பிரீமியம் ஸ்டோரி

சாக்லேட்டைப் பிடிக்காதவங்க ரொம்ப ரொம்ப அபூர்வம். பாப்பா, பாட்டி, அப்பா, ஆன்ட்டி என ஏ டு இசட் எல்லோரையும் கவரும் சக்தி சாக்லேட்டுக்கு உண்டு. அந்த சாக்லேட்டையே ஏ டூ இசட் வகைகளில் தயாரிக்கிறாங்க. அவற்றைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க...

Artisanal Chocolates     

ஆல்பபெட் சாக்லெட்!

ரு தச்சர் மரப்பொருளில் செதுக்குவது மாதிரி, சாக்லேட் கலைஞர்களால் மிகவும் அழகழகான, நுட்பமான உருவங்களை வரைந்து செய்யும் சிறிய வகை சாக்லேட் இது.

Bonbon     

ஆல்பபெட் சாக்லெட்!

து பிரஞ்சு வகை சாக்லேட். இதன் பாரசீகப் பெயர் பான்பான் டி சாக்லேட் (Bonbon de Chocolat). மேல் பகுதி ஓடு மாதிரி இருக்கும். இதனை Truffle என்றும் குறிப்பிடுவார்கள்.

Couverture Chocolates  

ஆல்பபெட் சாக்லெட்!


துவும் பிரஞ்சு வகை சாக்லேட்தான். இதன் பொருள், ‘மூடுவது’. கொக்கோ வெண்ணெய்யை அதிகமாகச் சேர்த்துத் தயாரிப்பார்கள்.

Dragee   

ஆல்பபெட் சாக்லெட்!

பார்ப்பதற்கு நம்ம ஊர் குலோப்ஜாமூன் போல இருக்கும். பாதாம் பருப்பு சேர்த்துச் செய்த உருண்டையை, சாக்லேட் கலந்த சர்க்கரையில் முக்கி எடுப்பார்கள்.

Enrobing Chocolates    

ஆல்பபெட் சாக்லெட்!

ன்ரோபர் எனப்படும் கருவியால் சாக்லேட்டின் வெளிப்புறத்தில் வேறொரு சாக்லேட்டை வைத்து ஓடு உருவாக்கும் இதுவும் பிரஞ்சு வகை சாக்லேட்தான்.

Flavoured Chocolates   

ஆல்பபெட் சாக்லெட்!

காபி, எலுமிச்சை, ஆரஞ்சு, மின்ட் எனப் பல்வேறு சுவைகளைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் சாக்லேட் வகை.

Ganache    

ஆல்பபெட் சாக்லெட்!

து மிகவும் மென்மையான சாக்லேட். கேக், பிரெட் போன்றவற்றின் மேல் பகுதியாகத் திரவ நிலையில் இருக்கும் சாக்லேட்டில் முக்கி எடுப்பார்கள்.

Hot Chocolates  

ஆல்பபெட் சாக்லெட்!

து கொழுப்பு நீக்கப்பட்ட கொக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் சூடான பால் சேர்ப்பார்கள். இது முதலில் சுவிஸ்ட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது.

Infused Chocolates    

ஆல்பபெட் சாக்லெட்!

ன்ஃப்யூசன் என்றால், ஒரு பதார்த்தத்திலிருந்து மற்றொரு பதார்த்தமாகச் சுவையை மாற்றுவது. இந்த முறையில் தயாரிக்கப்படுவது இன்ஃப்யூஸ்டு சாக்லேட் எனப்படுகிறது.

Jujubies  

ஆல்பபெட் சாக்லெட்!

வை மக்காச்சோள சிரப் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவை 1920-ம் ஆண்டில் உருவான சாக்லேட் வகை. கடிப்பதற்குச் சற்றே கடினமாக இருக்கும்.

Kastanjes  

ஆல்பபெட் சாக்லெட்!
ஆல்பபெட் சாக்லெட்!

செஸ்நட் (Chestnut) எனப்படும் ஒரு வகை சுவைமிகு கொட்டையைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் சாக்லேட் இது.

Liquid Chocolates    

ஆல்பபெட் சாக்லெட்!

வை தாவர எண்ணெய்யைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் சாக்லேட். பிதுக்கிப் பயன்படுத்தப்படும் சாக்லேட் வகை. பெரும்பாலும் வேகவைக்கப்படும் கேக் வகைகளில் பயன்படுத்துவார்கள்.

Manon 

ஆல்பபெட் சாக்லெட்!

வை பட்டர்ஸ்காட்ச் சுவையில் இருக்கும். இதில் சேர்க்கப்படும் சாக்லேட், வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் இருக்கலாம். இதன் மேல் அக்ரூட் பருப்பும் சேர்க்கப்படும்.

Nougat   

ஆல்பபெட் சாக்லெட்!

முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் பால் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் சாக்லேட். பாதாம் பருப்பும் சேர்க்கப்படும்.

Orange Slice Candy    

ஆல்பபெட் சாக்லெட்!

ம்ம ஊர் ஆரஞ்சு மிட்டாய் போல ஆரஞ்சுத் துண்டு வடிவில் வெட்டப்பட்டுச் சர்க்கரையில் முக்கி எடுக்கப்படும் சாக்லேட்.

Praline  

ஆல்பபெட் சாக்லெட்!

து பெல்ஜியத்தில் தோன்றிய சாக்லேட் வகை. வேர்க்கடலை சேர்த்துத் தயாரிக்கப்படும் சாக்லேட்.

Quaker Chewy   

ஆல்பபெட் சாக்லெட்!

து வெண்ணெய், வேர்கடலை மற்றும் ஓட்ஸ் தானியத்தால் செய்யப்பட்ட சாக்லேட் சிப்ஸ்.

Rocher 

ஆல்பபெட் சாக்லெட்!

வை பிரஞ்சு வகை சாக்லேட். வெள்ளரி, பாதாம் பருப்புகளைச் சேர்த்துத் தயாரிப்பார்கள்.

Semi Sweet Chocolates  

ஆல்பபெட் சாக்லெட்!

பாதி இனிப்பு, பாதி கசப்பு சுவைகொண்ட சாக்லே. 35% சாக்லேட் லிக்கரும் கொக்கோ வெண்ணைய்யும் கலந்தது.

Truffle 

ஆல்பபெட் சாக்லெட்!
ஆல்பபெட் சாக்லெட்!


ந்து போன்ற வடிவில் தயாரித்து சாக்லேட் ஈரப்பதம் காயும் முன்பு தேங்காய்த் துருவல், சர்க்கரை மற்றும் பருப்புத் துண்டுகளில் முக்கி எடுப்பார்கள்.

Unsweetened Chocolates   

ஆல்பபெட் சாக்லெட்!

னிப்பே இல்லாத 100% சாக்லேட் லிக்கரில் தயாரிக்கப்படும் சாக்லேட். சர்க்கரை நோயாளிகளுக்காகவே தயாரிக்கப்படுவது.

Vanilla Chocolates  

ஆல்பபெட் சாக்லெட்!


வெனிலாச் சுவையுடன் விதவிதமாக தயாரிக்கப்படும் சாக்லேட்.

White Chocolates   

ஆல்பபெட் சாக்லெட்!

ந்த வகை சாக்லேட் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதில் கொக்கோ சேர்க்கப்படாது. பால் மூலம் தயாரிக்கப்படுகிறது.

Xocolatt    

ஆல்பபெட் சாக்லெட்!

து சாக்லேட்டின் மாயன் கால வார்த்தை. இந்த சாக்லேட் மிளகு மற்றும் சோளம் கலந்து தயாரிக்கப்படுவது.

York Peppermint Patties    

ஆல்பபெட் சாக்லெட்!

தன் உள்ளே இருக்கும் பெப்பர்மெண்ட்டின் சுவையே அலாதி.  

Zero    

ஆல்பபெட் சாக்லெட்!

தன் சிறப்பு சாக்லேட்டுக்கு மேலிருக்கும் வெள்ளை கோட்டிங்தான்.

ஆல்பபெட் சாக்லெட்!

வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு