Published:Updated:

`அறிவுத்திறனும் அடிப்படைக் கணிதமும்..!' - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

`அறிவுத்திறனும் அடிப்படைக் கணிதமும்..!' - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

`அறிவுத்திறனும் அடிப்படைக் கணிதமும்..!' - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

`அறிவுத்திறனும் அடிப்படைக் கணிதமும்..!' - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

`அறிவுத்திறனும் அடிப்படைக் கணிதமும்..!' - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

Published:Updated:
`அறிவுத்திறனும் அடிப்படைக் கணிதமும்..!' - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

முதன்மைத் தேர்வுகள் - திறனறி (Aptitude) ஸ்பெஷல் - பகுதி: 2

திறனறி தேர்வில் அறிவுத்திறன் (mental ability) மற்றும் அடிப்படைக் கணிதம் (basic numeracy) ஆகியவை முக்கியமானவை. இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள பட்டப் படிப்புகளோ அல்லது கணித மேதையாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரும்பாலும் பள்ளியில் படித்த பாடங்கள், கோட்பாடு மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பகுதியில் கேள்விகள் அமைகின்றன. அவற்றில், சில முக்கியமான தலைப்புகளைப் பார்க்கலாம். 

எண் வரிசை, எண் வகைப்பாடு - முழு எண் (integer), முதன்மை எண் (prime number) போன்றவற்றின் அர்த்தங்கள் மற்றும் அவைகள் சார்ந்த கேள்விகள், எண்களின் வகுபடும் தன்மை (number divisibility) மற்றும் எண் சார்ந்த அடிப்படை விஷயங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரண கேள்வி

6897 என்பது இவை எவற்றால் வகுபடும் ?


A.11 மட்டும்

B.19 மட்டும் ( பதில்) 

C. 11 மற்றும் 19 ல்

D. 11 மற்றும் 19 இரண்டிலும் கிடையாது 

அடுத்ததாக, தெளிவுபடுத்துதல் (simplification), தசம பின்னங்கள் (Decimal Fractions), சராசரி (average), சதுர மூலம் (square root) மற்றும் கன 
மூலம் (cube root), எண்கள் மற்றும் வயது சார்ந்த கேள்விகள், சதவிகிதம் (percentage), லாபம் மற்றும் நஷ்டம் (profit and loss), விகிதம் மற்றும் 
விகிதாச்சாரம் (ratio and proportion), கூட்டுப் பங்காண்மை (partnership ) ஆகியவற்றை அறிந்துகொள்வது மிக அவசியம். இந்தத் தலைப்புகளில் இருந்து ஆண்டுதோறும் பல கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

உதாரண கேள்வி (UPSC 2016):

ஒரு நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்டுள்ள பொருளின் மீது 19,000 பொருள்களுக்கு விற்பனைப் பதிவை மேற்கொண்டுள்ளார் ஒரு வாடிக்கையாளர். அந்த நிறுவனமானது, தினமும் அந்தக் குறிப்பிட்ட பொருளைத் தினமும் 1000 தயாரிக்கிறது. அவற்றில் தினமும் 5 சதவிகிதம் பயன்படுத்த முடியாத நிலையில் நிராகரிக்கப்படுகிறது. இப்படியிருக்க, அந்த 19,000 பொருள்களும் எப்போது அந்த வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படும்? 


18

19

20 ( பதில் )

22

நேரம் மற்றும் வேலை சார்ந்த கேள்விகள் (time and work), நேரம் மற்றும் தூரம் சார்ந்த கேள்விகள் (time and distance), குழாய் மற்றும் தொட்டிகளின் அளவீடுகள் சார்ந்த கேள்விகள், கப்பல்கள் மற்றும் ரயில்களின் வேகம் சார்ந்த கேள்விகள், கலவைகள் (mixtures), தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி போன்ற தலைப்புகளிலிருந்து நிச்சயம் கேள்விகளை எதிர்பார்க்கலாம்.

உதாரண கேள்வி (UPSC 2016)

30 கிராம் சர்க்கரை 180 மில்லி தண்ணீருடன் கிண்ணம் A வில் கலக்கப்பட்டது. 40 கிராம் சர்க்கரை 280 மில்லி தண்ணீருடன் கிண்ணம் Bல் கலக்கப்பட்டது. 20 கிராம் சர்க்கரை 100 மில்லி தண்ணீருடன் கிண்ணம் Cல் கலக்கப்பட்டது. கிண்ணம் Bல் உள்ள கலவை நீர் 

C கிண்ணத்தைவிட இனிப்பாக இருக்கும்

A கிண்ணத்தைவிட இனிப்பாக இருக்கும்

C கிண்ணத்துக்கு நிகரான இனிப்பாக இருக்கும்

C கிண்ணத்தைவிட இனிப்பு குறைவாக இருக்கும் ( பதில்) 

அதேபோல், பரப்பளவு, பரும அளவு(volume), மேற்பரப்பு (Surface area), ஆண்டுக் குறிப்பேடு(calender) சார்ந்த கேள்விகள், கடிகாரம் மற்றும் நேரம் சார்ந்த கேள்விகள், பங்குகள், வரிசைமாற்றங்கள் (permutations), இணைதல் ( combination), சம்பவிக்கக்கூடிய தன்மை (probability), தள்ளுபடி (discount), உயரங்கள் மற்றும் தூரங்கள் போன்ற தலைப்புகளைப் படித்துக்கொள்வது மிகவும் அவசியம்.

உதாரண கேள்வி: 

திரு.Xன் சென்ற ஆண்டு வயது ஓர் எண்ணின் 'ஸ்கொயர்' (square ) ஆகும், அவரின் அடுத்த ஆண்டு வயது ஓர் எண்ணின் 'க்யூப்' (cube) ஆகும். அவர், தன் வயது மீண்டும் ஓர் எண்ணின் 'க்யூப்' ஆக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

42

38 (பதில்) 

25

16

ஸ்கொயர் எண்களையும் அவற்றின் இரண்டு எண் இடைவெளியில் உள்ள க்யூப் எண்களையும் எடுத்து எழுதிப் பார்த்தால் எளிதில் 25 (5x5) மற்றும் 27 (3x3x3)யை வைத்து x ன் வயது 26 என்பதைக் கண்டுபிடித்து விடலாம். 26க்குப் பிறகு வரும் ( 27 தவிர்த்து) க்யூப் எண் 4x4x4 =64. 64-26 (தற்போதைய வயது 38).

இறுதியாக, எண் சார்ந்த தகவல்களின் விளக்கம் (Data interpretation) சார்ந்த கேள்விகள், எண் பட்டியல் அமைவு (tabulation), எண் சார்ந்த வரைபடங்கள், விளக்கப் படங்கள் ஆகியவை கேள்விகளாக கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளிலும் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுகளில் இடம் பெற்றுள்ளன. 

கடந்த ஐந்து ஆண்டுகளின் வினாத்தாளினை எடுத்துப் பார்த்தால் கேள்வி எவ்வாறு அமைகின்றன என்ற புரிதல் நமக்குக் கிடைக்கும். எந்த பகுதிகள் நமக்கு எளிது, எந்தப் பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம். திறனறி தாளில் வரும் கேள்விகளைப் பொறுத்தவரை, குறைந்த நேரத்தில் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்வது மிக அவசியம். பல நேரங்களில் கேள்விகள் எளிதாக இருந்தாலும் நமது நேரத்தை அதிகமாக செலவிடக்கூடியதாக அமையும். அப்படிப்பட்ட கேள்விகளை ஒன்று இறுதியில் எடுத்துக்கொள்ளலாம் அல்லது எளிய வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு நேரத்தை மிச்சப்படுத்தலாம். 

இந்த திறனறி தாள் என்பது தகுதித்தாள் மட்டும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பழைய வினாத்தாளைப் பார்த்தவுடன் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் ஆரம்ப காலத்தில் நீங்கள் படிக்கும் நேரத்தை தினமும் 90 சதவிகிதம் பொதுப் பாடங்களுக்கும் 10 சதவிகிதம் திறனறி பாடங்களுக்கும் செலவிடுங்கள். திறனறி பகுதியின் சில பகுதிகள் கடினம் என நீங்கள் நினைத்தால், அதற்கு மட்டும் கூடுதல் நேரத்தை ஒதுக்குங்கள். தடுமாறாமல் சற்று கவனத்தோடு எதிர்கொண்டால் போதும், அடுத்த நிலைக்குச் சென்றுவிடலாம்.