Published:Updated:

பள்ளிக் கட்டடம் இடிந்துபோனதால் இ-சேவை மையத்தில் பாடம் பயிலும் மாணவர்கள்!

6 மாதங்களாகப் பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்படாததால் மாணவர்கள் இ-சேவை மையக் கட்டடத்தில் ஒதுங்கி பாடம் பயின்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே தனிச்சயம் ஊராட்சியில் உள்ளது கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி. 1967-ம் ஆண்டு முதல் ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிய தொடக்கப்பள்ளிக்கு அதன் அருகிலேயே கடந்த 1999-ல் புதியதாக 4 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் எழுப்பப்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பின் ரூ.76,000 மதிப்பீட்டில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி காலை நேரத்தில் ஆசிரியர், வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதில் 3 மாணவர்களின் தலை மற்றும் உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனால் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் இருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டு இ-சேவை மையக்கட்டடத்தில் தற்காலிகமாக வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உட்காரவைக்கப்பட்டனர்.  

இதற்கு பரமக்குடி கல்விமாவட்ட அதிகாரிகள், கடலாடி ஒன்றிய ஆணையாளரால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியும் புதிய கட்டடம் கட்டப்படவில்லை. தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் மற்றும் 28 மாணவர்கள் உள்ள இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படாத நிலையில் இ-சேவை மையக் கட்டடத்திலேயே இயங்கி வருவதால் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், உரிய கட்டடம் இல்லாததால் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் குறைந்துவிட்டது. புதிய கட்டடம் கேட்டு அதிகாரிகளிடத்தில் பெற்றோர்களும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் பலமுறை வலியுறுத்தியும் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகப் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணாபுரம் கிரமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism