Published:Updated:

கடவுளின் தூதுவர்கள்!

 கடவுளின் தூதுவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுளின் தூதுவர்கள்!

கடவுளின் தூதுவர்கள்!

கடவுளின் தூதுவர்கள்!

கடவுளின் தூதுவர்கள்!

Published:Updated:
 கடவுளின் தூதுவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுளின் தூதுவர்கள்!

லக அளவில் நல்லெண்ணத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்கில், வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்ட சேவை அமைப்பே ரோட்டரி சங்கம். இந்தச் சங்கத்தின் ஓர் அங்கமாக, செயல்படும், `ரோட்டரி இண்டியா லிட்ரசி மிஷன்’, ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் சமூக சேவையாற்றுபவர் களைத்   தேர்வு   செய்து    விருதளிக்கிறது.   பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து இணையதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, விளிம்பு நிலைக் குழந்தைகளை அரவணைத்து கல்வித்துறையில் சேவையாற்றும் 6 ‘லிட்ரசி ஹீரோ’க்களை அடையாளம் கண்டு விருது வழங்கி பாராட்டியிருக்கிறது இந்த அமைப்பு. விருது பெற வந்த ஹீரோக்கள் 6 பேரும் ஆறு ஆச்சர்யங்கள்.

விருது பெற்ற மனிதர்கள் பற்றிய சிறு அறிமுகம்.

 கடவுளின் தூதுவர்கள்!

அஷ்யுத் தாஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 கடவுளின் தூதுவர்கள்!

டிஸா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான ராயகடாவில் வசிக்கும் பழங்குடியினரின் பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்கும் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இவர். கல்வி, சுகாதாரம் உள்பட எல்லாவற்றிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் பழங்குடி மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார். வனப்பாதுகாப்பு, கனிம வளங்களுக்கான சுரங்கங்கள் அமைப்பு போன்ற காரணங்களால் வனங்களிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மக்களின் இருப்பிடங்கள் பறிக்கப்படுகின்றன. சமவெளியோடும் ஒட்ட முடியாமல், தங்கள் இருப்பிடத்துக்கும் செல்ல முடியாமல் நடுவில் சிக்கித் தவிக்கிறார்கள் இந்த மக்கள். காடு சூழ்ந்த வாழ்க்கையே பழகிவிட்டதால் இவர்களின் குழந்தைகளுக்குப் படிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காகப் போராடுகிறார் அஷ்யுத் தாஸ். அதற்காக அக்ரகாமி (Agragamee) என்ற அமைப்பைத் தொடங்கிய அஷ்யுத், அதன்மூலம் 250 கிராமங்களைச் சேர்ந்த 15,000 குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கிறார். இவரது சேவை வட்டத்தில் 25 ஆயிரம் பழங்குடிகள் இருக்கிறார்கள்.

கிம்ஸி பாய் ஹர்சன் பாய் பிரஜாபதி

 கடவுளின் தூதுவர்கள்!

தெருவில் எத்தனையோ பிச்சைக் காரர்களைப் பார்க்கிறோம். மனது நெருடினால் ஒரு  ரூபாயோ,  இரண்டு  ரூபாயோ  கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம். அதன்பிறகு அந்தப் பிச்சைக்காரர் நம் மனதிலேயே இருப்பதில்லை. ஆனால், கிம்ஸி பாயை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பிச்சைக்காரர்தான்; ஆனால், மக்கள் அவரை தெய்வதுக்கு நிகராகக் கொண்டாடுகிறார்கள். குஜராத்தைச் சேர்ந்த கிம்ஸியை அங்குள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பார்க்கலாம். இவரது கால்கள் இயங்கவில்லை, மூன்று சக்கர சைக்கிளில் சென்று தினமும் 14 மணி நேரம் பிச்சையெடுக்கிறார். சில நாள்கள் கை நிறையக் கிடைக்கும். சில நாள்கள் எதுவும் கிடைக்காது. ஆனால், கிம்ஸிக்கு எல்லா நாளும் நன்னாளே... கிடைத்த பணத்தைக் கொண்டு 12 பள்ளிகளைச் சேர்ந்த 2,500 ஏழை மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகங்கள், உடைகள், காலணிகள் எனத் தேவையான பொருள்களை வாங்கித் தருகிறார்.

இந்தச் சேவையை 18 ஆண்டுகளாக இடைவிடாது செய்து வருகிறார் இவர்.

ராஜேஷ் சர்மா

 கடவுளின் தூதுவர்கள்!

ராஜேஷ் சர்மாவுக்கு 46 வயது. டெல்லியைச் சேர்ந்தவர். அலிகார் யுனிவர்சிடியில் பி.எஸ்.ஸி படித்த ராஜேஷால் குடும்ப வறுமை காரணமாக அந்தப் படிப்பை முடிக்க முடியவில்லை. கல்லூரியில் இருந்து இடையில் நின்றுவிட்டார். சொந்தமாக ஒரு மளிகைக் கடையை வைத்து நடத்தி வந்தார். ஆனாலும், படிக்கவில்லையே என்ற வருத்தம் மட்டும் ராஜேஷின் நெஞ்சை விட்டு அகலவில்லை. வறுமை தன் படிப்பையும் எதிர்காலத்தையும் சிதைத்ததை எண்ணி வருந்திய ராஜேஷ், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை, வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில், தன்னால் இயன்ற அளவுக்குக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வந்தார். ஆனாலும், பள்ளிப் படிப்பின் இடையிடையே நின்றுவிடும் குழந்தைகளைத் தடுக்க முடியவில்லை. ஏழைக் குழந்தைகளைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பள்ளிகளின் கற்பித்தல் முறை இல்லை என்ற உண்மையைக் கண்டறிந்த ராஜேஷ், சாகர்பூர் என்ற இடத்தில் டெல்லி மெட்ரோ ரயில் பாதைக்குக் கீழே, ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். எளிமையான அந்தப் பள்ளிக்கு எதிர்பார்த்த மாதிரி குழந்தைகள் வரவில்லை. வெறும் இரண்டு குழந்தைகளோடு பள்ளி நடந்தது. அதன்பிறகு, படிப்படியாக மாணவர்கள் வரத் தொடங்கினார்கள். இதுவரை அவரது பள்ளியில் 1,500 குழந்தைகள் படிப்பை முடித்திருக்கிறார்கள். சுழற்சி முறையில் இப்போது பள்ளி இயங்கி வருகிறது.

ஷிமா மோடக்

 கடவுளின் தூதுவர்கள்!

“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்பவர்களிடம் ஷிமோ மோடக், “2,000 குழந்தைகள்” என்கிறார். மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 12 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி பாதுகாப்பு, அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதோடு அவர்களை முழுமையாகத் தத்தெடுத்து கல்வி கொடுக்கிறார். குடும்பச் சூழ்நிலையால், குழந்தைப் பருவத்திலேயே தொழிலாளர்களாக நிர்பந்திக்கப்படும் குழந்தைகளை மீட்டு, அவர்களைப் பள்ளியில் சேர்த்து, தேவையான உதவிகளை வழங்குவதற்காக ‘அஞ்சலி’ என்ற பெயரில் கல்வி மையங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஒடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோரை மீட்டு அவர்களுக்கு உலகத் தரத்தில் கல்வி கொடுக்கிறார். தன்னம்பிக்கைப் பயிற்சிகளும் வழங்குகிறார்.

சரத்குமார் புப்பாலா

 கடவுளின் தூதுவர்கள்!

பெற்றோர் இல்லாத குழந்தைகளின் நிலை மிகவும் துயரமானது. அதிலும் ஆண் குழந்தைகள், தவறான பாதைக்குச் சென்றுவிடும் ஆபத்து உண்டு. அவர்களை அரவணைத்து வழிகாட்டி எதிர்காலத்தை வளமாக்கும் மனிதர்களைக் காலம் கடவுளுக்கு நிகராகப் போற்றும். அப்படியான ஒரு மனிதர் தான் சரத்குமார் புப்பாலா. 2,000 ஆதரவற்ற குழந்தைகள் சரத்குமாரின் அரவணைப்பில் இருக்கிறார்கள். ‘டாடி’ என்று அந்தக் குழந்தைகள் அவரை அன்புடன் அழைக்கிறார்கள். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த சரத்குமார் தன் மனைவியோடு இணைந்து, கடந்த 15 வருடங்களாக ‘மஞ்சிக்களலு’ என்ற பெற்றோர் அற்ற ஆண் குழந்தைகளுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். இது வழக்கமான குழந்தைகள் இல்லம் இல்லை. ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனையும் அறிந்து, சிறப்பான எதிர்காலத்தை நோக்கி அவர்களை வழி நடத்துகிறது இந்த இல்லம். பள்ளி செல்லாத, பள்ளியில் இருந்து இடையில் நின்றுவிடும் குழந்தைகளைத் தேடி, அவர்களை முறையான பள்ளிகளில் சேர்த்து, கனிவோடு கண்காணித்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். இதுவரை 15 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள்.

ஆஸ்பயர் தொண்டு நிறுவனம்

தொழில்நுட்ப வளர்ச்சி பல சவால்களை உருவாக்கியிருக்கிறது. உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக கல்வித்திட்டங்களையும் மாற்ற வேண்டியிருக்கிறது. இணையம் மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு இணையாக ஆசிரியர்களும், பாடத்திட்டங்களும் மாற வேண்டும். ஆஸ்பயர் நிறுவனம் அப்படியான பணிகளைத்தான் மேற்கொண்டிருக்கிறது. 1997ல் டெல்லியில் டாக்டர் வர்கீஸ் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நவீன பாடத்திட்டங்களை உருவாக்கத் துணை நிற்கிறது. வாய்ப்பற்று நிற்கும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு செல்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் முழுப்பயனையும் ஏழைக் குழந்தை
கள் பெறும் வகையில் விழிப்பு உணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு புத்தாக்கப் பயிற்சிகளை வழங்குவதோடு, ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளை வழங்குகிறது. கல்விக்கூட நிர்வாகங்களை மேம்படுத்த உதவுகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது  இந்த அமைப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism