பொது அறிவு
Published:Updated:

இன்ஸ்பையர் விருது

இன்ஸ்பையர் விருது
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஸ்பையர் விருது

ஞா. சக்திவேல் முருகன்

இன்ஸ்பையர் விருது

ள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சி ஆர்வத்தையும் திறனையும் மேம்படுத்துவதற்குப் பல்வேறு உதவித்தொகைகளையும் ஊக்கத்தொகைளையும் விருதுகளையும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science & Technology) வழங்கி வருகிறது. இதில் முதன்மையானது ‘இன்ஸ்பையர் விருதுகள்.’ ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இன்ஸ்பையர் விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.   

இன்ஸ்பையர் விருது

இளம் வயதிலேயே அறிவியல் பாடத்துக்கான ஆர்வத்தை அதிகரிக்கும் முயற்சியாக இந்தத் திட்டத்தைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இன்ஸ்பையர் விருதைப்பெற ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் மாணவர்கள் அறிவியல் திட்டப்பணியின் மாதிரிகளை உருவாக்கி மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பின்னர் தேசிய அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளிலும் பங்குபெறலாம்.

ஒவ்வொரு பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் தலைமையாசிரியரும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைக் கண்டறிந்து அவர்களை விருது பெற பரிந்துரை செய்யலாம். இவ்வாறு பரிந்துரை செய்யும்போது மாணவரின் வங்கிக் கணக்கு விவரத்தையும் அறிவியல் திட்டப்பணியினையும் அனுப்பி வைக்க வேண்டும். இன்ஸ்பையர் விருதுபெற அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என அனைத்துப் பள்ளிகளிலிருந்து விண்ணப்பங்கள் அனுப்பலாம்.

சுட்டிகளே, உங்களுக்கு அறிவியல் துறையில் சாதனைபடைக்க வேண்டும், உங்களது பள்ளி படிப்புக்கும் கல்லூரி படிப்புக்கும் எந்த விதமான செலவும் இல்லாமல் படிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே பள்ளியின் அறிவியல் ஆசிரியரையும் தலைமையாசிரியரையும் அணுகி இன்ஸ்பையர் விருதுக்கு உங்கள் பெயரில் விண்ணப்பத்தை அனுப்பச் செய்யுங்கள்.

இணையதள முகவரி: http://www.inspireawards-dst.gov.in/UserP/school-registration.aspx

இன்ஸ்பையர் விருது பெறும் மாணவர்களுக்கு அறிவியல் துறை சார்ந்த புத்துணர்வு நிகழ்ச்சி நடைபெறும். சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்குச் சர்வதேச அளவிலும் வெளிநாடுகளில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளிலும் பங்குபெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2017-2018-ம் ஆண்டுக்கான இன்ஸ்பையர் அவர்டுக்கு பதிவுக்கான கடைசி நாள் 30.06.2017. மேலும் விவரங்களுக்கு http://www.online-inspire.gov.in/