Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி

ஆயிஷா இரா.நடராசன்

Published:Updated:
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி
பிரீமியம் ஸ்டோரி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி
அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி

ன்பு நண்பர்களே நலமா...

நான்தான் கலிவிக்குருவி எனும் ஜெர்டான் குருவி, பெண்ணை நதிக்கரையிலிருந்து எழுதுகிறேன். மிகப்பெரிய ஆபத்தில், ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என அலறியபடி எழுதுகிறேன்.

கலிவிக்கொடிக் குருவிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் நாங்கள். மாலை நேரத்தில் வெளியே வந்து இரவில் இரை தேடும் விநோதப் பறவைகள். ஆந்திராவின் கடப்பா, குண்டூர், அனந்தபூர் பகுதிகளில் ஒரு காலத்தில் நிறையவே இருந்தோம். மகாராஷ்டிரா மாநிலத்தின் கோதாவரி நதிக்கரையிலும் தமிழகத்தின் தென்பெண்ணை மணல் வெளியிலும் ஒரு காலத்தில் பறந்து திரிந்து மகிழ்ந்தவர்கள் நாங்கள்.   

அழிய விடல் ஆகாது பாப்பா! - ஜெர்டான் குருவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான குருவி வகைகளில் ‘பந்தயக் குருவிகள்’ என்று பெயர்பெற்ற, உருவில் பெரிய குருவிகள் நாங்கள். ‘கிக்கீ... கிக்கீ... குவாக் குவாக்’ எனும் எங்களது கூவல் கேட்காத நதிக்கரைகளே கிடையாது. மணல்வெளியில், ஆற்றின் ஓரமாக வேகமாக நடக்கும் ஒய்யாரப் பறவையென எங்களைப் பற்றி இலக்கியங்கள் சொல்வதுண்டு. ‘கலிவி (குருவி) தோன்றும் இருள் வந்தது... வா’ எனத் தலைவியை அழைக்கும் தலைவனை முன்வைத்த சங்கஇலக்கியப் பாடலுண்டு.

‘மதராஸ் பிராந்தியம் முதல் நெல்லூர் வரை நிறைந்திருக்கும் பறவை’ என 1876 -ம் ஆண்டு, தாமஸ் ஜெர்டான் எனும் பிரபல பறவை நிபுணர் எங்களைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார். அப்போது முதல் அவர் பெயருடன் இணைந்து எங்களுக்குப் புதிய பெயர் உண்டானது. இன்றோ, பேரழிவின் விளிம்பில் உள்ள பறவை என முத்திரை குத்தப்பட்டிருக்கிறோம்.

உயர்ந்த புற்கள் முளைத்த ஆற்றின் கரைகளே எங்களது வாழிடம். இன்று, தென் இந்தியா முழுதும் அதிகபட்சம் 250 ஜெர்டான் குருவிகளே மிஞ்சி இருக்கும் எனச் சர்வதேச வனப் பாதுகாப்பு அமைப்பு சொல்கிறது. நாங்கள் எப்படி அழிந்துபோனோம்? காடுகளை மனிதர்கள் ஆக்கிரமித்ததே எங்கள் இனம் அழிந்ததற்கு முக்கியக் காரணம் நண்பா.

தெலுங்கு கங்கைத் திட்டம் என்று சென்னைக்குக் குடிநீர் கொண்டுவர ஆந்திரா மற்றும் தமிழக அரசுகள் கால்வாய் வெட்டியபோது, பெரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டன. சதுப்புநிலக் காடுகளை அழித்து, சென்னை - ஆந்திர எல்லை நெடுகிலும் கட்டப்படும் பிரமாண்ட குடியிருப்புகள் என எங்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட, எங்கள் இனமும் அழிந்துவிட்டது.

இனி எஞ்சியிருக்கும் சதுப்புநில வனப் பிரதேசங்களையாவது பாதுகாத்து, எங்களுக்கு நீங்கள்தான் உதவ வேண்டும். நதிகளை இணைப்பது உங்கள் கனவாக இருக்கலாம். ஆனால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் பரிசீலிக்கலாமே.
வனங்களைப் பாதுகாத்தல், ஆற்றின் கரையோரங்களின் இயற்கைச் சூழலைப் பராமரித்தல், மணல் கொள்ளையை நிறுத்துதல் போன்றவையே எங்கள் கலிவிக்கொடிக் குருவிகள் இனத்தைக் காப்பாற்றும் வழிகள். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, நண்பர்களோடு பேசுங்கள். சுற்றுச்சூழல் அமைப்புகளோடு சேர்ந்து எங்களை ஆதரியுங்கள்.

இந்தப் பொறுப்பை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்.

இப்படிக்கு உங்களை நம்பும்

ஜெர்டான் குருவி. 

(சென்னை - ஆந்திர எல்லை)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism