பிரீமியம் ஸ்டோரி
இணைச்சொற்கள்!

முதலில், மாணவர்களிடம் இணைச்சொற்கள் பற்றி தெளிவாக விளக்கிக் கூறினேன். பிறகு, சார்ட்டைக் கொண்டு கரும்பலகையில் மூன்று செடிகளை உருவாக்கினேன். அவற்றில் நேரிணை, எதிரிணை மற்றும் செறியிணை என்று எழுதினேன். பிறகு, ‘ட்ரே’ ஒன்றில், பல வகையான இணைச்சொற்களை (நேரிணை, எதிரிணை, செறியிணை), சார்ட்டில் இலை வடிவில் உருவாக்கி எழுதி வைத்துக்கொண்டேன். மாணவர்களை பல குழுக்களாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒரு மாணவரை அழைத்து, ட்ரேயில் உள்ள ஏதாவது ஒரு இணைச்சொல் ஒன்றை எடுத்து, கரும்பலகையில் சரியான பிரிவில் பொருத்தச் சொன்னேன். பிறகு, தங்கள் குழுவைச் சேர்ந்தவர் கண்டறிந்த இணைச்சொல்லுக்கு ஏற்ற வாக்கியம் ஒன்றைக் குழுவிடம் உருவாக்கச் சொல்லி மதிப்பீடு வழங்கினேன். வெற்றிபெற்ற குழுவுக்குப் பரிசுகள் வழங்கினேன். இந்தச் செயல்பாட்டைத் தொடர்ந்து செய்ததன் மூலம் இணைச்சொற்கள் பற்றி தெளிவாக அறிந்துகொண்டார்கள்.

இணைச்சொற்கள்!

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்-1

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு