Published:Updated:

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

Published:Updated:
ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்
ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ணக்கம் நண்பர்களே...

தேர்வுகள் முடிந்துவிட்டன. பள்ளிக்கூடத்துக்கு டாட்டா... பாடப் புத்தகங்களுக்கும் டாட்டா. இனி, இரண்டு மாதங்களுக்குக் கொண்டாட்டம்தானே? இந்தக் கோடை விடுமுறையைக் குதூகலமாக்குவதில்  சுற்றுலாவுக்கு முக்கியமான பங்கு உண்டு. நீங்கள் எந்த ஊருக்குச் செல்ல இருக்கிறீர்கள்?

சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமே அல்ல. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்லும்போது, நமது முன்னோர்களின் கலாசாரம், வாழ்வியல் முறைகளை அறியலாம். மலை, காடு, அருவி எனச் செல்லும்போது, இயற்கையின் பிரமாண்டத்தையும், வசீகர அழகையும், அதைப் பாதுகாக்கவேண்டிய கடமையையும் உணரலாம். தீம் பார்க், அறிவியல் அரங்கம், கோளரங்கம் போன்ற இடங்களில் பல புதுமைகளைக் கண்டு களிக்கலாம்.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமது பயணத்தில், கட்டடங்களையும் இயற்கைக் காட்சிகளையும் கண்டுகளிக்கும் அதே நேரத்தில், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் கவனிக்க வேண்டும்.

உங்கள் கைகளில் தவழும் இந்த இணைப்புப் புத்தகம், தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா இடங்கள் பற்றிய நல்லதொரு அறிமுகமாக அமையும். அப்புறம் என்ன? அப்பா, அம்மாவிடம் காட்டுங்கள்; அழகாக ஒரு பயணத் திட்டம் போடுங்கள். மகிழ்ச்சியாக, ஏராளமான அனுபவங்களையும் பெற்று வாருங்கள்!

அன்புடன், ஆசிரியர்

வண்ணத்துப்பூச்சி பூங்கா!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

திருச்சி என்றாலே மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை என டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால், சமீபகாலமாக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வந்துபோகும் இடமாக மாறி உள்ள ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவை மிஸ் பண்ணிடாதீங்க.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

திருச்சி வழியே பாய்ந்தோடும், கொள்ளிடம்-காவிரி ஆறுகளுக்கு இடையே எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும்  இந்த வண்ணத்துப் பூச்சிப் பூங்கா, சுற்றுலாப் பிரியர்கள் மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்களும், ‘ஜாலியாக வந்து ஒரு செல்ஃபி எடுக்க சூப்பரான இடம்’.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

வனப்பகுதிகள் குறைந்துவரும் இந்தச் சூழலில் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இது உருவாக்கப்பட்டது. ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே இயற்கை அழகு மிகுந்த பகுதியில், சுமார் ரூ.9 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை தமிழ்நாடு அரசு வனத்துறை பராமரித்து வருகிறது.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை முறைகள் குறித்து, பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு குட்டித் திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், வண்ணத்துப்பூச்சிகளின் வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசத்தும் அரிட்டாபட்டி! 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

றவைகள், தன் குஞ்சுகளைக் கட்டி அணைத்து, பத்திரமாகப் பாதுகாப்பதைப் போல, ஊரைச் சுற்றி மலைகளாக இயற்கைப் பாதுகாப்புகொண்ட இடம், அரிட்டாபட்டி. மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமிய கல்வெட்டுகள், 78-ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்து குடைவரைச் சிவன் கோயில் உள்ளது. சிவன் சந்நிதியின் வலது புறம் வலம்புரி விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இடது பக்கம் லகுலீசர் சந்நிதி உள்ளது. 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

இந்த லகுலீசர் சிலை, தமிழ்நாட்டில் இரண்டு இடத்தில்தான் உள்ளது. ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.  அடுத்தபடியாக, அரிட்டாபட்டியில் தான் உள்ளது. லகுலீசர் 12 வயதில் இறந்தவராம். சுடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கும்போது மீண்டும் உயிர் பெற்றுவந்தவராம். இவர் தன் சீடர்கள்மூலம் இந்தியாவில் பல இடங்களில் நல்வழிக் கருத்துகளைப் பரப்பி வந்துள்ளார் இவரது மதம் பாசுவத சைவம்.

இவரின் சொந்த ஊர், குஜராத். அரிட்டாபட்டியில் அழகுற குடைவரைக் கோயிலில் குடிகொண்டுள்ளார். கர்பகிரகத்தில் இருக்கும் சிவன்,  மேற்குப் பார்த்து அமர்ந்திருப்பார். அதனால், மிகச்சிறப்பு சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. இங்கு, திருமலை நாயக்கர் வேகம்பிள்ளைக்குக் கொடுத்த செப்பேடு  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அரிட்டாபட்டி மலையில், சுமார் 250 நீர் ஊற்றுகள் உள்ளன.

கலிஞ்சமலை, நாட்டார்மலை, ஆப்டான்மலை, ராமாயி மலை, கழுகுமலை, தேன் கூடு, கூகைக்கத்தி மலை என்று ஏழு மலைகள் உள்ளன.  தேன்கூடு மலையில், ரேப்ட்டார்ஸ் என்கிற பெரிய வகைப் பறவை இனத்தைக் காணலாம். சிவப்புக் கழுத்து ஃபால்கன், கேஸ்ட்ரால், பூட்டட் ஈகிள், சார்டட் நெக் ஈகிள், தேன் பருந்து, வெள்ளைக்கண் பருந்து, இந்தியன் ஸ்பாட்டடு ஈகிள், இந்தியன் ஈகிள் ஹவுள்  என  எண்பதுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

அரிட்டாபட்டியில், பறவைகள் மட்டுமன்றி பல அறிய வகை உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. காரணம், இங்கு இயற்கையின் சூழல் மிகவும் அருமையாக அமைந்துள்ளது. உயரமான மலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டு, இயற்கை உயிரினங்களுக்குத் தேவையான இட வசதியைக் கொண்டுள்ளன.

அரிட்டாபட்டியில் நடக்கும் பாரம்பர்ய உணவுத் திருவிழா புகழ்பெற்றது. வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கனோர் வந்து, கண்மாய்களில் மீன்களைப் பிடித்து பாரம்பர்ய உணவுகளைச் சமைத்துண்டு மகிழ்வார்கள்.

கீழக்குயில்குடி! 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

துரைக்கு மேற்கில், நாகமலைப் புதுக்கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது, கீழக்குயில்குடி.  பள்ளி மாணவர்கள் மதுரையில் காணவேண்டிய முக்கியமான இடம். மிகவும் ஃபேமஸ் ஆகவில்லை என்றாலும் சுற்றுலாத்துறையின் வசம் உள்ளது. இங்குள்ள மலைக்கு, `சமணமலை' என்று பெயர். தமிழ்நாட்டில் வேற எந்த மலையும் சமணமலை என்று கூறப்படுவதில்லை. ஜிலு ஜிலுனு ஆலமரங்களுக்கு இடையே நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

2,300ஆண்டுகளுக்கு முற்பட்ட `சமணசமய'த்தின் பெருமை, இந்த மலையால் சிறப்புடன் எடுத்துக்காட்டப்படுகிறது. இதற்குச் சான்றாக இந்த மலையின் உச்சியில் உள்ள ஆடு உரிச்சான் பாறையில் தமிழ்ப் பிராமி கல்வெட்டு உள்ளது. இது கி.மு இரண்டாம் நூற்றாண்டைச்  சேர்ந்தது.

இந்த மலையில்  பேச்சிப்பள்ளம், மாதேவிப்பெரும்பள்ளி, செட்டிப்பொடவு என மூன்று சிறப்பு மிக்க வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

பேச்சிப்பள்ளம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த சுனையாகும். இதன் அருகே உள்ள பாறையில், ஒன்பது சமண திருஉருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை மகாவீரர், பார்சுவநாதர், கோமாதீஸ்வரர் (பாகுபலி) ஆகியோரின் சிற்பங்களாகும். 

மாதேவிப் பெரும் பள்ளி, பேச்சிபள்ளத்துக்குச் சற்று மேலாக பாறையில் கி.பி 9-ம் நூற்றாண்டில் ஒரு சமணக் கோயில் கட்டப்பட்டிருந்தது. 'சிரவணபெலகோலா' எனும் ஊரின் மூல சங்கத்திலிருந்து இந்தப் பள்ளிக்குச் சமணத்துறவிகள் வந்துசென்றனர் என்பதற்கு கல்வெட்டு அடையாளங்கள் உள்ளன.

செட்டிப்பொடவு, சமணமலையின் தென்மேற்குச் சரிவில் சிற்பங்களுடன் ஒரு குகை காணப்படுகிறது. ஊர் மக்கள் இதை செட்டிப்பொடவு என்று அழைக்கின்றனர். குகையின் முகப்பில் மகாவீரர் தோற்றமும் உள்ளது. மேலும், குகை வட்டமாகக் குடையப்பட்டுள்ளது. அதன் தென்சுவரில் ஐந்து சமணகல்திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள மூன்று முக்குடை அண்ணல் உருவங்களும், இடது ஓரத்தில் ஒருபெண் தெய்வம் சிங்கத்தின் மீது அமர்ந்து, எதிரில் யானைமீது அமர்ந்துவரும் அசுரனோடு ஆவேசமாகப் போரிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த மலை சமணர்களால் ஓர் உறைவிடப்பள்ளி நடத்தப்பட்டுள்ளது. இதில், பல்வேறு ஊர்களிலிருந்து ஆசிரியர்களும், மாணவர்களும் வந்து பயின்றனர் என்பது இங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.

கீழக்குயில்குடியில், நீதிமன்றம் ஒன்று  இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. கட்டடம் சிதிலம் அடைந்தாலும் அது நினைவுச்சின்னமாக இன்றளவிலும் உள்ளது இதன் சிறப்பு.

குளு குளு வரலாற்றைத் தெரிந்துகொள்ள, மதுரை கீழக்குயில்குடிக்குச் சென்று வாருங்கள்.

ரெங்கமலை!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

கோடைகாலம் வந்தாச்சு. பள்ளிகளுக்கு லீவு விடுற நேரமும் வந்தாச்சு, சுட்டிகளுக்கு இனி, ஜாலிதான். 'சுதந்திரம்... சுதந்திரம்' என்று கூவியபடி ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்கள். கரூர் சுட்டிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்ட சுட்டிகளும் ஆன்மிகம், மலையேற்றம், அழகிய பறவைகளின் காட்சி, ஜில்லென்ற மூலிகைக் காற்று என்று அத்தனை விஷயங்களையும் ஒரே பயணத்தில் அடைய வேண்டுமென்றால், தயங்காமல் கரூர் டு திண்டுக்கல் சாலையில், இரண்டு மாவட்ட எல்லையில் உள்ள ஆலமரத்துப்பட்டி அருகே இருக்கும் ரெங்கமலைக்கு ஓர் எட்டு போய் வரலாம். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரெங்கமலை, 3,500 மீட்டர் உயரம் கொண்டது.  

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

காலை எட்டு மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை மலையேற அனுமதி உண்டு. ரெங்கமலை அடிவாரத்தில் ஈஸ்வரன் கோயில் இருக்கிறது. மலையில், கல்லினால் செதுக்கி செதுக்கி படிகள் அமைத்திருக்கிறார்கள். 2,000 மீட்டரில் மல்லீஸ்வரர் கோயில். அதைத் தொடர்ந்து 3,500 மீட்டரில் உள்ள மலை உச்சிப் பகுதியில் முனீஸ்வர சாமி வீற்றிருக்கிறார். 10 மீட்டர் ஏற ஆரம்பித்தாலே, மூலிகை வாசம் காற்றில் கரைந்தபடி கைகோத்து வந்து நம் நாசிக்குள் புகுந்து நறுமணத்தையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. அதோடு, மயில், புறாக்கள், புள்புள் பறவைகள், சிட்டுக்குருவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் நம் தலையைத் தட்டியபடி பறந்துபோவது, அந்த மலையேற்ற அனுபவத்தில் கூடுதல் சுகம். முக்கால் மணி நேரம் மலையேறினால், மல்லீஸ்வரர் கோயில் வருகிறது. அங்கே, கொஞ்ச நேரம் அமர்ந்து இளைப்பாறலாம். அங்கிருந்து கீழே பார்த்தால், கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்வையில் படுகின்றன... பசுமை போர்த்திய வயல்வெளிகள். அங்கே அமர்ந்து, கையோடு கொண்டுபோகும் கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டால், சொர்க்கம்தான்.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்
ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

இப்படி இயற்கையை ரசித்தபடியும் சுவாசித்தபடியும் நடந்தால், திண்டுக்கல் மாவட்டத்தைப் பார்த்த திசையில் ஒரு கிலோமீட்டர் தூரம் கீழே இறங்கினால், தீப ஸ்தம்பம் இருக்கிறது. திருவண்னாமலையில் தீபம் ஏற்றுவதுபோல இங்கே கார்த்திகை மாதங்களில் தீபம் ஏற்றுவார்கள். அந்த இடத்தில் இருந்து கீழே பார்ப்பது அவ்வளவு ஆனந்தத்தைத் தருகிறது.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

டேனிஷ் கோட்டை!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில், கி.பி.1620-ல் டேனிஷ் கோட்டையை டென்மார்க் நாட்டவர்கள் கட்டி, ஆட்சி புரிந்திருக்கிறார்கள். ‘அலைபாடும் நகரம்', 'கிழக்குக் கடற்கரையின் ராணி’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட தரங்கம்பாடியில்தான் தமிழில் முதன்முதலில் அச்சடிக்கப்பட்ட பைபிள் வெளியானது. டேனிஷ் கோட்டை அருகே கடலைப் பார்த்தபடி, மாசிலாநாதர் கோயில் அமைந்துள்ளது.  இத்தனை சிறப்புவாய்ந்த இங்கு, டேனிஷ் கோட்டை, கவர்னர் மாளிகை, நுழைவுவாயில், பழைமைவாய்ந்த தேவாலயம், கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள மதில், அனைத்தையும் டென்மார்க் அரசு ஒரு குழுவை அனுப்பி ஆய்வுசெய்து, சுமார் 600 கோடி செலவில் புதுப்பித்தது.  இப்போது, அனைவரையும் கவரும் வகையில் மின்அலங்கார விளக்குகள் புடைசூழ டேனிஷ் கோட்டை ஜொலிப்பதால், சுற்றலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஆயுளைப் பெருக்கும் அமிர்தகடேஸ்வரர் :

 நாகை மாவட்டம், திருக்கடையூரில், அபிராமி உடனுறையும் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.  மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 சீரஞ்சீவி வரமளித்த தலம் என்பதாலும், ஆயுளை அதிகரிக்கும் என்பதாலும் இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆயுஷ்ய ஹோம திருமணங்கள் நடக்கின்றன.  சாதாரண  விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை பயணிகள் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளன. எனவே, புராதன கோயிலைத் தரிசிக்கவும் அருளாசி பெறவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். 

தியாகராஜர் கோயில் : 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

திருவாரூர் தேர் அழகு, ஏழு ஏக்கரில் அமைந்த தெப்பக்குளமும் அழகு. ஏழு ஏக்கரில் அமைந்துள்ளது தியாகராஜர் கோயில். தெப்பக்குளத்தில்,  குழந்தைகள் ஜாலியாகப் படகு சவாரிசெய்யும் வசதியும் உண்டு.  கலைநுட்பத்துடன் கட்டப்பட்ட கோயிலைக் கண்டுகளிக்கவும், தெப்பக்குளத்தின் அழகை படகில் சென்று ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர்  வருகிறார்கள். 

ரஞ்சன்குடி கோட்டை!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, ரஞ்சன்குடி கோட்டை. இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.

இந்தக் கோட்டையின் மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள் கொண்டவையாக வெவ்வேறு உயரத்தில் உள்ளன. மேலிருந்து பார்க்கும்போது இந்தக் கோட்டை அரைக்கோள வடிவத்தில் இருக்கும்.

கோட்டையைப் பிற்காலப் பாண்டிய மன்னின் வம்சாவளியில் வந்த தூங்கானை மரவன் என்ற பாண்டிய மன்னன் கட்டினான். இதை 1600 வருடங்களுக்கு முன்பு கட்டியுள்ளார். இந்தக் கோட்டை பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டதற்குச் சான்றாக,  பாண்டியனின் சின்னமான மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், விஜய நகர மன்னர், நாயக்கர்கள் ஆகிய இந்தப் பகுதியை ஆட்சிசெய்தனர். அதன் பின்னர் 1680-ல் முஸ்லிம் படையெடுப்பில், இந்த பகுதியைக் கைப்பற்றினார்கள். பிறகு, முதல் நவாப் டெல்லி முகமதுகான் அவர்கள் இந்தக் கோட்டையை சீரமைத்து கட்ட ஆரமித்தார்.

முகமது அலி ஓய்வுபெற்ற பிறகு, ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இந்தக் கோட்டை வந்தது. 1946-ல் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுபாட்டுக்கு வந்தது. பிறகு 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை இந்திய தொல்லியல் துறை கட்டுபாட்டில்தான் இந்தக் கோட்டை உள்ளது.  இதில் உள்ள மண்டபத்தின் அருகில் சுரங்கப்பாதை உள்ளது, போர் உச்சகட்டம் அடையும் போது அரசர் தப்பிச்செல்வதற்காக சுரங்கம் அமைக்கபட்டுள்ளது. இந்தச் சுரங்கத்திலிருந்து நகரின் மையப்பகுதிக்கும், ஊரின் எல்லைக்கும், செல்வதற்குச் சுரங்கப்பாதைகள் உள்ளன. இதை, தற்போது தொல்லியல்துறை  மூடிவைத்துள்ளது.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

அதே போல தண்டனைக் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் காலத்தில், குற்றம் செய்தவர்களை இந்த தண்டனைக் கிணற்றில் போட்டுவிடுவார்கள். இந்த தண்டனைக் கிணறு உயரமாக இருக்கும். இந்தக்  கோட்டையில் தற்காப்பு வழியும் உள்ளது.இவை மட்டும் இல்லாமல் கொடிமேடை, பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு ஆகியவை மேல் கோட்டையில் அமைந்துள்ளன. கீழ் கோட்டையில், நுழைவுவாயிலுக்கு அருகில் ஒரு மண்டபம், எதிர்ப்புறம் தண்டனைக் கிணறு,பள்ளிவாசல் ஆகியவை உள்ளன. இதற்கு தென்புறத்தில், வட்ட வடிவமான மூன்று தடயங்களும், தற்காப்பு வழியும் உள்ளன.

உள்கோட்டையில் இரண்டு  குளமும், முரசு மேடை, பள்ளிவாசல், உப்பளங்கள் ஆகியவை உள்ளன. காலப்போக்கில் உப்பளப் பாத்திகள் எல்லாம் மண்மூடிப்போய் அழிந்துள்ளன. இந்தக் கோட்டையில் குடிநீர் கிணறு மற்றும் ஒன்பது கிணறுகள் உள்ளன. இவற்றில் உள்ள கிணறுகள் எல்லாம் மண்மூடிக் காணப்படுகிறது.மழைநீர் சேகரிப்புக் குளமும் உள்ளது. இந்தக் கோட்டையைப் பற்றிய கல்வெட்டு வாலிகண்டபுரத்தில் உள்ள வாலிஸ்வரன் ஆலயத்தில் உள்ளது.

சுட்டீஸ்களே, பெயர் பெற்ற, வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையைப் பற்றி அறிந்துகொள்ள, இப்போதே கிளம்பத் தயாராகுங்கள்!

உ.வே. சாமிநாத ஐயர் நினைவு இல்லம்!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ம் செம்மொழித் தமிழ், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பத்துப்பாட்டு எட்டுத்தொகை, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு உள்ளிட்ட மேற்கணக்கு நூல்களையும், 1,500 ஆண்டுக்கு முற்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்னும் பெருங்காப்பியங்களையும் ஊர் ஊராகச் தேடிச் சென்று அல்லும் பகலும் அயராது உழைத்துப் புதுப்பித்தவர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். அவருடைய நினைவு இல்லம் திருவாரூர் மாவட்டம் உத்மதாணபுரத்தில் உள்ளது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள உத்தமதாணபுரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அரசு சார்பில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழின் மோகத்தையும், தமிழரின் பெருமையையும் அறிந்துகொள்ள பள்ளி மாணவர்கள், வெளியூரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வந்து செல்கிறார்கள். 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்
ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

தமிழ்த் தாத்தாவின் பிறந்தநாளான பிப்ரவரி 19-ம் தேதியன்று அரசால் உத்தமதாணபுரத்தில் விழா நடத்தப்பட்டுவருகிறது.

தஞ்சை பெரியகோயில்

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் என்றும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படும்  இந்தக் கோயில், உலகப் பாரம்பர்யச் சின்னம் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. சோழர்களின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டு 2010-வது ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்டது.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பெரியகோயிலைக் காண்பதற்குத் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.  பெரிய கோயிலில் உள்ள நந்தி, ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்டது.

அடவி நயினார் அணை!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அடவி நயினார் அணைக்கட்டு அமைந்துள்ளது. குற்றால அருவிக் குளியலுக்குச் சுற்றுலா வரும் பயணிகள், சென்று பார்க்கவேண்டிய எழில் கொஞ்சும் இடம் இது. பூங்கா இருப்பதால், குழந்தைகள் விளையாடி மகிழ முடியும். குற்றால சீசனில், இந்த அணைக்கட்டு நிரம்பி வழியும். ஜன நெருக்கடி இல்லாமல் இதமான சாரலை அனுபவித்தபடி இந்த அணையில் இருந்து வெளியேறும் நீரில் குளிப்பதற்காகவே, கேரளாவில் இருந்து அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். 2003-ல் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த அணையை நம்பி 7,500 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

குற்றாலம் எக்கோ பார்க்:

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

தென்காசியில் இருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது, எக்கோ பார்க். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில், மே மாதம் இறுதியில் தொடங்கும் சீசன், ஆகஸ்ட் மாதம் வரையிலும் களைகட்டும். சீசன் இல்லாத சமயத்திலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த பார்க். சிற்பங்கள், நீர் ஊற்றுகள், பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற புல்தரையில் மழைத்துளிகள் விழுந்துகிடக்கும் அழகை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. அத்துடன், தாமரைத் தடாகம், ரோஜாத் தோட்டம், சிறுவர்கள் விளையாடி மகிழ உபகரணங்கள் என ரம்மியமான இடம். இதில் 5 கி.மீ தூரத்துக்கு அழகை ரசித்தபடியே நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதி இருப்பது, பெரியவர்களைக் கவரும் அம்சம்.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து, தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதனால், அவர் தூக்கிலிடப்பட்டார். அதன் பின்னர், அவரது கோட்டையையும் ஆங்கிலேய அரசு அழித்தது. அந்த இடத்துக்கு அருகில் கோட்டைக் கொத்தளம், கொலு மண்டபம், ஜக்கம்மா கோயில் போன்றவை 6 ஏக்கர் பரப்பளவில் 1974-ல் ஏற்படுத்தப்பட்டன. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இடம்,  சுதந்திரப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டது. வரலாற்றின் மீது ஆர்வம்கொண்டவர்கள் மட்டுமல்லாது, வரலாற்றைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமான இடம் இது. கட்டபொம்மனின் வரலாறு, ஓவியங்களாக இந்த மண்டபத்தில் தீட்டப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு.

மணப்பாடு!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ணப்பாடு ‘ஏழைகளின் கோவா’ என வர்ணிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் ஆக்ரோஷமானது குமரி. மிகவும் அமைதியானது ராமேஸ்வரம். ஆனால், இந்த இரண்டும் கலந்த குணத்துடன் இருப்பதுதான் மணப்பாடு கடற்கரையின் ஸ்பெஷாலிட்டி. இங்குள்ள கடலின் ஒருபுறம் அலைகள் ஆரவாரமின்றி அமைதியாகவும், மறுபுறம் ஆக்ரோஷத்துடனும் இருக்கும். இதன் காரணமாக, இங்கு கடந்த சில வருடங்களாக அலைச்சறுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டன. 'பீச் வாலிபால் போட்டி' நடத்தவும் இந்தக் கடற்கரை உகந்த இடம். மணப்பாடு மீனவ கிராமத்தில், போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று உள்ளது. ஏசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி இந்த ஆலயத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால், இந்தக் கிராமத்தை ‘சின்ன ரோமாபுரி’ என்றும் அழைக்கிறார்கள். எழில் கொஞ்சும் கடற்கரை, வெளிநாட்டுப் பாணியிலான கட்டடங்கள் போன்றவை இந்தக் கிராமத்துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

பாரதியார் மணி மண்டபம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், கரிசல் மண்ணுக்கு வரலாற்றுப் பெருமைகள் அநேகம் இருக்கின்றன. விடுதலை தாகத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்து, தன் பாடல்களால் சுதந்திரக் கனலை மூட்டிய பாரதி பிறந்த மண். இங்குதான்  பாரதியின் மணிமண்டபம் அமைந்துள்ளது. இதனை அமைப்பதற்கு ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி பெரும் முயற்சி எடுத்துள்ளார். இந்த மண்டபத்தில், பாரதியாரைப் பற்றிய குறிப்புகள், அவர் அரசியல் தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது, வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

தாவரவியல் பூங்கா

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கடற்கரை, காந்தி சிலை, பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் என்பதோடு நின்றுவிடுகிறார்கள். அதைத்தாண்டி, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்தமான இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

தாவரவியல் பூங்கா:

இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த தாவரவியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. 22 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு அரியவகை மரங்களையும் தாவரங்களையும் கொண்டிருக்கும் இந்தப் பூங்கா, 1826-ல் தொடங்கப்பட்டது. பூங்காவினுள் நுழைந்ததும், பசுமை போர்த்தப்பட்டு அமைதியும் ரம்மியமும் இழைக்கப்பட்டிருப்பதை உணர முடியும். மீன் கண்காட்சியகம், இசைக்கு ஏற்றாற்போல நடனமாடும் நீரூற்று, பாறைகளுடன்கூடிய ஜப்பான் தோட்டம், அல்லிக் குளம் போன்றவைகள் அவசியம் கண்டு ரசிக்க வேண்டியவை. இதனுடன், குழந்தைகளைக் கவரும் மற்றொரு சிறப்பம்சம், இங்கு இயங்கும் ரயில்தான். இதில் அமர்ந்து கொண்டு ஒட்டுமொத்த பூங்காவையும் சுற்றிவந்து ரசிக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கல்மரங்கள், பூங்காவின் மையப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் இங்கு வேளாண்துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தப் பூங்கா, புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டரில் இருக்கிறது. ரயிலில் வருபவர்கள், ரயில் நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம்.

சுண்ணாம்பாறு படகு இல்லம் 

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில், 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சுண்ணாம்பாறு படகு இல்லம். படகில் பயணம் செய்தால், சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் இடத்தில் சிறு தீவைப்போல இருக்கும் பாரடைஸ் பீச்சை அடையலாம். கடற்கரைத் தீவும், அழகிய மணல்பரப்பும் அற்புதமான அனுபவத்தை நமக்குத் தருவது நிச்சயம். பலூன் ரைடு, 'மிக்கி மவுஸ் பெட்' ஆகியவை உள்ளன. இங்கு மற்றொரு சிறப்பம்சம் படகு வீடு. மூன்று ஏசி அறைகளைக்கொண்ட இந்தப் படகு வீடு, பகல் முழுவதும் பாரடைஸ் பீச்சை சுற்றி வந்து, இரவில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அதனுள்ளேயே உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்ட அனைத்தும் உண்டு. அதிகாலையில் சுண்ணாம்பாற்றில் மிதந்து கொண்டே சூரிய உதயத்தைக் காணலாம்.

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

ஊசுடு ஏரி!

ஜாலி டூர்! போலாம் ரைட்ட்ட்ட்

புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, ஊசுடு ஏரி. சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஏரிதான்,  புதுச்சேரியின் அனைத்து ஏரிகளைவிடவும் பெரியது. புதுச்சேரி அரசும், தமிழக அரசும் இந்த ஏரியைப் பறவைகள் சரணாலயமாக அறிவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான நான்கு மாதங்களில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பறவைகள் இங்கு வருகைதருகின்றன. குறிப்பிட்ட சில பறவைகள், இனப்பெருக்கத்துக்காகவே இங்கு வருவது குறிப்பிடத்தக்கது. சறுக்குமரம், ஊஞ்சல் என குழந்தைகள் விளையாடுவதற்கான நிறைய அம்சங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ஏரியின் கரைகளை ஒட்டி இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் அமர்ந்து ரம்மியமான சூழலையும், விதவிதமான பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். இங்கும் படகு சவாரி உண்டு என்பதால் படகில் ஏறி, ஏரியை வலம் வரலாம்.

அட்டை: சி.சுரேஷ்பாபு

தொகுப்பு:
சி.பா.ஆனந்தகுமார், சே.சின்னதுரை, எம்.திலீபன், ஏ.ராம், பி.ஆண்டனிராஜ், ஜெ.முருகன்.

படங்கள்:
தே.தீட்ஷித், க.விக்னேஷ்வரன், ராபர்ட், கே.குணசீலன்,     எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், எஸ்.தேவராஜன்.