Published:Updated:

சாகச சமையல் ராணி!

சாகச சமையல் ராணி!
பிரீமியம் ஸ்டோரி
சாகச சமையல் ராணி!

சாகச சமையல் ராணி!

சாகச சமையல் ராணி!

சாகச சமையல் ராணி!

Published:Updated:
சாகச சமையல் ராணி!
பிரீமியம் ஸ்டோரி
சாகச சமையல் ராணி!

மெரிக்காவில் இருக்கும் பள்ளிகளின் உணவகங்களில் மாணவர்களுக்கு உணவை சமைத்துப் பரிமாறுபவர்களை லன்ச் லேடி (Lunch Lady) என்பார்கள். உணவு பரிமாறுவதோடு, இடைவேளை நேரங்களில் மாணவர்கள் ஒழுங்காக நடந்துகொள்கிறார்களா என்று மேற்பார்வையிடும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட ஒரு லன்ச் லேடியை  மையமாக வைத்து உருவான தொடர் இது.

சாகச சமையல் ராணி!

‘தாம்ஸன் ப்ரூக் பள்ளி’யின் அதிரடி லன்ச் லேடி நம் நாயகி. இவரின் அசிஸ்டென்ட் பெயர் பெட்டி. கேன்டீனை சுத்தம் செய்யும்  வயதான தாத்தா, கலோவ்ஸ்கி. ஹெக்டார், டெர்ரன்ஸ் மற்றும் டீ என்ற மாணவர்களும் இவர்களை வம்புக்கு இழுக்கும் மில்மோ என்ற பலசாலி மாணவனும் கதையின் முக்கியமான சில கேரக்டர்கள்.

ரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண்ட் போல  நம்ம லன்ச் லேடியும் சாகசங்கள் செய்பவர்.  இவருக்கு விசித்திரமான ஆயுதங்களை செய்துத் தருவார், அசிஸ்டென்ட் பெட்டி. சாப்பாடு தட்டையே மினி லேப்டாப் ஆக மாற்றுவார்; சமையல் கரண்டியை மினி ஹெலிகாப்டராக மாற்றுவது போன்றவற்றை எல்லாம் செய்வார்.

கேன்டீனில் பாய்லர் ரூமுக்குப் பின்னால், ஒரு ரகசிய கைப்பிடியைத் திறந்தால், இவர்களது மறைவிடம் இருக்கிறது. பள்ளியில் எங்கே, என்ன நடந்தாலும் ரகசிய கேமராக்களின் மூலம் காணலாம். மைக்ரோ ட்ரான்ஸ்மீட்டர்கள், ரகசிய அதிரடி ஆயுதங்கள் என்று ஓர் உளவுத்துறை தலைமையகமாகவே இருக்கிறது அந்த கேன்டீன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாகச சமையல் ராணி!ஹெக்டார், டெர்ரன்ஸ்  மற்றும் டீ ஆகியோர் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது, வழக்கம்போல மில்மோ வம்புக்கு இழுக்கிறான். அப்போது, ஒரு புதியவர் வந்து, ‘‘வகுப்பறை 208-B எங்கே இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.

நம் அதிரடி லன்ச் லேடி, அவரை யாரென்று கேட்கிறார். வழக்கமாக வரும் கணக்கு வாத்தியாருக்கு காய்ச்சல் என்பதால்தான், அவருக்குப் பதிலாக வந்திருக்கும் சப்ஸ்டிடியூட் வாத்தியார் என்கிறார் அவர்.

கணக்கு வாத்தியார் கடந்த 20 ஆண்டுகளில் ஒருநாளும் லீவு எடுத்ததே இல்லை என்ற உண்மை லன்ச் லேடிக்கு நினைவுக்கு வருகிறது. புதிதாக வந்திருக்கும் வாத்தியாரின் நடவடிக்கைகள் மர்மமாக இருக்க, அவரைப் பின்தொடர்கிறார்.

உண்மையில், அந்தப் புது வாத்தியார், மனிதனே அல்ல... அது ஒரு ரோபோ என்பதும் அதன் ரகசியத் திட்டங்களும் தெரியவருகின்றன. நல்லாசிரியர் விருதுக்குப் பின்னால் இருக்கும் சதிவேலைகளையும் ஒரு ரோபோ படையையும் அதிரடி லன்ச் லேடி எப்படி சமாளிக்கிறார் என்பதே விறுவிறுப்பான கதை. கடைசி பத்துப் பக்கங்களில் வரும் ட்விஸ்ட், கதையை ரசிக்கும்படியாகச் செய்கிறது.

படிப்பவர்களை, அந்த பள்ளிக்கே செம ஜாலியாக, அழைத்துச் செல்வதுதான் இந்த காமிக்ஸின் சிறப்பு.

கதாசிரியர் - ஓவியர்: ஜேர்ரட் ஜெ க்ரோஸாஸ்கா (Jarrett J Krosoczka)

சாகச சமையல் ராணி!

39 வயதாகும் அமெரிக்க எழுத்தாளர் ஜேர்ரட். இவர் அம்மாவுக்குப் போதை மருந்துப் பழக்கம் இருந்ததால், சிறையில் அடைக்கப்பட்டார். அப்பா இல்லாத இவரை, தாத்தா பாட்டியே வளர்த்தனர். சிறையில் இருந்த அம்மா, கடிதம் எழுதினால் குழந்தையாக இருக்கும் ஜேர்ரட்டால் புரிந்துகொள்ள முடியாது என்று ஓவியங்களாக வரைந்து அனுப்புவார். இதைப் பார்த்து, ஜேர்ரட்டும் அம்மாவுக்கு பதில் கடிதங்களாக ஓவியங்களையே வரைந்து அனுப்புவார். இப்படியாகத்தான் இவருக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது.

ஓவியரான ஜேர்ரட்டுக்கு யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை. ஓவியக் கல்லூரி மாணவன் ஒருவன் ‘பதிப்பகங்களுக்கு, ஓவியர்களுக்குப் படைப்பை அனுப்பாமல்... பத்திரிகை எடிட்டர்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்று சொன்னதைக் கடைப்பிடித்தார். அந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு, இன்று உலகம் முழுக்க பிரபலமான ஒரு படைப்பாளியாக இருக்கிறார்.

நடிகர் பால் நியூமேன் தொடங்கிய ஒரு பயிற்சி முகாமுக்குச் சென்ற ஜேர்ரட், அங்கே தீவிர நோய்வாய்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளைக் கண்டார். அன்று முதல் வன்முறையை, கோபத்தை ஓவியத்தில் வெளிப்படுத்துவதை நிறுத்திவிட்டார்.

அடுத்து எதை வரைவது என்று யோசித்துக்கொண்டே தான் படித்த பள்ளிக்குச் சென்றார் ஜேர்ரட். அங்கே கேன்டீனில் உணவு தயாரித்து, பரிமாறும் அம்மாவைப் பார்த்ததும் மூளைக்குள் ஒரு பல்பு ஒளிர்ந்தது.

‘நாள் முழுக்க பள்ளியிலேயே இருக்கும் அந்த அம்மாவுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கும் அல்லவா...அதை நகைச்சுவையாக எழுதினால் எப்படி இருக்கும்‘ என்று யோசித்தார்; ‘லன்ச் லேடி’ பிறந்தார்.

சாகச சமையல் ராணி!

கதை: Lunch Lady and the Cyborg Substitute

கதாசிரியர் & ஓவியர்: Jarrett J Krosoczka

மொழி: ஆங்கிலம் (ஆரம்ப நிலை).

வயது: 7 வயது முதல் அனைவரும் படிக்கலாம்
.
வெளியீடு:
2009 (முதல் கதை), 2014  (10 புத்தகங்கள்)

பதிப்பாளர்: Knopf Books for Young Readers

புத்தக அளவு: 5.6 x 7.1 Inches

பக்கங்கள்: 96

கதை: கேன்டீனில் உணவு தயாரிக்கும் அம்மாவின் சாகசங்கள்.

கதை வரிசை: மொத்தம் 10 புத்தகங்கள்

சிறப்புகள்: இருமுறை Childrens Choice Award பெற்ற கதைத் தொடர். தற்போது, திரைப்படமாகவும் தயாராகிறது.

சிறப்பு அம்சம்:
‘நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையை எப்போதாவது கவனித்து இருக்கிறோமா... அவர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?’ இந்தக் கேள்விகளைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism