ஏப்ரல் 21-ம் தேதி வெளியாக பரபரவெனத் தயாராகிக் கொண்டிருக்கிறது ஸ்மர்ஃப்ஸ். நாவலாகவும், திரைப்படமாக இதற்கு முன் வெளியான இரண்டு பாகங்கள் மூலமாகவும் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மர்ஃப்களுக்குப் பல ரசிகர்கள் உண்டு. முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்திலும் அசத்தலான விஷுவல்களோடு தயாராகியிருக்கிறது படம். இந்த பாகத்தில், ஸ்மர்ஃப் கூட்டத்தில் இருக்கும் பெண் ஸ்மர்ஃபான ஸ்மர்ஃபிட்டி தன்னைப் போன்ற இன்னொரு பெண் ஸ்மர்ஃபை பார்க்கிறாள். கூடவே ஒரு மேப் கிடைக்க, தன் நண்பர்களான ப்ரைனி, க்ளம்ஸி மற்றும் ஹெஃப்டி ஆகியோருடன் அந்த மேப்பைப் பின்பற்றி தொலைந்து போன ஸ்மர்ஃப் கிராமத்தைத் தேடி பயணிக்கிறார்கள். அவர்கள் அந்த கிராமத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள், மந்திரவாதி கேர்கேமலால் என்ன பாதிப்பு ஏற்பட்டது, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஸ்மர்ஃப்களின் ரகசியம் என்ன? போன்ற விஷயங்களைப் பற்றிக் கூற இருக்கிறது ‘ஸ்மர்ஃப்ஸ்: த லாஸ்ட் வில்லேஜ்'.

ஸ்மர்ஃப் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர் பெல்ஜியத்தைச் சேர்ந்த கார்டூனிஸ்ட்டான பியரி கலிஃபோர்டு. அந்த கதாபாத்திரத்துக்குப் பெயர் எதுவும் வைக்காமல் இருந்த பியர், தன் நண்பருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உப்பு என்கிற வார்த்தை மறந்து போக, ‘அந்த ஸ்த்ரூம்ஃபை எடு' என சொல்லியிருக்கிறார். ஸ்த்ரூம்ஃபை என்றால் பிரெஞ்ச் மொழியில் உயிரினம் என்று பொருள். அந்த சொல்லுக்கான டச்சு மொழி பெயர்ப்பு தான் ‘ஸ்மர்ஃப்'. அந்த வார்த்தையையே ஆங்கிலத்திலும் பயன்படுத்திக் கொண்டனர்.

1958-லேயே ஸ்மர்ஃப்ஸ் உருவாக்கப் பட்டுவிட்டாலும், 1981-ல் இருந்துதான் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஓர் ஆண்டுக்குள்ளாகவே உலகம் முழுக்க ஸ்மர்ஃப்ஸ் பிரபலமாகியது. ஆல்பங்களாக, மேடை நாடகங்களாக, வீடியோ விளையாட்டுகளாக, பொம்மைகளாக என பல வடிவங்களில் பரவியிருக்கும் ஸ்மர்ஃப்ஸ், இன்னும் ஒரு வருடத்தில் தனது அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறது.

ஒவ்வொரு ஸ்மர்ஃபும் மூன்று ஆப்பிளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்தது போன்ற உயரத்தில் இருக்கும், பல நூற்றாண்டு காலம் வாழும், அதில் கிரான்ட்பா ஸ்மர்ஃப் மற்றும் கிரான்ட்மா ஸ்மர்ஃப், பாப்பா ஸ்மர்ஃபை தனியே விட்டு பயணம் ஒன்றுக்குச் சென்றுவிடுவார்கள். அதன் பின் மற்ற ஸ்மர்ஃபுகளுக்கு எல்லாம் தந்தையாகவும், தலைவனாகவும் பாப்பா ஸ்மர்ஃப்தான் இருக்கிறது எனக் கார்ட்டூனாக ஒளிபரப்பான போது சொல்லப்பட்டது. அதே கதைதான் சினிமாவிலும்.

முன்பு, பெண் ஸ்மர்ஃப்கள் கிடையாது. ஒரு முறை வில்லன் ஸ்மர்ஃபுகளுக்கு இடையில் சண்டை வர, பெண் ஸ்மர்ஃபான ஸ்மர்ஃபிட்டியைத் தயார் செய்து அந்த கூட்டத்துக்கு நடுவில் விடுவான். ஆனால், பாப்பா ஸ்மர்ஃப், ஸ்மர்ஃபிட்டியை தன் மந்திர சக்தியால் நிஜ ஸ்மர்ஃபாக மாற்றிவிடுவார்.

காமிக்ஸை அடிப்படையாக வைத்து பார்த்தால் மொத்தம் 105 ஸ்மர்ஃப்கள் இருக்கின்றன. ஸ்மர்ஃபிட்டி, சாசஸ்ட் ஸ்மர்ஃஃப்ளிங், நானி ஸ்மர்ஃப் என மூன்று பெண் ஸ்மர்ஃப்களும் இதில் உண்டு.

எல்லா ஸ்மர்ஃப்களும் அணிந்திருக்கும் வெள்ளை நிறத் தொப்பிக்கு ப்ரிஜியன் என்று பெயர். பழைய ரோமில் விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் அணியும் தொப்பி இது. சிவப்பு நிற ப்ரிஜியனாக்கள் ஃப்ரென்சுப் புரட்சியின் போது அணியப்பட்டது. படத்தில் எல்லா ஸ்மர்ஃப்களும் வெள்ளைத் தொப்பியும், இவர்களின் லீடரான பாப்பா ஸ்மர்ஃப் மட்டும் சிவப்புத் தொப்பியும் அணிந்திருக்கும்.

30 விதமான மொழிகளில் ஸ்மர்ஃப்ஸ் கார்ட்டூன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.

2011ல் ஸ்மர்ஃப்ஸின் முதல் பாகம் வெளியானதும், ஸ்பைனில் ஜுஸ்கார் (Juzcar) என்கிற கிராமத்தின் அனைத்து வீடுகளும் நீல நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு, ‘ஸ்மர்ஃப் தீம் பார்க்’காக மாற்றப்பட்டது. உலகின் முதல் ஸ்மர்ஃப்ஸ் தீம் பார்க் அது தான்.