Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்

அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்

ஆயிஷா - இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்

ஆயிஷா - இரா.நடராசன்

Published:Updated:
அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்
அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்

அன்பு நண்பர்களே,

நான்தான் கடமான் எழுதுகிறேன். என்னை  இரட்டைக் கொம்பன் என்றும் அழைப்பார்கள்.  ஆங்கிலத்தில் சாம்பர் டீர் (Sambar Deer) என்று பெயர். பல்வேறு காரணங்களால் இனி, புவியில் மிச்சமின்றி அழியப் போகிறோம் என்கிற அச்சத்தில் எழுதுகிறேன். நீங்கள்தான் எங்கள் இனத்தைக் காப்பாற்ற வேண்டும்.

தெற்கு ஆசியா கண்டத்தின் அடையாளங்கள் பல. அதில் நாங்களும் உண்டு. இமயமலை முதல் தெற்கு பர்மா, தாய்லாந்து வரை ஒரு காலத்தில் பெருங்கூட்டமாக நாங்கள் வாழ்ந்தோம். மலாய்த் தீவுகள், தென் சீனம், தைவான் இங்கெல்லாம் நாங்களே தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டோம். மழைக்காடுகளின் அடர்ந்த பிரதேசங்களின் நீர் நிலைக்கு அருகிலேயே கூட்டமாக வசித்தோம்.

கிடா வகை (ஆண்) மான்களுக்கு முன்னந்தலையின் இரண்டு புறமும் நீண்டு கிளை விட்ட கொம்பும் கூடவே வளரும் சிறு கொம்புமாக இரட்டைக் கொம்புகள் எங்கள் தனி அடையாளம். உடல் முழுக்க ஒரே நிறத்தில் (சாம்பல்) பளபளக்கும் மான்கள் இனம், உலகிலேயே நாங்கள்தான். முதுமலை, பழனிமலைப் பகுதியில் மட்டுமே, ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் சுற்றியவர்கள் ஏழு, எட்டு என சரணாலயங்களில் காட்சிப் பொருளாகி விட்டோம்... நண்பா.

அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரும்பாலும் புற்கள், புதர்செடிகள், பழங்கள்தான் எங்கள் உணவு,  காடுகளின் மேய்ச்சல் நிலங்களிலேயே உள்ளது. வங்காளப் புலிகள், சிறுத்தைகள் முதல் ஓநாய் கழுதைப் புலிகள் வரை பலவற்றின் பிரதான உணவாகவும் நாங்களே இருந்தோம். தமிழ் அகராதியைப் புரட்டிப் பார்த்தால், ‘கட மான்களின் வாழிடம் என்பதால், அவை காடுகள் என அழைக்கப்படட்டும்’ என்றார் கணியன் பூங்குன்றனார். காடு என்ற சொல்லே எங்களால்தான் ஏற்பட்டது எனும் அளவுக்கு, ஒரு காலத்தில் நாங்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தோம்.

மற்ற மான் வகைகளைப் போலன்றி பெண் கட மான் தங்கள் உயிரைக் கொடுத்தாவது வேட்டையாடும் பெரிய விலங்குகளிடமிருந்து தங்கள் குட்டிகளைக் காப்பாற்றும். ஓர் உண்மை என்ன தெரியுமா? காலங்காலமாக புலி, சிங்கம் எனப் பலவற்றால் வேட்டையாடப்பட்டும் எங்கள் இரட்டைக் கொம்பன் மான் இனம் அழியவில்லை. ஆனால், மனிதர்களால் சந்தைப் பொருளாகி வேட்டையாடப்பட்டதால், முற்றிலும் அழிந்து வருகிறோம்.

கத்திகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் கைப்பிடிகளாக, சூட்கேஸ், பயணப்பொதி பைகள் என, எங்களது உறுப்புகளால் பல பயன்பாட்டுப் பொருள்கள் உருவாகி லட்சம் லட்சமாக விலைபோகின்றன என்பதால்,  வேகவேகமாக அழிக்கப்பட்டுவிட்டோம் நண்பா. எங்கள் தோலினால் செய்யப்பட்ட உறை, தைக்கப்பட்ட படுக்கை சூடேறுவதே இல்லை என்பன போன்ற சிறப்புச் செய்திகளுக்குப் பின்னே எங்கள் இனத்தின் பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

உலக வனவிலங்கு பாதுகாப்புக் குழுமம், எங்கள் கட மான் இனத்தைப் பேரழிவை நோக்கி வேகமாகத் தள்ளப்படும் வன விலங்குப் பட்டியலில் சேர்த்துள்ளது.

இனி, உங்கள் சந்ததிதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் நண்பா! காடுகளை அழித்தல், வன விலங்குகளை அழித்துச் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருள்களை வாங்குதல் இவற்றுக்கு எதிராகப் பிரசாரம் செய்யுங்கள். வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி வேட்டையாடத் தடை விதிக்கப்பட்ட காட்டு உயிரான எங்கள் இனத்தை வேட்டையாடுவது குற்றம் என்பதைப் புரியவையுங்கள்.

எங்களை அழியவிடாமல் காப்பாற்றுங்கள் நண்பா!

இந்தப் பொறுப்பை உங்களை நம்பி ஒப்படைக்கும்

கடமான்