Published:Updated:

நாலும் தெரிஞ்சிப்போம்!

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்

பிரீமியம் ஸ்டோரி

 அடடா...  லைட் போன்  

நாலும் தெரிஞ்சிப்போம்!
நாலும் தெரிஞ்சிப்போம்!

சாலையில், பேருந்தில், வீட்டில் என எங்கே பார்த்தாலும் மனிதர்கள் தலை கவிழ்ந்தே இருக்கிறார்கள். காரணம், ஸ்மார்ட்போன். எந்நேரமும் போனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்மார்ட்போன்களின் வருகையால்,  நன்மைகள் இருக்கும் அளவுக்குத் தீமைகளும் உருவாகின்றன. இதைக் கருத்தில்கொண்ட சீன நிறுவனம், ‘லைட் போன்’ ஒன்றை அறிமுகம்செய்கிறது. ஏடிஎம் கார்டு போன்று இருக்கும் இந்த போனில், 2ஜி நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். போனில், கேமரா இல்லை. இன்டர்நெட்டும் பயன்படுத்த முடியாது. ஆனால், ஒருமுறை சார்ஜ் செய்தால், மூன்று வாரங்களுக்கு பேட்டரி நீடிக்குமாம். ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட விரும்புகிறவர்களுக்கு, இந்த போன் மிகவும் பிடிக்கும் என்கிறது அந்த நிறுவனம். இந்திய மதிப்பில் இதன் விலை 7,000 ரூபாய்.

மவுசு ஏறிய மவுஸ்!  

நாலும் தெரிஞ்சிப்போம்!
நாலும் தெரிஞ்சிப்போம்!

ணிப்பொறியோடு வால் இணைந்த மவுஸைப் பயன்படுத்துவது எல்லாம் பழசாகிப்போச்சு. வால் இல்லாத, விரலில் அணிந்து இயக்கும் மவுஸுக்குத்தான் இப்போது மவுசு. இதை ஒரு மோதிரம்போல உங்கள் விரலில் அணிந்துகொண்டால் போதும். டெஸ்க் டாப், லேப்டாப் என எல்லாவற்றையும் எளிதாக இயக்கலாம். https://www.youtube.com/watch?v=bz6TCRq7JUs

வானவில் மனிதர்!  

நாலும் தெரிஞ்சிப்போம்!


யது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ரசிக்கும் விஷயங்களில், வானவில்லும் ஒன்று. இந்த வானவில்லை, நாம் விரும்பும் இடத்துக்குக் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?

நாலும் தெரிஞ்சிப்போம்!இதை நிஜமாக்கியிருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த கேப்ரியல் டாவ் (Gabriel Dawe). வெவ்வேறு வண்ண நூல்களைக்கொண்டு, செயற்கையான வானவில்லை உருவாக்குவதில் கேப்ரியல் வித்தைக்காரர். இதுவரை, 35 செயற்கை வானவில்களைப் பல்வேறு இடங்களில் உருவாக்கி ட்ரெண்ட் செய்திருக்கிறார். சமீபத்தில், ஓஹியோ மாகாணத்தில் உள்ள, ‘தி கிரேட் கேலரி ஆஃப் பொலேடோ’ மியூசியத்தில் இவர் ஏற்படுத்திய செயற்கை வானவில், இணையத்தில் செம வைரல். மியூசியத்துக்கு வருபவர்கள், இவரின் நூல் வானவில்லைப் பார்த்துச் சொக்கிப்போகிறார்கள். இதேபோல தங்களுக்கும் ஒரு வானவில் உருவாக்கித் தருமாறு, பெரிய பெரிய நடசத்திர ஹோட்டல்களின் உரிமையாளர்களிடமிருந்து கேப்ரியலுக்கு அழைப்புகள் குவிகின்றன.

வாயிலே போட்ட கோல்!

நாலும் தெரிஞ்சிப்போம்!
நாலும் தெரிஞ்சிப்போம்!


ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் போன்ற உலகக் கால்பந்தாட்டச் சூரர்கள் எல்லாம் ஓடி ஓடி, வியர்க்க வியர்க்க, ‘கோல்’ அடித்துச் சாதனை புரிகிறார்கள் என்றால், நின்ற இடத்திலேயே கோல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார், கிறிஸ்டியன் கின்னர்  (Christian Kinner). தீவிர கால்பந்து விளையாட்டுப் பிரியரான இவர், 2017ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். யார் அதிக நேரம் இடைவிடாமல் ‘கோல்’ என்ற வார்த்தையை உரக்கக் கத்துவது என்பதுதான் போட்டி. 80 டெசிபலுக்கு, மேல் சத்தம் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதிமுறை. இந்தப் போட்டியில், பங்கேற்றவர்களை எல்லாம் தெறிக்கவிட்டு, 43.56 நொடிகள் வரை மூச்சுவிடாமல் ‘கோ..............ல்’ என்று சத்தமிட்டுச் சாதனை படைத்துள்ளார், கின்னர். அதன் வீடியோ லிங்க்... https://www.youtube.com/watch?v=LkkwtHfUX6E

நாலும் தெரிஞ்சிப்போம்!

அ.ஜாவித் அஹ்மத், மீனாட்சி இராமசாமி மேல்நிலைப் பள்ளி, தத்தனூர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு