Published:Updated:

நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்
நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்

கார்க்கி பவா

பிரீமியம் ஸ்டோரி

ங்களுக்குக் கிரிக்கெட் பிடிக்குமா? இன்றைய இந்திய கிரிக்கெட் அணியில் யாரை உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ? அது யாராக இருந்தாலும் அவர்களின் இன்ஸ்பிரேஷன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் சச்சின் டெண்டுல்கர்.  

நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்

சச்சின் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது அவரது வயது 16. அவரைப் பார்த்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பலர் அவருடனேயே விளையாட முடிந்தது. அவர் ஓய்வு பெற்றபின் வரும் வீரர்களுக்கும் அவரே ரோல் மாடல். கிட்டத்தட்ட 3 தலைமுறைகளைத் தனது கவர் டிரைவால் கவர்ந்திழுத்த ஒருவரைப் பற்றி படம் எடுப்பதென்றால் சாதாரண விஷயமா? அதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது “சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்” படக்குழு.  நிறைவான ஒரு படத்தைத் தந்ததற்காக இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கைன்(James Erskine) பாராட்டப்பட வேண்டியவர். எமோஷனல் படம் என்பதால், இசைக்கும் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையென்றால் சொல்லவும் வேண்டுமா? 

நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்

நிஜத்தில் எடுக்கப்பட்ட படக்காட்சிகள், சச்சின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், அற்புதமாக எழுதப்பட்ட திரைக்கதை என ஒரு பக்கா பேக்கேஜாக வந்திருக்கிறது திரைப்படம். சச்சின் வாழ்ந்த வீட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள். சச்சின் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய தெருக்களில் ஷூட் செய்திருக்கிறார்கள். “எல்லாமே நிஜம். என்னால் 5 வயது சிறுவன் ஆக முடியாதது மட்டுமே சிக்கல்” எனச் சிரிக்கிறார் இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள். சச்சினின் அப்பா ரமேஷ் இறந்துவிட்டார். அவர் சச்சினைப் பற்றி சொன்ன நிஜமான காணொலியையும் சேர்த்திருக்கிறார்கள்.” அதில் சச்சின் இந்தியக் குடும்பங்கள் அனைத்துக்கும் சொந்தமானவன். அதுதான் எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்கிறார் ரமேஷ் டெண்டுல்கர்.

இந்தப் படம் நாம் இதுவரை பார்த்து ரசித்த வழக்கமான படம் இல்லை. மற்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் போலவும் இல்லை. சச்சின் என்ற தனிமனிதனுக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இடையே இருக்கும் உருக்கமான உணர்ச்சிகளைக் குவியலாக்கித் தந்திருக்கும் படம். ஒரு கையில் பாப்கார்னுடனும் இன்னொரு கையில் குளிர்பானத்துடனும் இதைப் பார்க்கக் கூடாது. கிட்டத்தட்ட உலககோப்பையில் இறுதிப்போட்டியின் கடைசி 10 ஓவரை பார்ப்பது போன்ற ஒரு மனநிலை வாய்க்க வேண்டும்.  படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உற்சாகமும் ஊக்கமும் நிறைந்து கிடக்கின்றன.    

நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்

சச்சின் தோன்றும் முதல் காட்சியே தியேட்டரைக் கண்ணீரால் நனைத்துவிடுகிறது. ஒவ்வொரு ரசிகனும் கைகளால் தன் கண்ணின் ஓரத்தில் நிற்கும் கண்ணீரைச் சந்தோஷத்துடன் சுண்டிவிடுவதைக் காண முடிகிறது. சச்சின் சம்பாதித்ததிலே மிகப்பெரிய மதிப்பு கொண்டவை அந்த ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்தான்.

சச்சினின் முதல் மேட்ச், அவர் அடித்த முதல் சிக்ஸ், சென்னையில் 1998-ல் நடந்த டெஸ்ட் மேட்ச்சில் ஷேன் வார்னேவின் பந்துகளை விளாசித் தள்ளியது என ஏகப்பட்ட ஸ்பெஷல் தருணங்களை அப்படியே காட்டியிருக்கிறார்கள். “இதெல்லாம்தான் யூ ட்யூபில் இருக்கே” என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதைக்  கச்சிதமாக, உணர்ச்சிமயமிக்க  அனுபவமாக மாற்றித் தருவதில்தான் இப்படம் ஜெயித்திருக்கிறது.  

நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்

ஒரு சினிமாவாக, ஆவணப்படமாக இதன் நிறை குறைகளை அலசுவது முக்கியம் அல்ல. ஒரு தனிமனிதர், தன் திறமையால் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை எடுத்துக்கொள்வதுதான் முக்கியம். சச்சினை விடவும் நிறைய சாதனைகளைச் செய்த, தனது துறையில் உச்சத்தைத் தொட்ட இன்னொரு மனிதன் இந்தத் தலைமுறைக்குக் கிடையாது. ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதும், தான் ஈடுபடும் துறையை, தனது குடும்பத்தை, தனது நாட்டை எவ்வளவு நேசிக்க வேண்டும் என்பதையும் அழகாய்ச் சொல்கிறது ‘சச்சின்: தி பில்லியன் ட்ரீம்ஸ்.’   

நீங்களும் சச்சின்தான்! - படம் சொல்லும் பாடம்

சச்சின் அடித்த ஒவ்வொரு சிக்ஸையும் நாம் ஒவ்வொருவரும் அடிக்க முடியும். அந்த சிக்ஸ் கிரிக்கெட்டில் தான் அடிக்க முடியும் என்பதில்லை. ஓவியத்தில், இசையில், பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், பணிபுரியும் அலுவலகத்தில், ஏன் வீட்டில் கூட அடிக்க முடியும். சிக்ஸ் அடிக்க கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது அவசியமில்லை. அவரவர் துறையில் அவரவர் அடையும் வெற்றிதான் சிக்ஸர்.

நீங்கள் என்னவாக இருந்தாலும் உங்களாலும் சச்சின் ஆக முடியும். அதை முதலில் நீங்கள் நம்ப வேண்டும். ஒருநாள் உலகமும் நம்பும். சச்சின் அதைத்தான் செய்தார் என்கிறது இந்தப் படம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு