நமது நாட்டின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் இடம், பாராளுமன்றம். பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்த ஒரு கலந்துரையாடலை எங்கள் வகுப்பில் நடத்தினோம். வகுப்பையே பாராளுமன்றமாக்கி, மாணவர்களை அதன் உறுப்பினர்களாக்கினோம். பாராளுமன்றம் குறித்து மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதில் அளித்து, இந்தக் கலந்துரையாடலில் நீங்கள் கற்றுக்கொண்டதை ஏதேனும் ஒரு செயல்பாடாக மாற்றுங்கள் எனக் கூறினேன்.

மாணவர்கள் ஒன்றிணைந்து, இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையை விளக்கும் ஒரு செயல்பாட்டைச் செய்தனர். அதில், இந்தியக் குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகுத்தவர்களின் பெயர் மற்றும் பதவி வகுத்த காலம் ஆகியவற்றையும் குறிப்பிட்டிருந்தனர். மற்ற வகுப்பு மாணவர்களை அழைத்து வந்து பார்வையிடச் செய்தேன். அப்போது, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்தச் செயல்பாட்டை உருவாக்கிய மாணவர்களே பதில் அளித்தனர். மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- லதா, கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி, கடலூர்.
படம்: தேவராஜன்