தேவையான பொருள்கள்: உபயோகமற்ற பிளாஸ்டிக் பாட்டில், பலூன்-1, செல்லோடேப், தடிமனான ஊசி அல்லது ஆணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, ஒரு அடி நீளமுள்ள மெல்லிய பிளாஸ்டிக்குழாய், காலியான ரீஃபிள், வண்ணத்தண்ணீர், வாசலைன்.

செய்முறை: ஊசி அல்லது ஆணியை எரியும் மெழுகுவத்தியில் சூடுபடுத்தி, பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியிலும், பக்கவாட்டில் கழுத்துப் பகுதியிலும் துளைபோட வேண்டும்.

மூடியில் உள்ள துளையின் வழியே, ஒரு அடி நீளமுள்ள பிளாஸ்டிக் குழாயை பாட்டிலின் அடிப்பகுதியைத் தொடும் அளவுக்குச் செருக வேண்டும். இப்பகுதியின் வழியே காற்று வெளியே செல்லாதவாறு வாசலைன் தடவ வேண்டும்.

கழுத்துப் பகுதியின் துளை வழியே, காலியான ரீஃபிளைச் செருக வேண்டும். இப்பகுதியின் வழியே காற்று வெளியே செல்லாதவாறு வாசலைன் தடவ வேண்டும்.

பாட்டிலினுள் முக்கால் பாகம் தண்ணீர் நிரப்பி (ரீஃபிள் செருகிய மட்டத்துக்குக் கீழ் வரை), பாட்டிலை இறுக்கமாக மூட வேண்டும்.

காலியான ரீஃபிளில் வாயைவைத்து ஊதினால், மூடியில் உள்ள பிளாஸ்டிக் குழாய் வழியே தண்ணீர் வெளியேறும்.

எவ்வளவு வேகமாக ஊதுகிறோமோ, அவ்வளவு வேகமாக தண்ணீர் வெளியேறும்.

வாயைவைத்து ஊதுவதற்குப் பதிலாக பலூனில் காற்றை நிரப்பி, அதனை ரீஃபிளில் செருகிவிட்டாலும் தண்ணீர் வெளியேறும்.

விளக்கம்: பாட்டிலினுள் தண்ணீருக்கு மேல் உள்ள பகுதியில் காற்றழுத்தம் குறைவாகவும் பாட்டிலின் வெளியே காற்றழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.

ரீஃபிளில் வாயைவைத்து காற்றை ஊதும்போது, பாட்டிலின் உள்ளே காற்றழுத்தம் வெளியே உள்ளதைவிட அதிகரிக்கும்.

காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்குச் செல்லும் என்பது அறிவியல் விதி.

- குணசேகர், ஊ,ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.