அன்புள்ள நண்பர்களே,

நலமா..?

இங்கே, நாங்கள் நலமாக இல்லை என்பதைத் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்.

சுறாக்கள் பற்றி அச்சமூட்டும் திரைப்படங்கள் உண்டு. சுறாப் புட்டு, சுறா சாண்ட்விட்ச், சுறா ஹாம் பர்கர் என உணவு விடுதியின் ருசி வேட்டை ஒரு புறம். மனிதர்களின் சுறா - இன வேட்டை எனும் சாகச விளையாட்டு மறுபுறம். இதுவே எங்கள் அழிவுப்படலம். கேட்க யாருமில்லை தோழா.

பெரும்பாலான சுறாக்கள் கடலில்தான் வாழ்கின்றன. ஆனால், பாண்டிச்சேரி சுறா என்று பெயர்பெற்ற நாங்கள், கடலிலும் ஆற்று நீரான நன்னீரிலும் வாழ சிறப்புப் பிறப்பு எடுத்தவர்கள். எனவே, மீன் இனத்தின் அபூர்வ உடல்வாகு எங்களுக்கு உண்டு. நீண்ட மூக்கு சுறா என்று இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் எங்களை அழைப்பார்கள்.

ஆற்று நீர் கடலில் கலக்கும் இடங்களில் இருபுறமும் ஒரு காலத்தில் நாங்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்தோம். ‘முகப்பு வார சுறா’ என்று சிவபுராணத்தில்கூட வருகிறது. நாங்கள் ஆண் சுறாவாக இருந்தால், மூக்கு நுனி முதல் வால் வரை ஒரு மீட்டர் நீளமும், பெண் சுறா என்றால், 60 செ.மீ நீளமும் இருப்போம். மீனவப் பெண்ணாக பார்வதி வளர்ந்தபோது, அவரைக் கைப்பிடிக்க சிவபெருமான் கடலும் ஆறும் சேருமிடத்தில் சுறாவை அடக்குவது திருவிளையாடல்களில் ஒன்று. அப்படி என்றால், எங்கள் பாரம்பர்யம் விளங்கும். தமிழ்க் கலாசாரத்தில் எங்களது இடம் இப்போது புரிந்திருக்கும்.

ஆற்றில், கடலில் வசிக்கும் சிறு எலும்பு வகை மீன்கள் முதல் நத்தைகள், கப்பி சிப்பி, சோழி உயிரினங்கள், ஏனைய புழுக்கள் என உண்டு வாழ்கிறோம். மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யாத நாங்கள், லட்சக்கணக்கில் பெரிய மீன்பிடிக் கப்பல்களால் வலைவீசிப் பிடிக்கப்பட்டோம், எங்களின் மாமிசத்துக்காக!

1839-ல் ஜெர்மன் தேசத்தின் உயிரியல் ஆய்வாளர்களான ஜோனஸ்முல்லர் மற்றும் ஜேக்கப் ஹென்லி ஆகியோர், இந்திய தீபகற்பத்தின் ஃப்ரெஞ்சு ஆளுகைக்கு உள்பட்ட பாண்டிச்சேரி பகுதியில் எங்ககளைக் கண்டறிந்து கர்சாரினஸ் ஹெமியோடன் (carcharhinus hemiodon) எனும் உயிரியல் பெயரைச் சூட்டினர்.

இன்று, இலங்கையின் மெனிக் ஆறு, கும்புகம் நதி உள்பட சில இடங்களில் ஒரு நூறு பேரும், தமிழக புதுவைக் கடல் பிராந்தியம், ஓமன் வளைகுடா, ஜாவா கடல் என சில நூறு பேருமே மிச்சம் இருக்கிறோம் நண்பா. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கவுன்சில் (IUCN) எங்களை பேரழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் முதலிடத்தில் வைத்துள்ளது.

உங்கள் சந்ததிதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். மீன்பிடி வலைகளில், உணவுக்கான மீன்களோடு நாங்களும் தவறிச் சிக்குண்டாலும் கண்டுபிடித்துக் கடலில் சேர்க்க வேண்டும் என்று சட்டமே உள்ளது. அதைக் கடைபிடிக்க விழிப்புஉணர்வை ஏற்படுத்துங்கள். பெரிய தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதிக் கழிவுகள், எங்களின் வாழிடங்களான ஆறு மற்றும் கடலில் கலக்காமல் இருக்க சுற்றுச்சூழல் அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றுங்கள்.

செய்வீர்களா நண்பர்களே..?

இப்படிக்கு

உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும்

பாண்டிச்சேரி சுறா

(வங்காள விரிகுடா கடலின் முகத்துவாரம்).