பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

தொழிலைக் கண்டுபிடிக்கும் நாடகப் போட்டி!

தொழிலைக் கண்டுபிடிக்கும் நாடகப் போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலைக் கண்டுபிடிக்கும் நாடகப் போட்டி!

வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும் பாடத்துக்கு உரியது.

மாணவர்களிடம், அவர்கள் வாழும் பகுதியில் என்னென்ன வேலைகள் நடைபெறுகின்றன என்பதை கவனித்து வரச் சொன்னேன். அதன்படி, அடுத்த நாள் அவர்கள் கூறிய தொழில்களைப் பட்டியலிட்டுக் கொண்டேன்.    

தொழிலைக் கண்டுபிடிக்கும் நாடகப் போட்டி!

பின்னர், மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து, தனித்தனியே அமரச் செய்தேன். ஒரு குழு மாணவர்கள் எழுந்து, பட்டியலில் உள்ள தொழில் ஒன்றைச் செய்வதுபோல நடித்துக்காட்டச் செய்தேன். அந்தத் தொழிலின் பெயரைத் தெரிந்த குழு கையை உயர்த்தி, பதிலைக் கூற வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று முறை நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தேன்.  இதில், எந்தக் குழு அதிகத் தொழில்களின் பெயர்களைக் கண்டறிந்ததோ, அதுவே வெற்றிபெற்றதாகும்.      

தொழிலைக் கண்டுபிடிக்கும் நாடகப் போட்டி!

இந்த விளையாட்டின் மூலம், ஒவ்வொரு தொழில் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்வதுடன், கூச்சமின்றி நடிக்கவும் பழகிக்கொள்வர். விளையாட்டுக்குப் பிறகு, தமிழகத்தின் பிரதான தொழில்கள் எவை என விளக்கலாம்.     

தொழிலைக் கண்டுபிடிக்கும் நாடகப் போட்டி!

- தி.முத்துமீனாள் சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்