
மாணவர்களிடம் இயக்கத்தின் வகைகளைப் பற்றி விரிவாகக் கூறினேன். அடுத்த நாள் வரும்போது, இயக்கம் செயல்படும் விதத்தை விளக்கும் விதத்தில் பொருள்கள் செய்து எடுத்து வாருங்கள் என்றேன். மாணவர்களும் தூண்டில், வில், மின்தூக்கி மாதிரி போன்றவற்றைச் செய்து வந்து அசத்திவிட்டனர். ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கூறி, அது என்ன வகையிலான இயக்கத்தில் செயல்படுகிறது என்பதையும் கூறினர். உதாரணமாக, மின்தூக்கி (லிஃப்ட்) நேர்கோட்டு இயக்கம்.
மாணவர்கள், ஒரு குழுவாக இயக்கத்தின் வகைகளை சார்ட்டில் எழுதி வந்து, வகுப்பின் மையத்தில் அவற்றைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வோர் இயக்கம் பற்றியும் விவரித்துக் கூறி, மதிப்பீட்டைப் பெற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-ந.ஸ்ரீதர், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.
படம்: சாய் தருமராஜ்