம்பம், காந்தம், சிங்கம், ஊஞ்சல், பம்பரம், தந்தம் ஆகியன.
• ஆசிரியர் ஆரம்பிக்கலாம் என்று கூறியதும், ஒரு மாணவர் ஏதேனும் ஒரு படம் அல்லது பொம்மையை எடுத்து காண்பிக்க வேண்டும். (உ.ம்.- ரம்பம்)

• மற்றொரு மாணவர், அந்தப் பொருள் ரம்பம் என்று கண்டறிந்து ‘ம்’ என்ற மெய்யெழுத்தை அடுத்து ‘ப’ என்ற நட்பெழுத்தே வரும் என்று கூறி, கரும்பலகையில் ‘ம்ப’ என்ற தலைப்பின் கீழ் ‘ரம்பம்’ என்று எழுத வேண்டும்.
• இதுபோல வேறு வேறு வார்த்தைகளைக் கரும்பலகையில் எழுத வேண்டும்.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.