Published:Updated:

21வயதிலேயே IAS ஆகலாம்!

21வயதிலேயே IAS ஆகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
21வயதிலேயே IAS ஆகலாம்!

ஞா. சக்திவேல் முருகன் - படங்கள்:குமரகுருபன்

21வயதிலேயே IAS ஆகலாம்!

ஞா. சக்திவேல் முருகன் - படங்கள்:குமரகுருபன்

Published:Updated:
21வயதிலேயே IAS ஆகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
21வயதிலேயே IAS ஆகலாம்!

சுட்டிகளைப் பார்த்து நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் சட்டென்று   ‘ஐஏஎஸ்’ என்று சொல்வார்கள். சுட்டிகள் அப்படிச் சொல்வதை பெற்றோர்களும் ரசிப்பார்கள். அந்தளவுக்கு எல்லோருக்குமே  ஐஏஎஸ் பணி என்பதில் ஒரு கிரேஸ். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஒரே கனவில்  உறுதியுடன் பயணித்தால் இளம் வயதிலேயே ஐஏஎஸ் ஆகி விடலாம்.  

21வயதிலேயே IAS ஆகலாம்!

நம் அரசின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் தீர்மானிப்பவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள்தான். அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் வடிவமைத்து, செயல்படுத்தி அரசுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக இருப்பவர்கள் இவர்கள்தான். நல்ல சம்பளம், அரசு பங்களா, கார், சொல்வதைச் செய்ய ஏராளமான பணியாளர்கள் எனச் சகல வசதிகளையும் பெற்று, பொறுப்புகள் மிகுந்து, அதிகாரமிக்கவர்களாக வலம் வருவார்கள் ஐஏஎஸ் அதிகாரிகள்.

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆரம்ப நிலையில் உதவி ஆட்சியராகப் பொறுப்பு ஏற்பார்கள். அதன் பின்பு மாவட்ட அளவிலான பொறுப்பிற்கும் பின்பு மாநில அளவிலான பணிகளுக்கும் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு நியமிக்கும்போது பல்வேறு துறைகளுக்குச் செயலராகவும், மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்குத் தலைவராகவும் செயல்படுவார்கள்.

மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் அமைச்சகச் செயலர், அமைச்சகச் செயலரின் உதவி செயலர், அமைச்சகச் செயலரின் துணை செயலர், உதவிச் செயலர், துணை செயலர் எனப் பல பணிநிலையைப் பெறுவார்கள். எப்போதும் இறுதி முடிவை அமைச்சர் எடுப்பார் என்றாலும் அவர்களுக்குத் தேவையான விவரங்களையும், கொள்கைகளுக்கு வடிவமும் கொடுப்பவர்கள் ஐஏஎஸ்-கள்தான்.

இந்திய ஆட்சிப் பணிக்காக கடந்த ஆண்டு நடந்த தேர்வில் இந்திய அளவில் 21-வது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பெற்ற விருதுநகர் மாவட்டம் வத்திராய்ப்புக் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன் சுட்டிகளின் ஐஏஎஸ் கனவுகளுக்கு வழிகாட்டுகிறார்.

“ஒரு மாவட்டத்தில் பத்தாயிரம் என்ஜினீயர்கள் இருப்பார்கள். ஐந்நூறு, ஆயிரம் மருத்துவர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரே ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் தான் இருப்பார். இவரால் எல்லோருக்கும் நல்லது செய்ய முடியும். இன்ஜினீயரும், மருத்துவரும் அவர்களுடைய துறைகளில் மட்டுமே செயல்பட முடியும். ஆனால் ஐ.ஏ.எஸ். என்பவர் அனைத்துத் துறைகளிலும் செயல்பட முடியும். எல்லாத் துறைகளிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்குச் சேவை செய்யும்போது பெயர் பெறும்போது அது பெற்றோர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய மதிப்பு” என்றவர், ஐஏஎஸ்-ஆவதற்கான வழிகளைச் சொன்னார்.

“ஐஏஎஸ் தேர்வுக்கு மிக முக்கியமானது பள்ளிப் பாடப் புத்தகங்கள். அதிலும் 6 முதல் 12 வகுப்பு வரையிலான புத்தகங்கள் மிக முக்கியம். வரலாறு, புவியியல் என எல்லாப் புத்தகங்களையும் ஆழமாகவும், புரிந்தும் படிக்க வேண்டும். பள்ளியிலேயே நன்றாகப் படித்து விட்டால் நீங்கள் 21  வயதிலேயே ஐஏஎஸ் ஆகிவிடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

21வயதிலேயே IAS ஆகலாம்!



ஒருவரைப் பார்த்தவுடன் அவரைப்போல ஆக வேண்டும் என்று நினைத்து மாறிக்கொண்டே இருப்பார்கள். இதனால் இலக்கை அடைய முடியாமல் போகவே வாய்ப்பு அதிகம். ஒரு கனவிலேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக ஐஏஎஸ் கனவை நனவாக்க முடியும். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடனே அதற்குத் தகுந்தாற்போல் பட்டப்படிப்புப்  பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பலரும் டிகிரி முடித்தவுடன் தான் எந்த வேலைக்குப் போவது என்று முடிவு செய்வார்கள்.  இதைப் பற்றி முன்னரே முடிவெடுக்க வேண்டும்.

நம்மை நாமே நம்ப வேண்டும். ஐஏஎஸ் ஆனவுடன்  மக்களுக்கு நிறைய நல்லது செய்ய முடியும். அவ்வாறு நல்லது செய்யும் போது நிறைய எதிர்ப்புகள் வரும். அவ்வாறு எதிர்ப்புகளைச் சமாளிக்க நம்மை நாமே நம்புவது அவசியம். இந்தக் குணத்தைப் பள்ளியில் படிக்கும் போதே வளர்த்துக்கொள்ள வேண்டும். நேர்மை குணமும் தலைமைப்பண்பையும் சின்ன வயதிலேயே மதிப்புக்கொடுத்து உயர்த்திக்கொண்டால் நீங்கள் நிச்சயம் ஐஏஎஸ் தான்” என்கிறார் பிரதாப்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவரும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் சுட்டிகளுக்குச் சொல்லும் ஆலோசனைகள்

21வயதிலேயே IAS ஆகலாம்!

“நாம் தினமும் பார்க்கும் விஷயங்களில் மாற்றத்தையும், மன மகிழ்ச்சியையும் தருவதும் ஐஏஎஸ் பதவிதான். ஒரு மருத்துவமனையில் சரியான சிகிச்சை தரவில்லை, ரேஷன் கடையில் சரியான முறையில் பொருள்களைத் தரவில்லை என்றால் நீங்கள் பார்த்துவிட்டு ஓரம் ஒதுங்கிப் போகத்தேவையில்லை. அந்த குறைபாட்டை உடனடியாகச் சரி செய்ய முடியும். சின்ன விஷயத்தில் இருந்து பெரிய விஷயங்கள் வரை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நீங்கள் மக்கள் மத்தியில் முன்னுதாரணமாகவும்முடிவெடுப்பவராகவும் இருக்க முடியும்.

ஐஏஎஸ் ஆக எந்தப் பின்புலமும் தேவையில்லை. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு நன்கு படித்தாலே போதுமானது. இப்போது ஆறாவது அல்லது எட்டாம் வகுப்பு படித்து வருகிறீர்கள். உங்களுக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தால் நீங்கள் தினமும் தினசரி நாளிதழ்களைப் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பள்ளியில் நடக்கும் வினா- விடைப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய நாட்டின் குடியரசுத் தலைவர் யார், பிரதமர் யார், ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சர்கள் யார் யார் என தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய கடமைகளும்பொறுப்புகளும் என்னென்ன சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றனஎன்பதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டும். இதனையும் வளர்த்துக்கொண்டால் நீங்கள் நிச்சயம் ஐஏஎஸ். ஆக முடியும்” என்கிறார் பிரியங்கா.

ஐஏஎஸ் தேர்வு நடைமுறைகள்!

ஏஎஸ் தேர்வுக்குக் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே விண்ணப்பிக்கலாம். மே - ஜூன் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வுக்கான கேள்விகள் ஆங்கிலத்தில் இருக்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வு தமிழிலும் எழுதலாம். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தமிழிலேயே எதிர்கொள்ளலாம். முதன்மைத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் நிறைய மதிப்பெண் பெறுபவர்கள் ஐஏஎஸ் ஆகவும், ஐபிஎஸ் ஆகவும் ஆகலாம். இதற்கு அடுத்து இருபதுக்கும் மேற்பட்ட பணிகள் இருக்கின்றன. அதனையும் தேர்ந்தெடுத்துப் பணியாற்றவும் செய்யலாம். வாய்ப்புகள் ஏராளம். உங்களுடைய கனவு ஐஏஎஸ் ஆக இருக்கட்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism