Published:Updated:

அக்ரி படித்தால் ஐ.ஏ.எஸ். எளிதா?! விவசாயப் படிப்புகளுக்கு ஏன் திடீர் மவுசு?

இறையன்பு, சைலேந்திர பாபு போன்ற சில பேர் அக்ரி படிச்சு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆனதையே எவ்வளவு காலம் சொல்ல முடியும். நான் ஒரு சம்பவம் சொல்றேன்.

அக்ரி படித்தால் ஐ.ஏ.எஸ். எளிதா?! விவசாயப் படிப்புகளுக்கு ஏன் திடீர் மவுசு?
அக்ரி படித்தால் ஐ.ஏ.எஸ். எளிதா?! விவசாயப் படிப்புகளுக்கு ஏன் திடீர் மவுசு?

ஒரு வருடத்தின் முக்கிய நாள்களில் ஒன்றாக மாறிவிட்டது கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு படலம். மாணவர்களைவிடப் பெற்றோர்களின் டென்ஷனுக்கு அளவே இல்லை. பக்கத்து வீட்டுக்காரர் முதல் பெயர் தெரியா உறவுகள் வரை "ஆல்-இன்-ஆல்-அட்வைஸ்" ராஜாவாக மாறி இருப்பார்கள். என்ன படிக்கலாம், எங்குப் படிக்கலாம் எனப் பல குழப்பங்களையும் தாண்டி கல்லூரி என்னும் ரேஸுக்கு தயாராக இருக்கும் மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துகள்.

இன்ஜினியரிங் படிச்சா வேலை கிடைக்காது என்னும் மீம்கள், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிச்சா ஜாலியா இருக்கலாம், மருத்துவ படிப்புகளுக்கு நீட் வைத்த செக், விவசாயம் படிச்சா ஈஸியா ஐ.ஏ.எஸ் ஆகிடலாம்ன்னு பல கருத்துகள் சுற்றித் திரிகின்றன. ஒரு காலத்துல விவசாயம் படிக்க ஆளே இல்ல. இப்ப அதுக்கு மாறா 15 தமிழ்நாடு வேளாண் கல்லூரி, 26 தனியார் கல்லூரி, அண்ணாமலை பல்கலைகழகம் வேளாண் புலம் மற்றும் புதுசா 7 நிகர்நிலை பல்கலைக்கழகம் என விவசாயக் கல்லூரிகளோட லிஸ்ட் கடந்த 5 வருஷத்துல ஏறிடுச்சு.

இத பத்தி கல்வியாளர் திரு.ஜெய பிரகாஸ் காந்தி என்ன சொல்றாருன்னு கேப்போம்.

1. அக்ரி படிச்சா ஈஸியா அரசு வேலை கிடைக்கும் னு சொல்றாங்களே!!! அது உண்மையா.

7 வருஷத்துக்கு அப்பறம் இப்ப தான் ஏ.ஓ தேர்வு நடத்தனாங்க. 300 போஸ்ட்டுக்கு 75000 பேர் விண்ணப்பிச்சாங்க. நமக்கு தேவையைவிட அதிகமான பட்டதாரிகள் வெளிய வரும் போது வேலை வாய்ப்பு இல்லாம போகும்.

2. முக்கியமா தனியார் அக்ரி கல்லூரிகள் பெருகிடுச்சு. அதுக்கு காரணம் என்னவா இருக்கும்??

பணத்தை எதுலயாவது இன்வஸ்ட் பண்ணனும்னு பாக்கறவங்களுக்கு காலேஜ் நல்ல வருமானத்த தரும். இப்ப இன்ஜினியரிங் காலேஜ்லாம் மூடிட்டு வரதால அடுத்து மக்களோட அலை விவசாயம் பக்கம் திரும்பியிருக்கு. மக்கள் கிட்ட தேவை இருக்கும் போதுதான் தனியார் காலேஜ் அதிகம் ஆகும். யாரும் சேவை செய்யனும்னு இங்க வரதில்ல.இதுவும் ஒரு பிஸ்னஸ்.

3. மக்களின் இந்த மாற்றத்தை எப்படி பாக்கறீங்க?

பெற்றோர்களுக்கு தன் பசங்களுக்கு ஈஸியா வேலை கிடைக்குமா... அதிக சம்பளம் எதுல வரும்ன்னு தான் யோசிக்கிறாங்க.. இப்பலாம் எல்லோருக்கும் தேவை அதிகமாயிடுச்சு. எல்லா தரப்பு மக்களுக்கும் சம்பளம் பத்தமாட்டேங்குது. இப்படி இருக்க எல்லாரும் ஷார்ட் டேர்ம்ல யோசிக்கறாங்க. லாங்க் டேர்ம்ல யோசிக்கறதில்ல.

4. மாணவ/மாணவிகள் விரும்பிதான் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கறாங்களா??

ஒரு +2 மாணவணுக்கு எல்லா பாடங்களை பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் அவர்களிடம் சொல்லும் வார்த்தைகள் "10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பேஷன் ஓவர் ரூல்ஸ் சேலரி(Passion over rules salary)கல்லூரி இறுதி ஆண்டில் சேலரி ஓவர் ரூல்ஸ் பேஷன் (salary over rules passion).

5. அக்ரி படிச்சா ஈஸியா ஐ.ஏ.எஸ் ஆகிடலாம்னு ரொம்ப காலமா ஒரு பேச்சிருக்கே...

கடந்த 4-5 வருஷமா அக்ரி படிச்ச ஐ.ஏ.எஸ் எத்தன பேர் இருக்காங்க? இறையன்பு, சைலேந்திர பாபு போன்ற சில பேர் அக்ரி படிச்சு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆனதையே எவ்வளவு காலம் சொல்ல முடியும். நான் ஒரு சம்பவம் சொல்றேன். ஒரு நிகழ்சிக்கு ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டர் நடத்துற பொண்ணு வந்திருந்தாங்க. அவங்களும் அக்ரி தான் படிச்சிருக்காங்க. இந்தப் படிப்புக்கு ஈஸியா ஐ.ஏ.எஸ் பாஸ் ஆகிடலாம்னு சொன்னாங்க. அவங்க கிட்ட உங்க வயசு என்னனு கேட்டேன். 27 னு சொன்னாங்க. எவ்வளவு வருஷமா கோச்சிங் குடுக்குறீங்கனு கேட்டேன்.4 வருஷம் னு சொன்னாங்க. அப்ப நீங்க ஏன் ஐ.ஏ.எஸ் ஆகலனு கேட்டதும் பதிலே இல்ல. ஆர்வம் இருக்க யார் வேனா ஐ.ஏ.எஸ் ஆகலாம்.அதுக்கும் அக்ரிக்கும் சம்பந்தமே இல்ல.

6. அக்ரிக்கு அதிகமா மாணவிகளே தேர்வாகறாங்க...இந்தத் துறையில் பெண்களுக்கான ஸ்கோப் எப்படி இருக்கு?

 மாணவிகள் அதிகமா டி.என்.பி.சி அல்லது பேங்க் போட்டித் தேர்வுக்குத்தான் தயார் ஆகுறாங்க. ஆண்,பெண் என்ற வித்தியாசம் இல்ல. திறமைக்குத் தான் இங்க வேலை.

   மாணவ/மாணவிகளுக்கு ஒரே ஒரு அட்வைஸ்தான். வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதை விட தங்களை அப்டேட்(Update) ஆக வைத்துக்கொள்ள வேண்டும். நாளை நல்ல வேலை வேண்டும் என்றால் இன்றே அதற்காக உழைக்க வேண்டும்.