பிரீமியம் ஸ்டோரி
படகு வீடு!

‘படகு வீடு’ என்றால் தண்ணீரில் மிதக்கும் வீடு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், படகுகளே வீடுகளாக மாறியிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஊரில் ஒரு வீடு மட்டும் கப்பல் போல இருந்தால், அது சாதாரண விஷயம். ஆனால், ஊரில் உள்ள அத்தனை வீடுகளுமே படகுகள் போல காட்சியளிப்பது ஆச்சர்யம்தானே. அந்த அதிசய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்வோமா ஃப்ரெண்ட்ஸ்?   

படகு வீடு!

வடக்கு பிரான்ஸின் ‘இங்கிலீஷ் சேனல்’ கடற்கரையில் அமைந்திருக்கிறது, ஈக்வின் ப்ளேஜ் (Equihen Plage) என்கிற மீனவக் கிராமம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை 3,000-க்கும் குறைவுதான். இங்கு வேறு எந்த விசேஷமும் இல்லாவிட்டாலும், படகுகள் போல அமைந்திருக்கும் இந்த வீடுகளே சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்கின்றன.   

படகு வீடு!

விடுமுறை நாள்களில் வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தப் படகு இல்லத்தில் தங்குவதற்கு  ஆர்வம் காட்டுகிறார்கள்.      

படகு வீடு!

இந்த வீடுகள், ‘Inverted boat houses’ என்று அழைக்கப்படுகின்றன. தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும் படகுகளைப் போலவே, தங்களது இல்லங்களும் இருக்க வேண்டும் என 100 ஆண்டுகளுக்கு முன்பே கிராமவாசிகள், தங்கள் வீடுகளை பிரத்யேகமாக இப்படி அமைத்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு