Published:Updated:

எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்

எஃப்.ஏ பக்கங்கள்

Published:Updated:
எஃப்.ஏ பக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
எஃப்.ஏ பக்கங்கள்

புராஜெக்ட் போட்டி முடிவுகள் இந்த இதழிலும் தொடர்கிறது.

எஃப்.ஏ பக்கங்கள்

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம் அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.

மயில் தோகையில் இலக்கணம்! 

எஃப்.ஏ பக்கங்கள்

லக்கணத்தின் உயிரீற்றுப் புணர்ச்சி, உடம்படுமெய், மெய்யீற்றுப் புணர்ச்சி மற்றும் செய்யுளுக்குரிய உறுப்புகளான யாப்பின் வகைகளையும், பாவின் வகைகளையும் ஆசிரியர் கற்றுத் தந்ததும், அதற்கான குழுச் செயல்பாடு ஒன்றைச் செய்ய திட்டமிட்டோம். புறா, மயில், மேகம் உள்ளிட்ட உருவங்களை அட்டையில் வரைந்து, அதன் அவுட் லைனில் நறுக்கிக் கொண்டோம். அந்த உருவங்களின் மேல், யாப்பின மற்றும் பா வகைகளின் பெயர்களை எழுதி முழு மதிப்பீடு பெற்றோம். 

எஃப்.ஏ பக்கங்கள்

- வெங்கட், பாரதி, ரித்திஷா, பிரவீன் 8-ம் வகுப்பு.

எஃப்.ஏ பக்கங்கள்

ஆல்ஃபா ஜி.கே மெட்ரிக் பள்ளி, அரவேணு, நீலகிரி.

Nine Gold medals

எஃப்.ஏ பக்கங்கள்

Nine Gold medals பாடத்துக்காக, நாங்களும் எங்கள் நண்பர்களும் பெற்ற பதக்கங்களைச் சேகரித்து மேஜையில் வைத்தோம். பிறகு, ஒவ்வொரு பதக்கமும் பெறுவதற்கு முன் நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியையும் உழைப்பையும் கூறி மதிப்பீடு பெற்றோம்.

- அ.வீனஸ் வில்லியம், ஆ.அபிநயா, ர.ஜெயஸ்ரீ  8-ம் வகுப்பு.

அம்மா என்றால் அன்பு!

எஃப்.ஏ பக்கங்கள்

ம்மாவைப் பிடிக்காதவர்கள்தான் உண்டா? அதனால் அம்மாவின் பெருமைகளைக் கூறும் வாசகங்களைக் கொண்டு வாழ்த்து அட்டைகளைத் தயார்செய்தோம். அவற்றை ஆசிரியரிடம் காட்டி நல்ல மதிப்பீடு பெற்றோம்.

 - ம.அனுஷா. செ.சாந்தினி 9-ம் வகுப்பு.

சுட்டி தந்த மதிப்பீடு!

எஃப்.ஏ பக்கங்கள்

‘The flying wonder’ பாடத்துக்காக சுட்டி க்ரியேஷனில் கொடுக்கப்பட்ட ஹெலிகாப்டரைக் கவனமாக ஒட்டினோம். அழகான ஹெலிகாப்டர், அசத்தலான மதிப்பீட்டைப் பெற்றுத் தந்தது.

- மு.ஷாம்பி, அ.அபிதா 9-ம் வகுப்பு.

அரசினர் உயர்நிலைப் பள்ளி, விளங்குளம், தஞ்சாவூர்.

பந்து எங்கு இருக்கிறது?

எஃப்.ஏ பக்கங்கள்

ங்கிலத்தில் சரளமாக உரையாடுவதற்கான பயிற்சியாக, செயல்பாடு ஒன்றைச் செய்தோம். மேஜையின் மீது, சில ஆங்கில வார்த்தைகளை சார்ட்டில் எழுதி வைத்து, அதன் அருகில் பந்து  ஒன்றை வைத்தோம். பந்தின் மேல் அட்டைப் பெட்டியைப் பிடித்துக்கொண்டு, இப்போது பந்து எங்கு இருக்கிறது என்றவுடன், மாணவர் ‘Under’ என்ற வார்த்தையை உயர்த்திக்  காட்ட வேண்டும். இதைப் பாராட்டி ஆசிரியர் நல்ல மதிப்பீடு அளித்தார்.

எஃப்.ஏ பக்கங்கள்- ஆனந்த வெங்கடேஷ், நவீன், சரவணன், குமரன், சாவித்ரி, சுப்ரியா 5-ம்  வகுப்பு.


காலம் தந்த மதிப்பீடு! 

எஃப்.ஏ பக்கங்கள்

காலை முதல் மாலை வரை, நாம் செய்யும் வேலைகளின் நேரத்தைக் குறிக்கும் செயல்பாடு ஒன்றைச் செய்தோம். கடிகார மாதிரிகள் பல செய்துகொண்டோம். ஒருவர் வேலை பார்ப்பதுபோல நடிக்க, அந்த வேலை எத்தனை மணிக்குச் செய்யப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் விதத்தில், பின் நிற்பவர் கடிகாரத்தில் நேரத்தைக் காட்டுவார். இந்தச் செயல்பாட்டால்  எங்கள் குழுவுக்கு முழு மதிப்பீடு கிடைத்தது.

- 3-ம் வகுப்பு மாணவர்கள்

திரு ஓணம்! 

எஃப்.ஏ பக்கங்கள்

ண்டிகை தொடர்பான பாடத்துக்காக மலர்களைக்கொண்டு ரங்கோலி செய்தோம். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை அன்று, இதுபோன்று கோலம் போடுவார்கள் என்றதும் ஆசிரியர் பாராட்டி, முழு மதிப்பீடு அளித்தார்.
 
- தர்ஷினி, ஸ்ரீநிதி, சாவித்ரி, சுப்ரியா 5-ம் வகுப்பு.


 காற்றாலை

எஃப்.ஏ பக்கங்கள்

காற்றாலையிலிருந்து மின்சாரம் எடுப்பதைப் பற்றிய பாடத்துக்காக, ஆசிரியர் உதவியுடன் பிளாஸ்டிக் மின் விசிறியை பேட்டரி மூலம் இயங்கவைத்துக்காட்டி மதிப்பீடு பெற்றேன்.

ஆனந்த வெங்கடேஷ் 5-ம் வகுப்பு.

பொம்மலாட்டம் 

எஃப்.ஏ பக்கங்கள்

மிழகக் கலைகள் பற்றி ஆசிரியர் பாடம் நடத்தியதும், நாங்கள் பொம்மலாட்டம் நடத்தத் திட்டமிட்டோம். முதலில் கதை ஒன்றை உருவாக்கினோம். அதில் இடம்பெறும் பாத்திரங்களை அட்டைகளில் தயார் செய்து கொண்டோம். பிறகு, வகுப்பறையில் பொம்மலாட்டம் நடத்தி அசத்தினோம். 

எஃப்.ஏ பக்கங்கள்

சுப்ரியா, சாவித்ரி, - 5-ம் வகுப்பு. 

- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சிக்கபடகாண்ட அள்ளி, தருமபுரி.

எங்கள் பள்ளி! 

எஃப்.ஏ பக்கங்கள்

ன்னுடைய தனித்த செயல்பாடாக ஒன்றைச் செய்ய நினைத்தேன். ஓவியம் வரைவதில் அதிக ஈடுபாடு எனக்கு உண்டு என்பதால், எங்கள் பள்ளியின் முகப்பை வரைந்து, என் ரசனைக்கு ஏற்ப வண்ணங்களைத் தீட்டினேன். அதை ஆசிரியரிடம் காட்டியபோது, பாராட்டி மதிப்பீடு அளித்தார்.

- வீ.அபிநயா 9-ம் வகுப்பு.

பாதுகாப்பான இந்தியா!

எஃப்.ஏ பக்கங்கள்

ந்தியாவின் வரைபடத்தை சார்ட்டில் வரைந்துகொண்டேன். அதன் அவுட்லைனில், துவரம் பருப்பில் பசை தடவி ஒட்டினேன். பிறகு, நம் தேசியக் கொடியில் இருக்கும் மூவர்ணத்தை வரைபடத்தில் தீட்டி, மதிப்பீடு பெற்றேன்.

ச. பார்கவி 8-ம் வகுப்பு.

 இனிக்கும் பலா!

எஃப்.ஏ பக்கங்கள்

ங்கள் ஊரின் சிறப்புகளில் ஒன்று பலாப்பழம். பலாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வரைந்தேன். அதன் பாகங்களைக் குறித்து, மதிப்பீடு பெற்றேன்.

தெ.சத்யா 9-ம் வகுப்பு.

 வண்ணத்துப்பூச்சி

எஃப்.ஏ பக்கங்கள்

பொதுச் செயல்பாடாக வண்ணத்துப்பூச்சி செய்ய திட்டமிட்டேன். கெட்டியான அட்டையில் வண்ணத்துப்பூச்சியை வரைந்து, அதன் அவுட்லைனில் வெட்டிக்கொண்டேன். எனக்கு, மர நிற வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் என்பதால், அந்த வண்ணத்தையே தீட்டினேன். ஆசிரியரிடம் காட்டி மதிப்பீடு பெற்றேன்.

- ச.பொன்னம்மாள் 7-ம் வகுப்பு


அவசர வீடு!

எஃப்.ஏ பக்கங்கள்

‘உங்கள் கற்பனைத்திறனைக் கொண்டு, இந்த வகுப்பறைக்குள் இருக்கும் பொருள்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு செயல்பாடு செய்ய வேண்டும். அதுவும், அரை மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்’ என்று ஆசிரியர் கூறியதும், சார்ட்டில் அழகான வீடு செய்து, மதிப்பீட்டைப் பெற்றேன்.

ம.தனக்கொடி, 9-ம் வகுப்பு.

புகை நமக்குப் பகை! 

எஃப்.ஏ பக்கங்கள்

புகை பிடிக்கும் பழக்கம், மனிதர்களின் உடலுக்குக்  கேடு விளைவிக்கும். ஒருவர் புகைப்பதால், அவருக்கும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் ஏற்படும் கேடுகளை விளக்கும் படம் வரைந்து ஆசிரியரிடம் காட்ட, பாராட்டி முழு மதிப்பீடு அளித்தார்.

- மா.சூர்யா 9-ம் வகுப்பு.

அரசினர் உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.

கண்ணாடி ஓவியம்!

எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

‘ஓவியக் கலை’ பாடத்துக்காக  கண்ணாடி ஓவியம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டோம். அதற்காக, கொடியில் பூக்கள் பூத்திருப்பதுபோன்ற ஓவியத்தை A4 ஷீட்டில் வரைந்துகொண்டோம். அதன் மேல் OHP ஷீட்டை வைத்து, ஓவியத்தின் அவுட்லைன் வரைந்தோம். பிறகு, கண்ணாடி ஓவியம் வரைவதற்கான வண்ணங்களைக் கொண்டு, பொருத்தமான வண்ணம் தீட்டினோம். OHP ஷீட்டுக்குப் பதில் கண்ணாடியை வைத்தும் வரையலாம். நாங்கள் வரைந்த ஓவியத்தை ஆசிரியரிடம் காட்டியபோது, புதிய முயற்சிக்கு வாழ்த்துகளையும் நல்ல மதிப்பீட்டையும் அளித்தார். அடுத்த முறை இன்னும் சிறப்பாக வரைய ஆலோசனைகளையும் கொடுத்தார். 

எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

- இ.பவித்ரா, பரிவாதினி 7-ம் வகுப்பு.

பட்டொளி வீசும் தேசியக்கொடி

எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

மது தேசியக்கொடியைத் துணியில் வரையத் திட்டமிட்டோம். அதற்காக எங்கள் ஓவிய ஆசிரியரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டோம். வெள்ளைத் துணியில் பென்சிலைக் கொண்டு தேசியக்கொடியை வரைந்துகொண்டோம். பிறகு, ஒவ்வொரு வண்ணமாகத் தீட்டினோம். தாளில் வண்ணம் தீட்டுவதை விடவும் துணியில் தீட்டுவது சவாலாக இருந்தது. துணியின் நிறம் வெண்மை என்றாலும், நடுவில் வெண்ணிறத்தைத் தீட்டினோம். அப்போதுதான் துணியின் நிறத்தை விட அடர்த்தியான வெண்ணிறமாக அது தெரிந்தது. நடுவில் ஸ்கெட்ச் பென் கொண்டு அசோகச் சக்கரம் வரைந்தோம். ஆசிரியரிடம் காட்டியபோது... பாராட்டி, நல்ல மதிப்பீடு அளித்தார். 

எஃப்.ஏ பக்கங்கள்
எஃப்.ஏ பக்கங்கள்

-தமிழன்பன், எம். இபானா 7-ம் வகுப்பு

அரசினர் உயர்நிலைப் பள்ளி, திருமுல்லை வாசல், கொள்ளிடம்.

காகித ராக்கெட்!

எஃப்.ஏ பக்கங்கள்

விண்வெளி தொடர்பான பாடத்துக்காக, நண்பர்கள் இணைந்து காகித ராக்கெட் செய்தோம். ராக்கெட்டின் பாகங்களைத் தனித்தனியே செய்து இணைத்து புதிய வகையில் உருவாக்கினோம். ஆசிரியரின் பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றோம்.

- கே.முருகன், எம்.ராம்ராஜ், எஸ்.நந்தகுமார், ஜி.விக்னேஷ், இ.லோகேஷ் -9-ம் வகுப்பு.


தொப்பிகள் தந்த மதிப்பீடு!

எஃப்.ஏ பக்கங்கள்

ங்கள் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து, கூட்டுச் செயல்பாடு ஒன்றைச் செய்தோம். அதன்படி நூலகரிடம் சென்று, பழைய செய்தித்தாள்களைப் பெற்றுவந்தோம். அதில் வித விதமான தொப்பிகளைச் செய்து மதிப்பீடு பெற்றோம்.

- 6-ம் வகுப்பு மாணவர்கள்.

வாட்டர் ராக்கெட்!

எஃப்.ஏ பக்கங்கள்

ள்ளிக்கு வரும் வழியில், தண்ணீர் பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துவந்தேன். அந்தத் தண்ணீர் பாட்டிலில் ராக்கெட் மாதிரியைச் செய்தேன். பிறகு, ஆசிரியரிடம் காட்டி எனக்குத் தெரிந்த விண்வெளி வீரர்கள் பற்றிய தகவல்களைக் கூறியதும் பாராட்டும் மதிப்பீடும் கிடைத்தது.

-எம்.ராம்ராஜ் 9-ம் வகுப்பு.

மின்னும் ராக்கெட்!

எஃப்.ஏ பக்கங்கள்

ண்ணீர் பாட்டிலில் ராக்கெட் மாதிரியைச் செய்து, ராக்கெட்டுக்குள் சிறிய பல்பை வைத்து, பேட்டரியால் இணைத்தோம். பிறகு, லைட்டை ஒளிரச் செய்து, ராக்கெட் விண்ணில் செல்வதைப் போலச் செய்துகாட்டினோம். ஆசிரியர் நல்ல மதிப்பீடு கொடுத்தார்.

-எம்.வினோத் குமார், வி.சூர்ய பிரகாஷ் 9-ம் வகுப்பு.


வேஸ்ட் கொடுத்த பூஸ்ட்!

எஃப்.ஏ பக்கங்கள்

ழைய காகிதங்களை ஒரு வாளியில் ஊறவைத்து, அரைத்து, கூழாக்கி, கிண்ணம், தட்டு போன்ற பொருள்களைச் செய்தோம். ஆசிரியர் பாராட்டி மதிப்பீடு அளித்தார்.

 ஏ.ஜெயஸ்ரீ, எஸ்.ஷர்மிளா, டி.கிருத்திகா, ஜி.தமிழ்மொழி, ஜெ.சிவலெக்ஷ்மி, 6-ம் வகுப்பு.

தேங்காய் உலகம்! 

எஃப்.ஏ பக்கங்கள்

ரண்டு கொட்டாங்குச்சிகள் எடுத்துக்கொண்டோம். அவற்றின் அகன்ற பகுதிகளை செல்லோ டேப்பால் ஒன்றாக இணைத்ததும், முழுத் தேங்காய் போல ஆகிவிட்டது. அதன்மேல் நீல நிறத் தாளை ஒட்டி உலக உருண்டை போல செய்துகாட்டி மதிப்பீடு பெற்றோம்.

-ஏ.ஜெயஸ்ரீ, ஜெ.சிவலெக்ஷ்மி 6-ம் வகுப்பு. 

அரசினர் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம். 

Preposition

எஃப்.ஏ பக்கங்கள்

Preposition பகுதிக்காக சார்ட்டில் மேஜையும் அதன்மேல் மின் விசிறி, விளக்கு உள்ளிட்டவற்றையும் வரைந்து, அதற்கேற்ற வாக்கியங்களை உருவாக்கி, மதிப்பீடு பெற்றேன்.

-எஸ்.சரண்யா 8-ம் வகுப்பு.

சூரியக் குடும்பம்!

எஃப்.ஏ பக்கங்கள்

சூரியக் குடும்பம் பாடத்துக்காக சார்ட்டில் சூரியன் மற்றும் கோள்களை வரைந்தேன். அதற்குப் பொருத்தமான வண்ணங்களைத் தீட்டி, ஆசிரியரிடம் காட்டி மதிப்பீடு பெற்றேன்.

வி.விஷ்வா 4-ம் வகுப்பு.

கிறிஸ்துமஸ் அட்டை!

எஃப்.ஏ பக்கங்கள்

தேசியத் திருவிழாக்கள் பாடத்துக்காக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான வாழ்த்து அட்டை தயார் செய்தேன். அதில், வாழ்த்தும் வாசகங்களை எழுதி ஆசிரியரிடம் காட்டி, மதிப்பீடு பெற்றேன்.

- ஸ்ரீகாந்த், 4-ம் வகுப்பு.


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நல்லம்பாக்கம்.

செயல்பாட்டுத் திருவிழா!

எஃப்.ஏ பக்கங்கள்

ங்களின் தனித்திறனை வெளிக்காட்டும் விதத்தில், அனைவரும் இணைந்து செயல்பாட்டுத் திருவிழா கொண்டாடினோம். 

விண்வெளி வீரர் போன்ற உருவங்களை வரைந்து,  வெட்டி எடுத்துக்கொண்டோம். அவர்களின் முகத்தில் எங்களின் போட்டோக்களை ஒட்டினோம். 

எஃப்.ஏ பக்கங்கள்

எங்கள் ஆசிரியர் கற்றுத்தந்ததுபோல, விதவிதமான முகமூடிகளைச் செய்தோம். அவற்றை அணிந்துகொண்டு எங்களின் நண்பர்களைப் பயமுறுத்தினோம்.

சார்ட், ஐஸ் குச்சி, சிறு பலகை உள்ளிட்டவற்றைக்கொண்டு பலவிதமான வீடுகளைத் தயார் செய்தோம்.

எங்களின் இந்தக் கூட்டுச் செயல்பாட்டுக்கு, ஆசிரியரின் பாராட்டும் மதிப்பீடும் கிடைத்தது. 

எஃப்.ஏ பக்கங்கள்


5-ம் வகுப்பு மாணவர்கள்.

ஊ.ஒ.தொ. பள்ளி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர்.

கணக்கு ரயில்

எஃப்.ஏ பக்கங்கள்

ணித பாடத்தில் வரும் வடிவங்களை, சார்ட்டில் வரைந்து, வெட்டி எடுத்துக் கொண்டோம். அவற்றில் வண்ணமிட்டு தொடர்வண்டி போல் ஒட்டி மதிப்பீடு பெற்றேன்.

-கார்த்திகா, 7ம் வகுப்பு.

சாலைப் பாதுகாப்பு

எஃப்.ஏ பக்கங்கள்

நான்கு வழிச் சாலைகள் அமைத்து, சாலைக் குறியீடுகளையும் மற்றும் வாகனங்களை நிறுத்தி, சாலை விதிகளையும் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கி மதிப்பெண் பெற்றேன்.

-வி.ரேணுகா, 8-ம் வகுப்பு.


சாலைக் குறியீடுகள்!

எஃப்.ஏ பக்கங்கள்

சாலைக் குறியீடுகள் வரைந்து,  வண்ணமிட்டு, வெட்டினோம்.  குச்சிகளில் அவற்றை ஒட்டி பின்பற்றப்படவேண்டிய அவசியம் பற்றிச் சொல்லி, மதிப்பீடு பெற்றேன்.

-இ.சாருமதி, 8ம் வகுப்பு.


அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி,  கண்ணமங்கலம்.

பசுமை உலகம்!

எஃப்.ஏ பக்கங்கள்

‘சுற்றுச்சூழல்’ பாடத்துக்கான செயல்பாடாக, முழுப்பந்தைப் பாதியாக வெட்டி, அதனுள் மணல் பரப்பி அதற்குமேல் பச்சைக் களிமண் ஒட்டி, அதற்கு மேல் சுழலும் காற்றாடி, மரம் உள்ளிட்டவற்றை ஒட்ட வைத்தோம். பசுமையான சூழலை உருவாக்கி, முழு மதிப்பீட்டைப் பெற்றோம்.

 - சி.காயத்ரி, மு.நித்தியகல்யாணி, பா.பாக்கியலெட்சுமி, 6-ம் வகுப்பு.


சூரியக் குடும்பம்!

எஃப்.ஏ பக்கங்கள்

மிழர் வானியல் பாடத்துக்காகப்் பந்துகளைக்கொண்டு சூரியக் குடும்பம் செய்தேன். பிறகு, ஒவ்வொரு கோள் பற்றியும் நான் சேகரித்த தகவல்களைக் கூறினேன். நல்ல மதிப்பீடு கிடைத்தது.

-மு.பரத்குமார், - 8-ம் வகுப்பு.


ஐவகை நிலங்கள்!

எஃப்.ஏ பக்கங்கள்

ளிமண், அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் மரங்கள், மண் ஆகியவற்றைக் கொண்டு, ஐவகை நிலங்களைச் செய்தோம். மதிப்பீட்டைப் பெற்றோம்.

- பா.ராஜேஸ்வரி, பா.சுவேதா, க.சந்துரு, ம.வாசுகி, ர.பாலமுருகன், 3-ம் வகுப்பு.

சேர்மன் மாணிக்க வாசகம்  ந.நி.பள்ளி, தேவகோட்டை.

புத்தகம் தந்த மதிப்பீடு!

எஃப்.ஏ பக்கங்கள்

மிழ் மொழியின் சிறப்பே, அதில் உள்ள பொருள் நிறைந்த சொற்களே. அதனால், நமக்குத் தெரியாத புதிய சொற்களைத் தெரிந்துகொள்ளும் விதமாக ஆசிரியர் வைத்திருந்த ‘அபிதான சிந்தாமணி’ கலைக்களஞ்சியத்தைப் பெற்று, பல புதிய சொற்களைக் கண்டறிந்து அவற்றை மற்ற மாணவர்களுக்கும் கூறினேன். ஆசிரியர், உற்சாகமாக மதிப்பீடு அளித்தார். 

எஃப்.ஏ பக்கங்கள்

பா.முருகேஸ்வரி,

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நரசிங்கக்கூட்டம், கடலாடி, ராமநாதபுரம். 

சாண எரிவாயு! 

எஃப்.ஏ பக்கங்கள்

சிறிது மாட்டுச் சாணத்தை எடுத்து நீரில் கரைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றினேன். அதை இறுக்கமாக மூடி, மூன்று நாள்கள் வைத்திருந்தேன். அதன் மூடியில் துளையிட்டு, பலூன் ஒன்றை மாட்டினேன். மூன்று நாள்களுக்குப் பிறகு, அதைப் பள்ளிக்குக் கொண்டு வந்தபோது, பலூனில் வாயு நிறைந்திருந்தது. இதுவே, சாண எரிவாயு என்று விளக்கிக் கூறி ,ஆசிரியரிடம் மதிப்பீடு பெற்றேன்.

- எஸ்.சரத்ராஜ் அரசு, 5- ம் வகுப்பு.


மாநகராட்சி தொடக்கப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்

நன்றி! 

சுட்டி விகடன் எஃப்.ஏ பகுதியில் சிறப்பாகப் பங்கேற்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய நன்றி!