ARTICLE பாடப் பகுதியை நடத்தி முடித்ததும் பின்வரும் செயல்பாட்டைச் செய்ய வேண்டும்.

தேவையான பொருள்கள்: மின் அட்டைகள், வண்ணப் பேனாக்கள், காகிதத் தொப்பிகள், சுண்ணக்கட்டிகள்.
செய்முறை: கரும்பலகையில் ARTICLE என்று எழுதி, அதன் கீழே அதன் வகைகளான A, AN, THE என்று போதிய இடம்விட்டு பக்கவாட்டில் எழுதிக்கொள்ள வேண்டும்.
*மூன்று காகிதத் தொப்பிகளில் ARTICLE-ன் வகைகளைத் தனித்தனியாக எழுதி ஒட்ட வேண்டும்.
*NOUNS: பெயர்ச்சொற்கள் எழுதப்பட்ட மின்அட்டைகளின் தொகுப்பை மேசையின் மீது வைக்க வேண்டும். (உதாரணமாக-SUN, ANT, APPLE, EARTH, TREE, TOY)
*ARTICLE-ன் வகைகள் எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்த மாணவர்கள், கரும்பலகையில் எழுதப்பட்ட பெயர்களுக்கு நேராக நிற்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

*NOUNS: பெயர்ச்சொற்கள் எழுதப்பட்ட மின்அட்டைகளின் தொகுப்பிலிருந்து ஒரு மின் அட்டையை எடுக்கும் மாணவர், எடுத்துக்காட்டாக – SUN என்ற அட்டையை எடுத்தால், அதை THE என்ற தொப்பி அணிந்தவர் கையில் வைக்க வேண்டும்.
*ANT என்ற அட்டையை எடுத்தவர், அதை AN என்ற தொப்பியை அணிந்தவர் கையில் கொடுக்க வேண்டும். TOY என்ற அட்டையை எடுத்தவர், A என்ற தொப்பியை அணிந்தவர் கையில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறாக, ARTICLE பகுதியை மாணவர்கள் சுலபமாக மனதில் பதியவைத்துக் கொள்ளலாம்.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.