Published:Updated:

அசத்தும் அறிவியல் அரங்கம்!

அசத்தும் அறிவியல் அரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அசத்தும் அறிவியல் அரங்கம்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

அசத்தும் அறிவியல் அரங்கம்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
அசத்தும் அறிவியல் அரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அசத்தும் அறிவியல் அரங்கம்!

காடுகளில் சுற்றித் திரிந்த மனித இனம் இன்று இருக்கும் இடத்திலிருந்தே உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அறிவியல். சிந்திக்க ஆரம்பித்த மனிதனின் ஆற்றல், சந்திரன் வரை சென்று கொடி பதிக்கவும் காரணம் அறிவியல். அந்த அறிவியல் குறித்துச் சிறு வயது முதலே விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அறிவியல் மையங்கள் நிறுவப்படுகின்றன. அப்படித் திருநெல்வேலியில் இருக்கும் அறிவியல் மையத்துக்கு ஒரு விசிட் அடித்தோம். 

அசத்தும் அறிவியல் அரங்கம்!

இந்த அறிவியல் மையம் ஆறு ஏக்கர் பரப்பளவில், கேளிக்கை முறையிலான அறிவியல், மின்னணுவியல் மற்றும் தாவரவியல் அறிவியல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 80 வகையான அரிய வகைத் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. தாவரவியல் தொடர்பான தகவல்களுக்கு இந்த மையத்தை ஒருமுறை சுற்றிவந்தாலே போதும்.

டைனோசர் பார்க், அறிவியல் தொடர்பான செய்திப் படங்களைக் காட்சிப்படுத்தும் 3D திரையரங்கு, அறிவியல் அறிஞர்களின் உருவச் சிலைகள், அறிஞர்களின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள், வானியல் ஆய்வுக்கான தொலைநோக்கி என அனைத்தும் பிரமிக்கவைத்தன. இந்தியா முழுவதும் எந்தெந்த ஊர்களில் தற்போது என்னென்ன வெப்பநிலை என்பதைத் தொடுதிரை மூலம் தொட்டுப் பார்த்துத் தெரிந்துகொண்டோம். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள் வானிலை பற்றிச் சொல்வது இப்படித்தானாம். கண்ணாடி மாயாஜால அரங்கு மிகவும் குஷிப்படுத்தியது. அங்கே, ‘வழி காட்டுங்கள்’ புதிர்போலச் செல்லும் ஒரு பாதை மிகவும் கவர்ந்தது. சற்று விலகினாலும் சுவரில் முட்டிக்கொள்வோம். கவனமாக நடந்து வெளியே வருவது சவால். அந்தச் சவாலை ஜாலியாகச் சந்தித்தோம். அறிவியல் கோளரங்கம் பார்க்கப்பார்க்க பிரமிப்பூட்டியது.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசத்தும் அறிவியல் அரங்கம்!

சுட்டி விகடன் சார்பாக வந்திருக்கிறோம் என்றதும், மாவட்ட அறிவியல் மைய அதிகாரி நவராம் குமார் மகிழ்ச்சியோடு முன்வந்து பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தார். ‘‘அறிவியல் மையம் என்றதுமே பலருக்கும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருக்கும் பிர்லா கோளரங்கம்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு இணையாகத் திருநெல்வேலியில் ஓர் அறிவியல் மையம் இருப்பது பலருக்கும் தெரியாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மையம், 1987-ம் ஆண்டு பிப்ரவரி  27-ம் தேதி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் இருக்கும் 25 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. அறிவியல் மையம் என்றதும் கடினமான அறிவியல் விளக்கங்களால் போர் அடிப்பார்கள் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. அது உண்மையல்ல. ஒரு தீம் பார்க்கில் கிடைக்கும் மகிழ்ச்சி இங்கும் கிடைக்கும். அதற்கேற்ப பல கேளிக்கை அரங்குகளை எளிமையான அறிவியல் விளக்கங்களோடு அமைத்திருக்கிறோம்.   

அசத்தும் அறிவியல் அரங்கம்!

அறிவியல் கருத்தரங்கங்கள், தொழில்நுட்ப காட்சிகள், அறிவியல் அறிஞர்களின் பிறந்தநாள் நிகழ்வுகள், புதிய கண்டுபிடிப்புகளின் காட்சிகள், அறிவியல்பூர்வமான மேஜிக் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறோம். இந்த மையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அறிவியல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான சந்தேகங்களுக்கு இங்கு வந்து விளக்கம் பெறலாம். இங்கு வருபவர்கள், நாட்டின் 25 மையங்களுடனும் தொடர்புகொண்டு தங்களுடைய கண்டுபிடிப்புகளுக்கான ஆலோசனைகளைப் பெறலாம். இங்குள்ள நவீன தொலைநோக்கி மூலம், வானியல் நிகழ்வுகளைக் கண்டு மகிழலாம். வானில் ஏற்படும் சிறப்பு நிகழ்வுகளைப் பொதுமக்கள் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்கிறோம். இந்த மையத்தில் ஒரு நடமாடும் அறிவியல் வாகனம் உள்ளது. மையத்துக்கு வரையியலாத கிராமப்புற மாணவர்களும் பயனடையும் வகையில், இந்த வாகனத்தைப் பல ஊர்களுக்கு நாங்கள் கொண்டுசெல்கிறோம். இந்த மையத்தைப் பயன்படுத்திப் பல இளம் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். விடுமுறை நாளில் சினிமா, பூங்கா என்று சென்று பொழுதுபோக்குபவர்கள் இதுபோன்ற அறிவியல் மையத்துக்கும் ஒருமுறை வரவேண்டும். இது, மகிழ்ச்சியையும் அறிவையும் ஒரே நேரத்தில் அளிக்கும்’’ என்றார் புன்னகையுடன்.  

அசத்தும் அறிவியல் அரங்கம்!

திருநெல்வேலியில் இருக்கிறவர்களும் திருநெல்வேலிக்கு வருபவர்களும் மறக்காமல் இந்த அறிவியல் மையத்துக்கு விசிட் அடிங்க ஃப்ரெண்ட்ஸ்!

மாவட்ட அறிவியல் மையம் திருநெல்வேலி

அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை

5வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பார்வையாளர் கட்டணம் ரூ10

குழுவாகப் பள்ளிகளின் மூலமாக வந்தால் ரூ 5 மட்டுமே.

3D திரையரங்குக் கட்டணம் ரூ10

கோளரங்கத்தைப் பார்க்க ரூ20  

அசத்தும் அறிவியல் அரங்கம்!

வ.கோமதி, விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மே.நி.பள்ளி, திருநெல்வேலி.     

அசத்தும் அறிவியல் அரங்கம்!

த.பூர்ணிமா, தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி, கடையநல்லூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism