Published:Updated:

எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் சேதம்: மாணவர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை!

எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் சேதம்: மாணவர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை!
எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் சேதம்: மாணவர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை!

சென்னை: விருத்தாசலத்தில் 10ஆம் வகுப்பு வினாத்தாள் ரயிலில் இருந்து விழுந்து சேதம் அடைந்ததன் காரணமாக மாணவர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கூறுகையில், "கடந்த 28ஆம் தேதி 10ஆம் வகுப்பு தமிழ் 2ஆம் தாள் தேர்வு நடந்தது. அன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனைத்து விடைத்தாள்களும் எந்த ஊருக்கு கொண்டு செல்லவேண்டுமோ அதற்காக கல்வித்துறையின் அதிகாரிகள் பாதுகாப்பாக கட்டி அவற்றில் ஒரு குறிப்பிட்ட பார்சல்களை விருத்தாசலம் ரயில்வே தபால் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கல்வித்துறையின் அதிகாரிகள் அவர்கள் பணியை சரிவர செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ரயில்வே தபால் அலுவலகம் மூலம் அவற்றை திருச்சிக்கு கொண்டு செல்லும்போது விடைத்தாள்கள் அடங்கிய பண்டல் திருச்சி போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது.

விருத்தாசலம், 10ஆம் வகுப்பு வினாத்தாள், மாணவர்கள், தமிழக கல்வித்துறைஅது எந்த அளவுக்கு உண்மை? நடந்தது என்ன? என்ற விவரத்தை ரயில்வே தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்த பின்னர்தான் உண்மை நிலை தெரியும்" என்று சபீதா கூறினார்.

தேர்வுத்தாள் அதிக எண்ணிக்கையில் சேதம் ஏற்பட்டால் எந்த மாணவர்களின் விடைத்தாள் என்று தேர்வுத்துறையால் அறியப்பட்டு அந்த மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.

அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விருத்தாச்சலம் ரயில்வே நிலைய அதிகாரியிடம் இருந்து, கடலூர் முதன்மை கல்வி அலுவலரால் சரிபார்த்துப் பெற்றுக்கொண்டுள்ள பத்தாம் வகுப்பு மொழிப்பாடம், இரண்டாம் தாள் விடைத்தாள்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பெறப்பட்டவுடன் அவைகள் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதில் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை" என்று வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.