Published:Updated:

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...
பிரீமியம் ஸ்டோரி
புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

கிங் விஸ்வா

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

கிங் விஸ்வா

Published:Updated:
புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...
பிரீமியம் ஸ்டோரி
புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

திடீரென்று ஒரு நாள், நம்மைக் கட்டுப்படுத்த அப்பா, அம்மா, ஆசிரியர்கள், பிரின்சிபல் என்று யாருமே இல்லாமல், நாம் மட்டுமே தனியாக இருந்தால், எப்படி இருக்கும்? இப்படி ஓர் ஆசை, சிறுவயதில் நம் அனைவருக்குமே நிச்சயமாக இருந்திருக்கும். அந்த ஆசையையே ஓர் அட்டகாசமான காமிக்ஸ் தொடராகப் படைத்துவிட்டார், ஐரோப்பாவின் தலைசிறந்த காமிக்ஸ் படைப்பாளர்களில் ஒருவரான ஃபேபியன் வெல்மன் (Fabien Vehlmann). 

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

ஐவர் அணி: கதையின் ஆரம்பத்தில், பெற்றோர்கள் இருவருமே வேலைக்குப் போவதால், வீட்டில் எப்போதும் தனித்தே இருக்கும் ஈவான், வித்தியாசமான கண்டுபிடிப்புகளைச் செய்ய விரும்பும் லைலா, எப்போதுமே படிப்பு படிப்பு என்று பயந்து கொண்டே இருக்கும் கமீல், தனித்து வாழும் பெற்றோரின் ஒரே மகனான சுட்டிப்பையன் டெர்ரி, பெற்றோர்களே இல்லாமல் விடுதியில் வாழும் தனிமை விரும்பி டோட்ஜி என, ஐந்து சுட்டிகள் அறிமுகம் ஆகிறார்கள். அன்றிரவு வித்தியாசமாக ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.

மறுநாள் காலையில், இந்த ஐவரைத் தவிர அந்த நகரத்தில் வேறு யாரையுமே காணவில்லை. பயம், குழப்பம், கோபம், ஏக்கம் எனப் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகும் இந்த இளையர்கள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு குழுவாக உருவாகிறார்கள். டோட்ஜி இந்தக் குழுவுக்குத் தலைவனாக இருந்து வழிநடத்திச் செல்கிறான். இந்த ஐவர் அணி, ஈவானின் வீட்டுக்குச் சென்று அங்கே தங்க முடிவெடுக்கிறது.

ஆபத்தும், அறிவுத்திறனும்: நகரத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கச் செல்லும் டோட்ஜியும் லைலாவும் காண்டாமிருகங்களால் துரத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில், ஈவானின் வீட்டில் ஒரு புலி புகுந்து விடுகிறது. தங்களது அறிவாலும், அதிர்ஷ்டத்தாலும் தப்பிக்கும் ஐவர் குழு,  விலங்குக் காட்சிச் சாலையே இல்லாத தங்கள் நகரத்தில் எப்படி இவ்வளவு விலங்குகள் வந்தன என்பதையும் யோசிக்கிறார்கள். பின்னர், அங்கிருந்து தப்பித்து, ஈவான் அப்பாவின் கம்பெனிக்குச் சென்று அங்கே தங்கி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...வித்தியாசமான கதை, வித்தியாசமான களம்:  வழக்கமாக, இப்படி ஒரு குழுவாகச் செயல்படும் கதைகளில், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட திறன் இருப்பதாகத்தான் அமைத்திருப்பார்கள். உதாரணமாக, ஒருவர் பலசாலியாக, ஒருவர் புத்திசாலியாக, ஒருவர் விசேஷமான சக்திகளைக் கொண்டவராக என்று இருக்கும். ஆனால், இந்தக் கதையில், ஐவரும் வழக்கமான சிறுவர்களாகவே இருப்பது ஒரு வித்தியாசமான அம்சம். மேலும், இதுபோன்ற தருணங்களில், எல்லா சிறுவர்களுமே ஜாலியாக இருக்கவே நினைப்பார்கள். ஆனால், இந்தக் கதையில் அனைவருமே பொறுப்பாக, அடுத்தவருக்கு உதவ நினைக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பது, கதாசிரியரின் திறமையைக் காட்டுகிறது.

ஏழு வயது வரையிலான சிறுவர்களுக்காக என்று எழுதப்பட்ட இந்த காமிக்ஸ் தொடர், இப்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவராலும் படிக்கப்பட்டு, லட்சக்கணக்கில் விற்பனையாகி, திரைப்படமாகவும் வந்திருப்பது ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்கிறது: கதையில் வருவதைப் போல எதிர்காலம், சுட்டிகளின் கையில்தான் இருக்கிறது!

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

கதாசிரியர்: ஃபேபியன் வெல்மன் (45) Fabien Vehlmann (30.01.1972) பிரான்ஸ் அஸ்டெரிக்ஸ், லக்கி லூக், இஸ்நோகுட் போன்ற மகத்தான கதாபாத்திரங்களை உருவாக்கியவர், ரெனே குஸ்சீனி. ஐரோப்பாவின் தலைசிறந்த காமிக்ஸ் இதழான ‘ஸ்பிரோ’-வின் எடிட்டரான ஈவான் டெல்பார்(ட்) ஃபேபியன் வெல்மனைப் பற்றிச் சொல்லும்போது, இந்த நூற்றாண்டின் குஸ்சீனி இவர்தான் என்று சொன்னார். தன்னுடைய 24-வது வயதிலிருந்து காமிக்ஸ் கதைகளைப் படைத்து வரும் ஃபேபியன், இதுவரை வாங்காத விருதுகளே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், இவர் ஓர் அசகாய சூரர். இவரது முதல் காமிக்ஸ் கதையான ‘கிரீன் மேனர்’ ஒரு மனோதத்துவ திரில்லர். தனது ஒரு கதையிலிருந்து மற்றொரு கதைக்கு பாணியில், களனில், கதை சொல்லும் முறையில், ஓவியங்களில் என்று பலவகையில் வித்தியாசம் காட்டுபவர் ஃபேபியன்.

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

ஓவியர்: ப்ரூனோ கஸோட்டி (46) Bruno Gazzotti (16.08.1970) பெல்ஜியம் காமிக்ஸ் பிரியர்களான பெற்றோர்களுக்குப் பிறந்த ப்ரூனோ, சிறுவயது முதலே டின்டின் முதலிய காமிக்ஸ் கதைகளைப் படித்தே வளர்ந்தார். அதனாலேயே ஓவியங்கள் மீது ஆர்வம் அதிகரித்து, முழுநேர காமிக்ஸ் ஓவியரானார். 21 வயதில் ‘ஸ்பிரோ’ காமிக்ஸ் இதழில் முழுநேர ஓவியராகச் சேர்ந்த இவர், மிக விரைவிலேயே, பிரான்சின் நம்பர் 1 காமிக்ஸ் ஹீரோவான ஸ்பிரோவின் கதைகளுக்கு வரைய ஆரம்பித்தார். இவர் ஓவியங்கள் வரைந்த ‘சோடா’ என்ற காமிக்ஸ் தொடர், லட்சக்கணக்கில் விற்பனையாகிவருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து படைத்துவரும் இந்த ‘அலோன்’ என்ற தொடரில், மொத்தம் 20 பாகங்கள் இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.

புத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...

கதை: Alone -The Vanishing (part-1)

கதாசிரியர்: ஃபேபியன் வெல்மன் Fabien     Vehlmann)

ஓவியர்: ப்ரூனோ கஸோட்டி (Bruno Gazzotti)

மொழி: ஆங்கிலம் (பிரெஞ்ச் மொழியிலிருந்து).

வயது: 7 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.

வெளியீடு: 2014 (ஆங்கிலத்தில் முதல் கதை), 2017 (7 புத்தகங்கள்)

பதிப்பாளர்: Cinebook

புத்தக அளவு: 21.7 X 28.3 Inches

பக்கங்கள்: 56 பக்கங்கள்கொண்ட முழு வண்ண காமிக்ஸ் தொடர்

விலை: 507 ரூபாய்

கதை: தனித்து விடப்பட்ட 5 சிறுவர்களின் சாகசங்கள்

கதை வரிசை: மொத்தம் 10 புத்தகங்கள் (7 மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).

சிறப்புகள்:
ஐரோப்பியாவின் தலைசிறந்த காமிக்ஸ் விருதான அங்குலேம் திருவிழாவின் 9-12 வயதுக்கான குழந்தை களுக்கான ஆகச் சிறந்த காமிக்ஸ் முதல் பல உயரிய விருதுகள்.

சிறப்பு அம்சம்:
ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோர் ஏன் இவ்வளவு கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள் அவர்கள் இல்லாமல், தான் மட்டுமே இருந்தால், எவ்வளவு சுதந்திரமாக, ஜாலியாக இருக்கும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். உலகில் வெறும் சிறுவர்கள் மட்டுமே இருந்து, மற்ற அனைவரும் மறைந்து விட்டால், எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஓர் எண்ணத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த காமிக்ஸ் தொடர்.

குறிப்பு: இந்த காமிக்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முழு நீள ஆக்‌ஷன் திரைப்படம் பிரெஞ்ச் மொழியில் வெளி வந்திருக்கிறது.