Published:Updated:

துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பிரீமியம் ஸ்டோரி
துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!

‘‘சின்னப் பசங்க ஒண்ணு சேர்ந்து பெரிய விஷயத்தைப் பண்ணிட்டு இருக்காங்க பார்த்தியா?’’ என்று ஊர் முழுக்க ஒரே பேச்சு.        

துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!

என்ன விஷயம்னு கேட்டால், பள்ளி மாணவர்கள் ஒண்ணு சேர்ந்து நெகிழிப் பைகளை (அதாம்பா... பிளாஸ்டிக் பைகள்) ஒழிக்க முயற்சி எடுத்திருக்காங்க எனத் தெரிஞ்சது. அது என்ன முயற்சி எனத் தெரிஞ்சுக்க, ஈரோட்டில் உள்ள கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப் பள்ளிக்குப் போனேன். அங்கே இருந்த மாணவ நண்பர்கள், ‘நான் எனது சமுதாயத்தை நேர்மையான சமுதாயமாக மாற்றுவேன்’ என்ற செய்தியைச் சொல்லும் ஆங்கில வாசகம் அச்சிடப்பட்ட துணிப்பைகளை ஆர்வத்துடன் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள்.   

துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!
துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!

பள்ளியின் முதல்வர் சுப்புலட்சுமி, “நெகிழிப்பைகளைப் பயன்படுத்தாதீங்கன்னு சொல்லிட்டு இருக்கிறதைவிட அதற்கான தீர்வுக்கு நாமே முன்னுதாரணமாக இருப்போம்னு துணிப்பைகளைத் தயார்செய்து நகரம் முழுக்க கொடுக்க முடிவு செய்தோம். இதுவரை ஈரோடு நகரின் நாற்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளுக்குப் போய் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட துணிப்பைகளைக் கொடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வர்றோம்” என்றார். ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் அன்றும் துணிப் பைகளைக் கொடுப்பதற்காக நண்பர்கள் டீம் கிளம்ப, நானும் அவர்களுடன் சென்றேன். ஸ்கூல் வேன் ஈரோடு மார்க்கெட் பகுதியில் போய் நின்னுச்சு. ஒரு கடையில் இருந்து காய்கறிகளை பிளாஸ்டிக் பையில் வாங்கிட்டு வந்தவரை ஒரு மாணவி நிறுத்தி அன்புடன், ‘‘அங்கிள், பிளாஸ்டிக் பையில் கொண்டுபோனா இந்தக் காய்களுக்கும் நல்லதில்லே. இதைச் சமைச்சு சாப்பிடும் உங்களுக்கும் நல்லதில்லே. தூக்கிப்போடும் பிளாஸ்டிக் பையால் நம்ம மண்ணுக்கும் நல்லதில்லே’’ என்று சொல்லியபடி அவரிடமிருந்து பிளாஸ்டிக் பையை வாங்கிக் கொண்டு அதற்குபதிலாகத் துணிப்பையைக் கொடுத்தார்.    

துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!

ஒரு சில நொடிகள் திகைத்த அவர் பிறகு புன்னகையுடன், ‘‘ஆமாம் நானும் படிச்சிருக்கேன். ஆனால், வெளியே கிளம்பும்போது பையை எடுத்துக்கணுங்கறதை மறந்துடறேன். இனிமே எப்போ கிளம்பினாலும் உன் முகமும் பேச்சும்தான் ஞாபகம் வரும். நன்றிம்மா’’ என்றபடி துணிப்பையை வாங்கிக்கொண்டார்.      

துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!
துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!

அதேபோல நிறைய பேரிடம் கொடுத்து, பிளாஸ்டிக் பைகளின் தீமைகளைச் சொன்னாங்க. அந்த மாணவ நண்பர்களுக்கு ஒரு சல்யூட் வெச்சுட்டு, மார்கெட்டில் அம்மா சொன்ன கீரையை வாங்கித் துணிப்பையில் போட்டுக்கிட்டுக் கிளம்பினேன்.

துணிப் பைக்கு ஓகே சொல்வோம்!

வா.ரியாசக்தி, கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு