மாணவர்களிடம் Prefix மற்றும் Suffix என்பதைப் பற்றியும், அவற்றின் மூலம் புதுச்சொல் உருவாகும் விதம் பற்றியும் உதாரணங்களுடன் விளக்கினேன். அவர்களுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்த, செயல்பாடு ஒன்றைச் செய்தேன். மரம் ஒன்றை வரைந்து, கரும்பலகையில் ஒட்டினேன். பிறகு, சில Prefix, Suffix மற்றும் Root words-ஐ சார்ட்டில் எழுதி, மரத்தின்மீது ஆங்காங்கே ஒட்டினேன். பிறகு மாணவர்களை ஒரு குழுவாக அமைத்து, மரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருத்தமான Prefix மற்றும் Root word தேர்வுசெய்து, புதுச் சொல்லை உருவாக்கச் சொன்னேன். அதைப்போல மாணவிகளிடம் பொருத்தமான Suffix மற்றும் Root word கொண்டு புதுச்சொல் கண்டுபிடிக்கச் சொன்னேன். இவ்வாறே விளையாட்டு தொடர, இறுதியில் அதிகமான புதிய சொற்களைக் கண்டுபிடித்த குழுவுக்குப் பரிசுகள் வழங்கினேன். மேலும், கரும்பலகையில் இல்லாத வேறு புதுச்சொற்களும் கண்டுபிடிக்க ஊக்குவித்து Prefix மற்றும் Suffix பற்றிய தெளிவை ஏற்படுத்தினேன்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
-ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்-1

படங்கள்: தி.விஜய்