இப்பாடத்தில், விசையின் வகையில் தொடர் விசைகளையும், பாஸ்கல் விதியினையும் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் செய்முறையுடன் பயிற்றுவிக்கப்பட்டது.

காந்தவிசை பற்றி அறிந்துகொள்ள இரண்டு சட்ட காந்தங்களைக்கொண்டு செய்முறை விளக்கம் கொடுத்து புல்லட் ரயில் செயல்படும் விதத்தை காந்த விசைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டது.

புவியீர்ப்பு விசை பற்றி அறிந்துகொள்ள சாக்பீஸ், போன்ற சிறு சிறு பொருள்களை மேலிருந்து கீழே போடப்பட்டு, ஈர்ப்பு விசை பற்றி விளக்கிக் கூறப்பட்டது.

நிலைமின்னியல் விசைக்கு ‘சீப்’பினைக் கொண்டு விளக்கப்பட்டது. அதாவது மாணவர்களின் தலையில் சீப்பை உரசி, அது மின்னேற்றம் பெற்று சிறு காகிதத் துண்டுகளை ஈர்ப்பதைக் காட்டி விளக்கப்பட்டது.

இம்மூன்று விசைகளும் பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடாமலே நிகழ்வதனால், இவை தொடா விசைகள் என மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

பாஸ்கல் விதியை விளக்க நீர் நிரம்பிய வாட்டர் பாக்கெட் மற்றும் ஒரு ரப்பர் பந்தினைச் சுற்றித் துளைகள் இட்டு, பாக்கெட் மற்றும் பந்தினை அழுத்தும்போது தண்ணீர், அனைத்துத்துளைகளிலிருந்தும் சமமான அளவில் வெளியேறுகிறது என்பதைச் செய்துகாட்டி விளக்கம் அளிக்கப்பட்டது.

- மு.சங்கர், அரசு உயர்நிலைப் பள்ளி, பாலவாடி, தருமபுரி.

படம்: என்.கண்பத்