Published:Updated:

தொடர் மின்வெட்டு: மாணவர்களுக்கு 15 மார்க் போனஸாக வழங்க கோரிக்கை!

தொடர் மின்வெட்டு: மாணவர்களுக்கு 15 மார்க் போனஸாக வழங்க கோரிக்கை!
தொடர் மின்வெட்டு: மாணவர்களுக்கு 15 மார்க் போனஸாக வழங்க கோரிக்கை!
தொடர் மின்வெட்டு: மாணவர்களுக்கு 15 மார்க் போனஸாக வழங்க கோரிக்கை!

ஈரோடு: 'மின்வெட்டால் பாதிக்கப்பட்டு படிக்க முடியாமல் அவதிப்படும் 10 ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்க ளுக்கு 15 மதிப்பெண்ணை போனஸாக கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருக்கிறது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி!

சென்னையை தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் பதினாறு மணி நேர மின்வெட்டு படுத்தி எடுக்கிறது. இரவு நேரங்க ளிலும் பவர் கட் போட்டுத் தாக்குவதால் பரீட்சைக்கு படிக்கும் மாணவர்கள் படாதபாடுபடுகிறார்கள்.

இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில், ''அறிவிக்கப்படாத மின்வெட்டால் பள்ளிமாணவர்கள் பரீட்சைக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மன

##~~##
உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 10 ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு 15 மதிப்பெண்ணை போனஸாக கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
போனஸ் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாமா?