Published:Updated:

100 ஜன்னல் வீடு!

100 ஜன்னல் வீடு!
பிரீமியம் ஸ்டோரி
100 ஜன்னல் வீடு!

படங்கள்: எஸ். சாய் தர்மராஜ்

100 ஜன்னல் வீடு!

படங்கள்: எஸ். சாய் தர்மராஜ்

Published:Updated:
100 ஜன்னல் வீடு!
பிரீமியம் ஸ்டோரி
100 ஜன்னல் வீடு!

‘வீடு’ என்பது உண்ண, உறங்க, குளிக்கக் கட்டப்பட்ட கட்டடம் மட்டுமில்லை. நமது கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் இடம்.  அறைக்கு ஒரு ஜன்னல், ஒரு கதவு என்று வைத்துக் கட்டுவதே பெரும் செலவு வைக்கும் வகையில் இருக்க... 100 ஜன்னல்களோடு பழைமையான கட்டட வடிவில் வீடு ஒன்றைப் புதிதாகக் கட்டியிருக்கிறார் வெங்கடாஜலம். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கண்டனூரில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியங்கள் எனப் பல்வேறு அம்சங்களோடு ஜொலிக்கிறது அந்த மாளிகை. எங்களை அன்புடன் வரவேற்றார், அந்த மாளிகையின் சொந்தக்காரர் வெங்கடாஜலம் அய்யா. நூறூ ஜன்னல் மாளிகையை ஆச்சர்யத்துடன் சுற்றிப் பார்த்தவாறு அவரிடம் பேசினோம்...   

100 ஜன்னல் வீடு!

‘‘இந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய வீட்டை நகரத்தில் கட்டாமல் ஏன் கிராமத்தில் கட்டி இருக்கீங்க?’’

‘’இது நான் பிறந்த மண். இங்கே, எங்க குடும்பத்தின் பெயர் காலத்துக்கும் சொல்லப்படணும். அதனால்தான், இங்கே கட்டியிருக்கேன்.’’

‘‘100 ஜன்னல்களோடு பங்களாவைக் கட்ட என்ன காரணம்?’’  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

100 ஜன்னல் வீடு!

‘‘எங்க தாத்தா, வெங்கடாஜலம் செட்டியார். 1927-ம் ஆண்டிலேயே வருமான வரி கட்டியது எங்கள் குடும்பம். எங்க அப்பா, அவரின் அக்கா, தங்கச்சிகளின் திருமணச் செலவுக்காக இருந்த சொத்துக்களை வித்துட்டார். பிறகு, கஷ்டமான சூழ்நிலை. என்னோட 17 வயசுல எனக்குள் ஓர் உறுதி எடுத்துக்கிட்டேன். எப்படியாவது இதே ஊரில் எல்லோரும் வியந்து பார்க்கிற மாதிரி ஒரு வீட்டைக் கட்டனும்ன்னு. நல்லாப் படிச்சு வேலைக்குப் போனேன். இதோ இங்கே இந்த வீட்டையும் கட்டிட்டேன். இந்த வீடு நம் பழைமையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கணும். இன்னும் நூறு வருஷம் கழிச்சு வரும் தலைமுறைக்கும் நம் கலாச்சாரம் தெரியணும்னு பழைமையான விஷயங்களைத் தேடித் தேடி இந்த வீட்டை உருவாக்கியிருக்கேன். கீழ்த் தளத்தில் பதிச்சிருக்கும் கறுப்பு வெள்ளை டைல்ஸ், இந்தியாவில் கிடைக்கிறதில்லை. சீனாவிலிருந்து இறக்குமதி செஞ்சேன். வாசலில் வரவேற்கும் யாழி உருவம், பழங்காலத்து நிலைக்கதவு வடிவிலேயே புதிய கதவுகள், பர்மா தேக்கு, கிரானைட் கற்கள், ஓவியங்கள் என பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கேன்.’’  

100 ஜன்னல் வீடு!

‘’இந்தப் பங்களாவை கட்டிமுடிக்க எவ்வளவு நாளாச்சு?’’

‘‘கட்டடக் கலைஞர்கக்ச் சேலத்துல இருந்துதான் வரவழைச்சேன். ரெண்டு வருஷம் இங்கேயே தங்கியிருந்து பங்களாவை முழுமையாக்கினாங்க. இங்கே இருபது அறைகள் இருக்கு. ஒவ்வொரு அறையின் நிலையும் யானை, கஜலெட்சுமி, அன்னம் என கலைநயத்தோடு அமைக்கப்பட்டிருக்கு.’’ என்றபடி வெங்கடாஜலம் அய்யா பெருமிதத்துடன் வீட்டைப் பார்க்க, நாங்கள் ஒரு ரவுண்டு ஓடியாடி மகிழ்ந்துவிட்டுக் கிளம்பினோம்.

ஒருங்கிணைப்பு: தெ.பாலமுருகன் 

100 ஜன்னல் வீடு!

மு.ராஜேஸ்வரி, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

100 ஜன்னல் வீடு!

ஆ.பாஸ்டின் ஜோயல், தே.பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism