Published:Updated:

எஸ்.எஸ்.எல்.சி தமிழ் 2ம் தாள் தேர்வில் குளறுபடி

எஸ்.எஸ்.எல்.சி தமிழ் 2ம் தாள் தேர்வில் குளறுபடி
எஸ்.எஸ்.எல்.சி தமிழ் 2ம் தாள் தேர்வில் குளறுபடி

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற தேர்வில் தமிழ் 2ஆம் தாள் வினாவில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து, அந்த கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற தமி்ழ் 2ஆம் தாளை மாணவ- மாணவிகள் படித்து அதிர்ச்சி அடைந்தனர். வினாத்தாளில் 5 மதிப்பெண்கள் கொண்ட 38வது கேள்வியில் 'கொடுக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் வங்கி படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்க' என்று கேட்கப்பட்டிருந்தது. ஆனால் மாதிரி வங்கி படிவம் இணைக்கப்படவில்லை.
 
இதனால் அந்த கேள்விக்கு விடை எழுதுவது எப்படி? என்று தெரியாமல் கடும் குழப்பத்துக்கு உள்ளானார்கள் மாணவர்கள். இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.

##~~##
இது குறித்து மாணவர்கள் தேர்வு கூட கண்காணிப்பாளர்களிடம் முறையிட்டனர். அவர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தனர். சில பள்ளிகளில், மாதிரி விண்ணப்பபடிவத்தை உருவாக்கி பூர்த்தி செய்யும்படி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அதற்குரிய கால அவகாசம் மாணவர்களுக்கு போதாது.
தவறுதலான வினாக்கள் கேட்கப்பட்டால் அதற்கு அரைகுறையாக தெரிந்த பதில் எழுதினாலும் முழு மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல் இந்த கேள்விக்கும் ஒரு வேளை வழங்கப்படலாம் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த முறையில் எழுதியுள்ளனர்.
38வது வினா குறித்து மாணவர்கள் கலக்கம் அடையவில்லை என்றும் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்தாலே முழு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.