Published:Updated:

எண்ணெய்க் கடை!

விகடன் விமர்சனக்குழு

கொள்ளளவு பாடத்துக்கு உரியது.

பிரீமியம் ஸ்டோரி
எண்ணெய்க் கடை!
எண்ணெய்க் கடை!

கொள்ளளவு பாடத்தை நடத்தும்போது, பல்வேறு அளவுகளை அடையாளம் காணச் செய்ய, மாணவர்களிடம் உங்கள் அம்மா எவ்வளவு பால் வாங்குவார் என்று கேட்க, அரை லிட்டர், கால் லிட்டர் எனப் பதில் வந்தது. அதேபோல, எண்ணெய் எவ்வளவு வாங்குவார்கள் எனக் கேட்டால், இவை எல்லாம் கொள்ளளவு எனக் கூறிவிட்டு, மறுநாள் பல்வேறு வகையான அளவுகளின் மாதிரிகளைச் செய்துவரச் செய்தேன்.

கடைக்காரராக ஒரு மாணவனையும், வாடிக்கையாளர்களாக பிற மாணவர்களையும் நிற்க வைத்து, எண்ணெய் வகைகளை 50மி.லி, 100மி.லி, 1லிட்டர் என வாங்க வைத்தல். மில்லி லிட்டர் என்பதை விளக்க டானிக் பாட்டிலில் உள்ள மூடியில் உள்ள மில்லி அளவைக் காட்டினேன். இதன் மூலம், கொள்ளளவு மற்றும் அதன் அளவுகளைப் பற்றி அறிந்துகொண்டனர்.

எண்ணெய்க் கடை!

- ம.ஜெயமேரி, ஊ.ஓ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி.

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு