Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி

அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி

ஆயிஷா இரா.நடராசன்

Published:Updated:
அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி

வணக்கம் நண்பர்களே,

நான்தான் ராமேஸ்வர சிலந்தி எழுதுகிறேன். தமிழகத்தின் பாரம்பர்ய அடையாளங்களில் ஒன்று நான். விரைவில் வெறும் புகைப்படமாக மிஞ்சிவிடுவேன் என்கிற அச்சத்தில் இதை எழுதுகிறேன்.

சிலந்திகள் என்றாலே உடனே அடித்துக் கொன்று விட வேண்டும் என்கிற மனித இயல்பு நியாயமானதா? சுற்றுச்சூழலின் ஏற்ற இறக்கத்தைச் சமநிலையில் காத்திட, நமது புவியில் பலகோடி ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம் நண்பர்களே. இந்தியாவில் வாழும் 1600 வகையான சிலந்திகளில், எங்கள் இனம்  முழு அழிவின் விளிம்பில் உள்ளது.

அழிய விடல் ஆகாது பாப்பா! - ராமேஸ்வர சிலந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமேஸ்வர சிலந்தி வகை என்று எங்களுக்குப் பெயர் வந்தது தனிக்கதை நண்பா. ராமேஸ்வர பாராசூட் சிலந்தி என்றும் எங்களை அழைக்கிறார்கள். சிலந்திகளின் வாழ்க்கை பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுநர் ஆண்ட்ரூ ஸ்மித் ராமேஸ்வரத்தில் ஹனுமவிசாலம் கோயிலில் ஓர் இருள் குகையின் வட்டத்தில் என்னைக் கண்டறிந்து பதிவு செய்து, சிலந்தியின் தனி உயிர் வகை என உலகுக்கு அறிவித்தார். இராமேஸ்வரம் மட்டுமல்ல, ஒரு காலத்தில் தென் தமிழகம் மற்றும் அதைச் சுற்றி மன்னார் வளைகுடா வரை நாங்கள் ஏராளமாக வாழ்ந்தோம்.

எங்களின் எட்டுக் கால்களும் மஞ்சளும் கருநிறப் பட்டைகளுமாக வித்தியாசமாக இருக்கும். இறுதியான பின்னங்கால்கள் நான்கில் நீலமும் சிமென்ட் நிறமும் பளபளக்கும். ஹனுமவிசாலம் கோயிலில் மட்டுமல்ல, தமிழகத்தின் மதுரை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு கோயில்கள், உயர்ந்த கட்டடங்கள், கடற்கரை ஓரமான பாலங்கள் இவற்றில் வலைகளைக் கட்டி வாழ்ந்தவர்கள் நாங்கள். மீண்டும் மீண்டும் விடாமல் வலை இழையில் ஏறி வாழத்துடித்த ஒரு சிலந்தியைக் கண்டு முயற்சியைத் தொடர்ந்து வென்ற ராபர்ட் புரூஸ் மற்றும் கஜினி முகமது கதைகளை விடாமுயற்சிக்கு முன்னுதாரணமாக மனித குலம் தன் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறது.

விவசாய நிலங்கள், பழ மரங்கள் எனப் பூச்சிகளை அகற்றுவதில் தனி உத்வேகத்தோடு செயலாற்றும் எங்களையும் எங்கள் வலைகளையும் கொண்டு ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்த நாங்கள் இன்று இந்த தென் தமிழ்நாடு, வடக்கு இலங்கை என மொத்தமாகச் சில நூறு பேர்தான் மிஞ்சி இருக்கிறோம். பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போலவே குட்டிகள், குஞ்சுகள் பொரித்து அவை தனித்துவம் எய்தும் வரை தாயாகி தந்தையாகிக் காப்பாற்றும் வாழ்க்கையை நாங்களும் மேற்கொள்கிறோம் என்றாலும், இன்று ராமேஸ்வர சிலந்திகளான வண்ண மிக்க எங்கள் இனம் பேரழிவின் விளிம்பில் உள்ளது நண்பா... இனி உங்கள் சந்ததிதான் எங்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும். 2007 கணக்கெடுப்பின்படி 12 பேர்தான் மிஞ்சி உள்ளோம். எங்கள் அழிவு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துங்கள். சிலந்திகள் என்றாலே உடனடியாக அடித்துக் கொன்று விடுவது எனும் மனநிலையில் இருந்து மக்களை மாற்றுங்கள். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், விஷத்தன்மை கொண்ட வாயுக்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யுங்கள்.

கோயில்கள் முதல் வீடுகள் வரை, (பூச்சி வராதிருக்க) நச்சு ஏற்றப்பட்ட வேதி பெயின்ட் அடிப்பதைத் தடுத்து உதவுங்கள்.

உங்களை நம்பி இந்த வேலைகளை ஒப்படைக்கிறோம்.

ராமேஸ்வர சிலந்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism