Published:Updated:

வீச்சு கண்டறிதல்!

விகடன் விமர்சனக்குழு

வீச்சு கண்டறிதல்!

பிரீமியம் ஸ்டோரி

விவரங்களைக் கையாளுதல் என்ற தலைப்பின் அடிப்படையில் பாடம் நடத்தினேன். அது பற்றிய தகவல்களை மாணவர்களிடம் சேகரித்து வரச் சொன்னேன்.  எம் மாணவர்கள், கல்வியறிவுபெற்ற மற்றும் பெறாதவர்களின் அடிப்படையில் தங்கள் கிராமப்புறங்களிலிருந்து சேகரித்துவந்து தொகுத்துக் கொடுக்கப்பட்ட விவரங்களாவன.

கல்வியறிவு அற்றவர்களின் எண்ணிக்கை 78 பேர்.

வீச்சு கண்டறிதல்!

தொடக்கக் கல்வி பயின்றவர்கள் 84 பேர்.

இடைநிலைக் கல்வி பயின்றவர்கள் 110 பேர்.

மேல்நிலைக் கல்வி பயின்றவர்கள் 98 பேர்.

பட்டப்படிப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 250 பேர்.

வீச்சு: ‘விவரங்களைக் கையாளுதல்’ என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட தகவல்களைக்கொண்டு, மாணவர்கள் அவற்றின் வீச்சைக் கண்டறிந்து கொடுத்தனர்.

வீச்சு கண்டறிதல்!

வீச்சு : பெரிய மதிப்பு - சிறிய மதிப்பு : 250-78

வீச்சு : 172

- டி.ராஜா, ஸ்ரீகலைமகள் மெட்ரிக் மே.நி.பள்ளி, புதுவயல், காரைக்குடி.

படம்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு