“பூமிக்குள் என்னெல்லாம் இருக்கின்றன?” என்று மாணவர்களிடம் கேட்டபோது, தண்ணீர் தொடங்கி பலவற்றைப் பட்டியலிட்டார்கள். ஒரு மாணவன் ‘கனிமங்கள்’ என்றான். அவனுக்கு எல்லோரையும் கைத் தட்டச் சொல்லி, கனிமம் பற்றிய பாடத்தைத் தொடங்கினேன்.

சுரங்கங்களில் கிடைக்கும் கனிம வளங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை: 1. உலோகக் கனிமம். 2. எரிபொருள் கனிமம், 3. உலோகமற்ற கனிமம். இந்த மூன்றுக்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்கள் தெளிவாகக் கற்றுக்கொள்ள செயல்பாடு ஒன்றைச் செய்தேன்.

கனிம வகைகளின் பெயர்களில் மாணவர்களை மூன்று குழுக்களாக பிரித்துக்கொண்டேன். மூன்று வகையான கனிம வகைகளில் அடங்கும் பொருள்களின் படங்களைச் சேகரித்து தனித்தனி சார்ட்டில் ஒட்டிக்கொண்டேன். பின், மூன்று வகை கனிமங்களின் பெயர்களை, சற்று தனித்தனி சார்ட்டில் எழுதி, மூன்று குழுக்களிடம் கொடுத்தேன்.

இப்போது ‘உலோகக் கனிமம்’ குழு தங்கள் வகையான கனிமங்கள் பொருள் ஒட்டப்பட்ட சார்ட்டுகளைத் தேடி எடுக்க வேண்டும். அதேபோல, எரிபொருள் மற்றும் உலோகமற்ற குழு மாணவர்களும் தங்களுக்கான சார்ட்டுகளை தேடி எடுக்க வேண்டும். எந்தக் குழு சரியாகவும் விரைவாகவும் தங்களுக்கான சார்ட்டைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களே வெற்றிப் பெற்றவர்கள். இந்தச் செயல்பாடு முடிந்ததும் மூன்று குழுக்களையும் ஒரே இடத்தில் தனித்தனியாக நிற்கச் செய்தேன். பின் ஒவ்வொரு கனிம வகைக்கான குறியீடு எழுதிய நெற்றிப் பட்டியை அணிவித்தேன். பின், உலகில் எந்தப் பகுதியில் என்ன வகையான கனிமங்கள் கிடைக்கின்றன என்பது பற்றிய உரையாடலையும் நடத்தினேன்.

மாணவர்கள் தங்கள் வகை கனிமங்களான பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தைக் கொண்டு மதிப்பீடு அளிக்கலாம்.

- ஊ.கலைவாணி, தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கெரகோடஅள்ளி, தருமபுரி.

படம்: என்.கண்பத்