‘சுதந்திர இந்தியா’ என்கிற பாடம், மாணவர்கள், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக எத்தகைய போராட்டங்களையும் இழப்புகளையும் சந்தித்தது என்பது பற்றிய அறிவைப் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளது.

எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் வாயிலாக, இப்பாடத்தை மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்தபோது மாணவர்களது கற்றல் அடைவை அளவீடு செய்யும் பொருட்டு இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட நிகழ்வு, குழுச் செயல்பாடாக வளரறி மதிப்பீட்டுக்கு (அ) செயல்படுத்தப்பட்டது.

இக்குழுச் செயல்பாடு ஆசிரியராகிய என்னுடைய தலையீடு இன்றி மாணவர்களே சுயமாய் நிகழ்த்திக்காட்டிட அறிவுறுத்தினேன். இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டம் எந்தச் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும், ஆலன் ஆக்டேவியன் ஹீயூம் எவ்வாறு பேசியிருப்பார்? இந்திய தேசியத் தலைவர்கள் எவ்வாறு தங்களுக்குள் பேசியிருப்பார்கள்? அவர்கள் உடை எப்படி இருக்கும்? அவர்களது தொப்பி எவ்வாறு இருக்கும்? அதை எவ்வாறு செய்வது என்ற விவாதங்கள் யூகத்தின் அடிப்படையில் அவர்களே விவாதித்தனர். இதற்கான விடைகளை வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கலந்துரையாடி நாடகத்தை நிகழ்த்திக்காட்டிட, அறிவுறுத்தினேன்.

மறுநாள் காலை, மதிய உணவு இடைவேளைகளில் மாணவர்கள் சிறு ஒத்திகை பார்த்துக்கொண்டனர். பின், மாலை வேளையில் நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர். அற்புதமாக இருந்தது.

- விஜயராஜா, அரசு ஆதி திராவிட நல ஆரம்பப் பள்ளி, அய்யனார்புரம், தேனி.

படம்: வீ.சக்தி அருணகிரி