Published:Updated:

எண்கள் மற்றும் இடமதிப்பைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு!

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எண்கள் மற்றும் இடமதிப்பைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு!
எண்கள் மற்றும் இடமதிப்பைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு!

எண்களும் இடமதிப்பும் பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி

ந்திலக்க எண்களை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, சென்ற வகுப்பில் நான்கு இலக்க எண்கள்மூலம் கற்றதை நினைவுகூரும் விதமாக, மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். விளையாட்டு நான்கு சுற்றுகளை உள்ளடக்கியதாக இருந்தது.    

எண்கள் மற்றும் இடமதிப்பைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு!

முதல் சுற்றில், கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்களைக் கண்டுபிடிக்கச் சொன்னேன். (உதாரணம், 1000, 2000, 3000, _____ , 5000)

இரண்டாவது சுற்றில், எண் பெயர் மற்றும் இடமதிப்பையும்; மூன்றாம் சுற்றில், சிறிய மற்றும் பெரிய எண்ணையும் கண்டுபிடிக்கச் சொன்னேன்.     

இறுதிச் சுற்றில் கொடுக்கப்பட்ட எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசையில் குழுவாக இணைந்து அமைக்கச் சொன்னேன்.     

எண்கள் மற்றும் இடமதிப்பைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு!

வெற்றிபெற்ற குழுவினருக்குப் பாராட்டும், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கினேன். இச்செயல்பாடுகளைப்போலவே ஐந்திலக்க எண்களையும்  கற்பிக்கும்போது மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

- ஜி. கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்-01.


படம்: தி.விஜய்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு