பொது அறிவு
Published:Updated:

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...
பிரீமியம் ஸ்டோரி
News
எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

எஃப்.ஏ மதிப்பீட்டுக்கு உரிய 16 பக்கங்களை, ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.       

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

நாய்க்கு இருப்பது வாளா... வாலா?

‘அரசர்கள் கையில் வைத்திருப்பது வாள்’ என்றேன். உடனே ஒரு மாணவன் எழுந்து, ‘நாயின் பின்னால் இருக்குமே அந்த வாலா சார்’ என்றான். இந்த வேறுபாட்டை மாணவர்கள் அறிய, செயல்பாடு ஒன்றைச் செய்யவைத்தேன். அதை நீங்களும் உங்கள் வகுப்பில் செய்யலாம்.   

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கவும். மேஜையின் மீது மயங்கொலிச் சொல் எழுதிய மின் அட்டைகளை வைக்கவும். முதல் குழு அந்த மின் அட்டையை எடுத்து, அதில் எழுதப்பட்டிருக்கும் மயங்கொலிச் சொற்களைச் சத்தமாக, அந்தச் சொல்லுக்கு உரிய ஒலி உச்சரிப்புடன் வாய்விட்டுப் படிக்க வேண்டும்.       

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

அடுத்த குழு, முதல் குழு கூறும் சொற்களுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்க வேண்டும். கேட்பதற்கு ஒரே விதமான ஓசையுடையதாக இருந்தபோதும், வேறுபட்ட வரி வடிவம் கொண்டு அர்த்தம் வேறுபடுமாறு உள்ளவை, மயங்கொலிகள் என்பதை விவாதித்து அறியச் செய்யவும். உ-ம் : ஒளி - வெளிச்சம், ஒலி - சத்தம் மூன்றாவது குழு, மயங்கொலிச் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியம் ஒன்றை கரும்பலகையில் எழுத வேண்டும். உ-ம்:  யானை மிகுந்த பலம் வாய்ந்த விலங்கு; வாழைப்பழம் உடலுக்கு நல்லது. மயங்கொலிச் சொற்களுக்கான வேறுபாடு அறியும் விதத்தைக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பீடு வழங்கலாம்.

-க.சரவணன், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.  


படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

‘மயங்கொலி’ பகுதிக்கு உரியது.

பூச்சியின் சிறப்பைக் கண்டுபிடி!        

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

பெரிய மற்றும் சிறிய அளவுகளில் இரண்டு வட்ட வடிவ அட்டைகளை எடுத்துக்கொண்டு, சுழலட்டை தயார்செய்து கொள்ளவும். உள்வட்ட அட்டையில் பூச்சிகளின் பெயரையும், வெளிவட்ட அட்டையில் பூச்சிகளுக்குத் தொடர்புடைய சிறப்புச் செய்திகளையும் எழுதிக்கொள்ளவும்.

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...இரண்டு மாணவர்களைக்கொண்டு விளையாட்டாக இதைச் செய்யலாம். ஒரு மாணவர், சின்ன அட்டையைச் சுழற்ற வேண்டும். அது சுற்றி முடிந்து நிற்கும்போது, பூச்சியின் பெயரும் செய்தி எழுதியிருக்கும் இடமும் வேறு வேறாக இருக்கும். அட்டையைச் சுற்றிவிட்ட மாணவர், உடனே அதைச் சரிசெய்து, பூச்சி மற்றும் செய்தி இரண்டும் அருகருகே இருக்கும்படி அமைக்க வேண்டும். (தட்டாம்பூச்சி அருகே 30,000 லென்சு) ஒருவர் முடித்ததும், அடுத்த மாணவர் இதேபோல செய்ய வேண்டும். யார் யார் குறைந்த கால அவகாசத்தில் செய்கின்றனரோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

 -ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.

படம்: சக்தி அருணகிரி

‘பூச்சிகள்’ பாடத்துக்கு உரியது.

ஊரைச் சுற்றி புதிய விஷயங்களை அறி!      

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

மாணவர்களைப் பள்ளிக்கு அருகில் உள்ள ஆறு, குளம், குட்டைக்குப் பாதுகாப்பாக அழைத்துச்செல்வது அவர்களுக்குப் புதிய அனுபவத்தை அளிக்கும். நீர்நிலைகள் எவ்வாறு மாசுபடுத்தப்படுகின்றன என்பதை நேரடியாகக் கண்டு உணரவும் உதவும்.
களப் பயணத்துக்குப் பிறகு, வகுப்பில் சிறு மேடைபோல அமைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாணவராக அழைத்து, மேடையில் ஏறச் செய்து, களப்பயணத்தில் அவர் பார்த்த விஷயங்களைப் பேசச் சொல்லுங்கள். சரியாக ஒரு நிமிட நேரம் அவகாசம். ஒரு நிபந்தனை. ஒருவர் பேசிய விஷயத்தை அடுத்து வருபவர்கள் திரும்பவும் கூறக்கூடாது. இப்படிச் செல்வதன்மூலம் மாணவர்கள் யோசித்து, தான் பார்த்த பல விஷயங்களைக் கூற வாய்ப்பிருக்கிறது.     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

மாணவர் கூறும் தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- க.சரவணன், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

‘எனக்கு இறக்கைகள் முளைத்தால்’ பாடத்துக்கு உரியது.

தொப்பி விளையாட்டில் உணவு முறைகள்!     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

தேவையான பொருள்கள்: காகிதத் தொப்பிகள்-2, மின் அட்டைகள், வண்ணப் பேனாக்கள், பலவிதமான உணவுப் பொருள்கள்

செய்முறை: உணவுப் பொருள்களின் பெயர்களை (உதாரணமாக முட்டை, பால், சப்பாத்தி, சாக்லேட், சிப்ஸ்) மின்அட்டைகளில், வண்ணப் பேனாக்களால் எழுதி மேஜையில் வைக்க வேண்டும். மின்அட்டைகளுக்குப் பதில், அவற்றில் எழுதப்பட்டிருக்கும் உணவுப்பொருள்கள் அல்லது அவற்றின் படங்களை வைக்கலாம். பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் தொப்பிகள் செய்துகொள்ளவும்.

ஒரு மாணவர், மேஜையில் உள்ள உணவுப்பொருளின் பெயர் எழுதப்பட்ட மின்அட்டை அல்லது படம் அல்லது உணவுப்பொருளை (உதாரணமாக-முட்டை) எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். மற்றொரு மாணவர் எழுந்து, அந்த முட்டை ஆரோக்கியமான உணவு என்று கூறியவாறு, அவர் தலையில் பச்சை நிறத் தொப்பியை அணிவிக்க வேண்டும். மூன்றாவது மாணவர் கையில் சாக்லேட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சாக்லேட் ஆரோக்கியமற்ற உணவு என்று கூறி அவர் தலையில் சிவப்பு நிறத் தொப்பியை அணிவிக்க வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்து உணவுப் பொருள்களை ஒவ்வொரு மாணவராக எடுக்க, அவை ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற உணவு என்பதற்கேற்றவாறு பச்சை அல்லது சிவப்பு நிறத் தொப்பியை அணிவிக்க வேண்டும்.

- ப.குணசேகரன் ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

‘உணவு முறைகள்’ பாடத்துக்கு உரியது.

பறவைகள் பலவிதம்    

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

அழகான பறவைகளுக்குப் பொருத்தமான வண்ணங்கள் தீட்டுங்கள். அவற்றுக்கு உரிய பெயர் வைத்து, ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பீடு பெறுங்கள். 

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

-கே.பாலாஜி, அ.மே.நி.பள்ளி, திருமுல்லைவாசல், கொள்ளிடம்.

‘பறவைகள் பலவிதம்’பாடத்துக்கு உரியது.

கதை சொல்லி மதிப்பீடு பெறு!     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

மாணவர்களை இரு குழுக்களாகப்  பிரித்துக்கொண்டேன். மனித இனத்தின் உயரிய பண்புகளாகக் கருதப்படும் பிறருக்கு உதவுதல், உண்மையைப் பேசுதல், பெரியோரை மதித்தல் உள்ளிட்ட முதுமொழிக் காஞ்சி பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்புகளை, இரு பிரிவுகளாகப் பிரித்துப் பட்டியலிட்டேன். ஒவ்வொரு குழுவுக்கும் ஐந்து பண்புகளைத் தந்தேன்.

15 நிமிட அவகாசத்தில், ஒவ்வொரு குழுவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பண்புகள் பற்றி, சுவையான கதையைக் கூற வேண்டும்.

முதற்குழு

ஒழுக்கம், கற்றதை மறவாமை, நாணம், நோயற்ற வாழ்வு, பகைவருக்கும் நன்மை செய்தல்.

இரண்டாவது குழு

அன்பு, வாய்மை, ஒழுக்கமுடைமை, பெரியோரைப் பின்பற்றுதல், செல்வத்தைக் காத்தல்.

மாணவர்கள் சொன்ன விதத்தில் அந்தப் பண்பை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனரா எனச் சோதித்து மதிப்பிட்டேன்.

-மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்க வாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

படம்: எஸ்.சாய் தர்மராஜ்

‘முதுமொழிக் காஞ்சி’ பகுதிக்கு உரியது.

விலங்குகளைத் தேடிக் கண்டுபிடி!     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

குப்பறையில் பெரிய வட்டத்தை வரைந்துகொள்ளவும். பிறகு, மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும். ஒரு குழுவுக்கு ‘Animal Group’ எனப் பெயரிட்டு, அவர்களுக்கு Animal Mask அணிவித்து, வட்டத்தின் வெளிப்புறம் நிற்க வைக்கவும். இரண்டாவது குழுவுக்கு ‘Sound Group’ எனப் பெயரிட்டு, அவர்களிடம் விலங்குகள் எழுப்பும் சத்தங்கள் எழுதிய மின்அட்டைகளைக் கொடுத்து, வட்டத்தின் உள்புறம் நிற்கவைக்கவும்.

‘Start’ என்று சொன்னவுடன், உள்வட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் கடிகார முள்களின் திசையில் சுற்ற வேண்டும். ‘Stop’ என்றதும், தங்களின் மின்அட்டையில் எழுதப்பட்டிருக்கும் Sounds- க்குப் பொருத்தமான Animal Mask அணிந்த மாணவனைப் பார்த்துப் பிடித்து, கைகோத்துக் கொண்டு வெளியே நிற்க வேண்டும். விரைவாகவும் சரியாகவும் சேர்ந்த ஜோடிக்கே முதல் மதிப்பெண்!

 -ஆ.தனலட்சுமி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.

படம்: சக்தி அருணகிரி 

‘Little Tuppen’ பாடத்துக்கு உரியது.

உரையாடிக்கொண்டே பாடம் படிப்போம்!     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

மாணவர்களிடம், நீங்கள் சாப்பிட்டதிலேயே மிகவும் பிடித்த உணவு எதுவெனக் கேட்டேன். ஒரு மாணவன், காளான் என்றான். காளான் எத்தனை வகைப்படும், உண்ணக்கூடிய காளான்கள் எவை எவை... நச்சுத்தன்மை உள்ள காளான்கள் எவையெவை என விளக்கினேன். காளான் எந்த இனத்தைச் சேர்ந்தவை என்றும் கூறினேன். காளான் பற்றிய பல சந்தேகங்களை மாணவர்கள் எழுப்பினர். அடுத்து, வேறொரு மாணவருக்குப் பிடித்த உணவைக் கூற,அந்த உணவு எந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது என்பதைக் கூறினேன். பூஞ்சைகளின் பண்புகளை ஓலைச்சுவடியைப் போல தயார்செய்து, அதை மாணவர்களை வாசிக்க வைத்தேன். பள்ளியில் உள்ள தோட்டத்துக்கு மாணவர்களை அழைத்துச்சென்று, பூக்கும் மற்றும் பூவாத் தாவரம் பற்றி விளக்கினேன்.     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...


பாடங்களை மாணவர்களுடன் உரையாடல் வடிவில் நடத்தும்போது வகுப்பு இன்னும் சுவாரஸ்யமாகும். மாணவர்கள் எழுப்பும் சந்தேகங்களைக்கொண்டு மதிப்பீடு அளித்தேன்.

-தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்க வாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.


படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

‘தாவர உலகம்’ பாடத்துக்கு உரியது.

திருக்குறள் விளையாட்டு!      

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

திருக்குறள்கள் ஓலைச் சுவடிகளில்தாம் எழுதப்பட்டன என்பதை மாணவர்களிடம் சொன்னதும், நாங்களும் அதுபோல எழுதிப்பார்க்கிறோம் என்றனர். ஆனால், அதையே சின்ன விளையாட்டாக மாற்றினோம். சார்ட்டை ஓலைச் சுவடி வடிவில் கத்தரித்தேன். ஏழு பேரை வரிசையாக நிற்க வைத்து, முதலில் இருப்பவரிடம் ஓர் ஓலைச் சுவடியைத் தந்து, அவர் எழுத நினைக்கும் திருக்குறளின் முதல் சொல்லை மட்டும் எழுதச் சொன்னேன். அடுத்த சொல்லை, அவருக்கு அடுத்து நிற்பவர் எழுத வேண்டும். இப்படியே ஏழு பேரும் ஏழு சொற்களை எழுதி முடிக்க வேண்டும். மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்கத் தயாரானதும், ஏழு பேர் கொண்ட குழுவாக மாணவர்களைப் பிரித்து, போட்டியாக நடத்தினேன். மாணவர்கள், மகிழ்ச்சியோடு திருக்குறள்களைக் கற்றனர்.

- செ.மணிமாறன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, மேலராதாநல்லூர், திருவாரூர்.


படம்: க.சதீஷ்குமார் 

‘மனப்பாடப் பகுதி’க்கு உரியது.

பறவைகளும் விதைகளைப் பரப்புமா?   

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

விதைகள் பரவும் பல்வேறு முறைகள் பற்றியும், அதனைப் பரப்பும் காரணிகள் பற்றியும் முதலில் விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். ஒவ்வொரு குழுவிடமும், விதைகள் பரவ உதவும் ஒரு காரணியைத் தலைப்பாகக் கொடுத்து (எ-கா: காற்று, நீர், பறவைகள் போன்றவை) அவற்றின் மூலம் பரவும் பல்வேறு தாவரங்களின் மாதிரிகளைச் சேகரித்து வரச் சொன்னேன். மாணவர்கள் சேகரித்து வந்த தாவரங்கள் பற்றி தங்களின் கருத்துகளை முதலில் விளக்கினார்கள். பிறகு, நான் அவற்றைப் பற்றி மேலும் பல தகவல்களைக் கூறி அவர்களைத் தெளிவுபடுத்தினேன். மற்றொரு செயல்திட்டமாக, பல்வேறு விதைகளின் மாதிரிகளைச் சேகரித்து வரச் சொல்லி மதிப்பீடு வழங்கினேன். இதன்மூலம் விதைகள் பரவும் முறைகள் மற்றும் தாவரங்களின் சிறப்புகளை அறிந்துகொண்டார்கள்.    

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

ஜி.கிறிஸ்டோபர்,  மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர் - 1

படங்கள்: ஸ்ரீநிவாசன்    

‘பசுமை உலகம்’ பாடத்துக்கு உரியது.    

PROJECT ON PREPOSITION!      

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

Preposition is a word that is used to link Nouns, Pronouns or phrases to other words within a sentence.

Short prepositions like on, in, to usually stand in front of nouns to show the relationship between a noun or a pronoun.

The different types of Preposition
1. Preposition for Time
eg: In, on, At
2. Preposition for place
eg: In, on, At

3. Preposition for Direction
eg: into, to, towords, through

Kinds of Preposition
1. Simple Preposition
Simple Preposition is made up of a single word syllable.
eg: As, at, by, down
2. Compound Preposition
Compound Preposition consists of more than one syllable or more than one simple preposition.
eg: About, Above, Across

3. Phrasal Preposition:
Some Phrases have one or more Preposition along with them.
eg: according to, along with, aware of.

A display of a ‘park' is exhibited where students of VI, VII, and VIII were able to connect the items displayed with the help of prepositions. With this elaborated three dimensional
explanation, the students
fantastically brought out the
usage of preposition.

- D.Gowthame, Krishnasamy Memorial Matriculation Higher Secondary School, Cuddalore.

படம்: எஸ்.தேவராஜன்  

‘Grammar’ பகுதிக்கு உரியது.

Verb Tree! 

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

குப்பு மாணவர்களில் சிலருக்கு மின்அட்டைகளில் வினைச் சொற்களை எழுதித் தந்தேன். அவர்களில் ஒவ்வொருவராகத் தங்கள் மின்அட்டையைக் காட்டியபடி நின்றனர். மற்ற மாணவர்கள், அந்த மின்அட்டையில் உள்ளபடி நடித்துக்காட்டினார்கள். Drink என எழுதியிருந்தால், வாட்டர் பாட்டிலைத் திறந்து நீர் குடிப்பதுபோல நடிக்க வேண்டும். மின்அட்டையில் எழுதிய வினைச் சொற்களைக் கொண்டு Verb Tree வரையச் சொன்னேன். மாணவர்கள் காட்டிய ஆர்வத்தால், அழகாகக் காட்சியளித்தது verb tree.     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

- ஆர்.மெர்சி ஏஞ்சல், விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி, வண்டாம் பாளையம், திருவாரூர்.  

படங்கள்: க.சதீஷ்குமார்  

Grammar பகுதிக்கு உரியது

முதலெழுத்து, சார்பெழுத்து அறிவோம்!    

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

முதலெழுத்து, சார்பெழுத்து ஆகியவற்றை மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்ள ஓர் அட்டவணை மூலம் கற்பிக்கலாம். படத்தில் காட்டியவாறு அட்டவணையைக் கரும்பலகையில் வரைந்துகொள்ளவும்.

அட்டவணையின் முதல் வரிசையில் ‘ஆ’ என்ற எழுத்தை ஆசிரியர் எழுத வேண்டும். ஒரு மாணவர் எழுந்து, அந்த எழுத்தைப் பிரிக்க முடியாது என்று கூறி, பிரித்தல் என்ற கட்டத்தில் சிறிய கோடு ஒன்றைப் போட்டு, முதலெழுத்து என்ற கட்டத்தில் டிக் ஒன்றைப் போட வேண்டும். ஆசிரியர், ‘மா’ என்ற எழுத்தை எழுத வேண்டும். மற்றொரு மாணவர், அந்த எழுத்தைப் பிரிக்க முடியும் என்று கூறி, பிரித்தல் கட்டத்தில் ‘ம் + ஆ’ என்று எழுத வேண்டும். சார்பெழுத்துக் கட்டத்தில் டிக் ஒன்றைப் போடவேண்டும்.      

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

- ப.குணசேகரன் ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.

இலக்கணப் பகுதிக்கு உரியது. 

உலகம் என்ன வடிவம்?     

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

மாணவர்களிடம், பல்வேறு வடிவங்கள் பற்றிய அவர்களின் அறிவை நினைவூட்டும் விதமாக, பல்வேறு வடிவங்கள் கொண்ட பலவிதமான பொருள்களை மேஜையின் மீது வைத்தேன். அத்துடன், பல்வேறு வடிவங்களின் பெயர்களை சார்ட் பேப்பரில் எழுதி, அதன் அருகில் வைத்தேன். பிறகு, மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களின் கண்களை மூடிக்கொண்டு, மேஜையின் மீது உள்ள ஏதாவது ஒரு சார்ட்டை எடுக்கச் சொன்னேன். பிறகு, அதற்குப் பொருத்தமான வடிவம் கொண்ட பொருளை மேசையில் இருந்து எடுக்கச் சொன்னேன். சரியாகக் கண்டுபிடித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினேன். இறுதியாக, மாணவர்களுக்குத் தெரியாத வடிவங்களை விளக்கினேன். மேலும் இரு பரிமாண மற்றும் முப்பரிமாண வடிவங்களின் வேறுபாடுகளை விளக்கியதன் மூலம், பல்வேறு வடிவங்கள் பற்றியும் அதன் அமைப்பு பற்றியும் அறிந்துகொண்டனர்.

எஃப்.ஏ பக்கங்கள் - முதலாம் பருவம் ஆரம்பம்...

- ஜி.கிறிஸ்டோபர்,  மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர் - 1.

படங்கள்: ஸ்ரீநிவாசன்   

‘வடிவங்கள்’ பாடத்துக்கு உரியது.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன்

சுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விரும்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.