Published:Updated:

பலூன் சிற்பங்கள்!

பலூன் சிற்பங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பலூன் சிற்பங்கள்!

யக்னேஷ்

பலூன் சிற்பங்கள்!

யக்னேஷ்

Published:Updated:
பலூன் சிற்பங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பலூன் சிற்பங்கள்!

லூன் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். பலூனை ஊதி, காற்றில் பறக்கவிடுவதே தனி குஷிதான். அதேபோல பிறந்தநாள் விழா, பள்ளிகளில் நடக்கும் விழாக்களிலும் அலங்கரிக்க வண்ண வண்ணப் பாலூன்களைப் பயன்படுத்துவதுண்டு. ‘‘டெகரேஷனுக்கு மட்டுமல்ல, பலூன்களைக்கொண்டு அழகழகான சிற்பங்களையும் உருவாக்க முடியும்’’ என்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பலூன் கலைஞர், மாசயோஷி மட்சுமோட்டோ (Masayoshi Matsumoto).   

பலூன் சிற்பங்கள்!

இவருக்கு வனவிலங்குகள் என்றால், அவ்வளவு ஆசை. விலங்குகளைச் சிற்பங்களாக உருவாக்க ஆசைப்பட்டார். அதற்காக பலூன்களைத் தேர்வுசெய்தார். ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது இந்தப் பலூன் ‘சிற்பச் செதுக்கல்’. முதலில் செய்த பலூன் சிற்பங்கள் அவருக்கே திருப்தி அளிக்கவில்லை. முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து உருவாக்கினார். இப்போது அவர் உருவாக்கியிருக்கும் சிற்பங்கள், பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என இவர் உருவாக்கியுள்ள பலூன் சிற்பங்களுக்கு சோஷியல் மீடியாக்களில் பராட்டுக்கள் குவிகின்றன.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலூன் சிற்பங்கள்!

மார்க்கர், பசை, பேனா என ஒரு பொருளையும் கூடுதலாகப் பயன்படுத்துவதில்லை. கண்கள், இறக்கை என எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் பலூன்களாலேயே செய்துவிடுகிறார் என்பதுதான் இதன் ஸ்பெஷல். ‘‘ஒரு பலூன் சிற்பத்தை உருவாக்கக் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் பிடிக்கும். நுணுக்கமான உருவங்கள் என்றால், ஆறு மணி நேரம்கூட ஆகும். ஒரு உருவத்தை உருவாக்குவது என முடிவுசெய்து பலூன்களைக்  கையில் எடுத்ததும், நேரம், சுற்றுப்புறம் என எல்லாவற்றையும் மறந்துவிடுவேன்’’ எனப் புன்னகைக்கிறார் மட்சுமோடோ.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism